logo
home மருத்துவம் ஜூன் 26, 2016
மூல நோயால் அவதிப்படுகிறீர்களா? மூலம் குறைய எளிமையான பல்வேறு வைத்திய முறைகள்
article image

நிறம்

கைப்பிடி அளவு முடக்கற்றான் இலைகளை எடுத்து வதக்கி நீரிலிட்டு வேக வைத்து வடிகட்டி அந்த நீரை அரை கப் வீதம் இருவேளை குடித்தால் மூலம் குறையும்.

ஆரஞ்சு, எலுமிச்சை, கேரட், வெள்ளரி, மாதுளை, திராட்சை, நெல்லி, கொத்தமல்லி, முளைத்த வெந்தயம், வெந்தயம்,ஆவாரம்பூ, அத்திப்பழம், பேரிக்காய், இளநீர், அருகம்புல், வெங்காயம் இவைகளை சாப்பிட மூலம் குறையும்.

விளா இலைகளை உலர்த்தி பொடியாக்கி, அந்த பொடியை தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்.

அத்திப்பிஞ்சை, பூண்டு, மிளகு, மஞ்சள் பருப்புடன் கூட்டாகச் செய்து சாப்பிடமூலம் குறையும்.

மணத்தக்காளி இலைகளோடு பாசிப்பருப்புச் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் குறையும்.

அறுகம்புல் அரைத்துப் பாலில் கலந்து பருகி வர வேண்டும்

நாயுருவி தளிர் இலைகளோடு மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்து மூலத்தில் வைத்துக் கட்டி வந்தால் மூல நோய் குறையும்.

பொடுதலை இலைகளை எடுத்து அதனுடன் உளுந்து சேர்த்து நன்கு அரைத்து சாதத்தில் சேர்த்து,நெய் ஊற்றி சாப்பிட்டு வந்தால் மூல நோய்கள் குறையும்.

பண்ணைக் கீரைச் சாறில் நாவல் பருப்பை அரைத்துச் சாப்பிட மூலம் குறையும்.

எள் விழுதுடன், ஆட்டுப்பாலையும், சர்க்கரை சேர்த்து கலந்து குடித்து வர மூலம் குறையும்

ஆலம் பழத்தை பொடி செய்து சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்.

வெங்காயப்பூக்களையும் வெங்காயத்தையும் தயிரில் ஊறப்போட்டு சாப்பிட மூல எரிச்சல், குறையும்.

சுக்காங்கீரைச் சாறில் கடுக்காய் தோலை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் மூல நோய்கள் குறையும்.

சுக்காங்கீரை, துத்திக்கீரை ஆகியவற்றின் சாறை எடுத்துப் பாலில் கலந்து சாப்பிட மூலம் குறையும்.

பசும் பாலில் அவித்த கருணைக் கிழங்குடன் உப்பு, நெய் சேர்த்து உணவு சாப்பிடுவதற்கு முன்பாகச் சாப்பிட மூலநோய் குறையும்.

நாய்த்துளசி இலைகளை அரைத்து, சுண்டைக்காயளவு உருட்டி ஒரு கப் தயிரில் கலந்து அருந்தினால் மூலச்சூடு குறையும்.

நறுக்கிய வெங்காயம், இலவம் பிசின்தூள், கற்கண்டு தூள் ஆகியவற்றை பாலுடன் சாப்பிட மூலக்கோளாறு குறையும்.

துத்திக் கீரையை நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து உணவுக்குப்பின் சாப்பிட மூலநோய் பாதிப்புகள் குறையும்.

கைப்பிடி அளவு துளசி இலை மற்றும் குப்பைமேனி இலைகளை எடுத்து உலர வைத்துத் தூளாக்கி, வெந்நீரில் கலந்து அடிக்கடி குடித்து வந்தால் மூலக்கோளாறுகள் குறையும்.

இலந்தை தளிர் இலைகளை எடுத்து நன்கு அரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் மூல நோய் குறையும்.

கரும்பு சாற்றில் அத்திப்பழத்தை வேக வைத்து பருக மூலநோய் குறையும்.

வெங்காயத்தையும், வெந்தயத்தையும் அரைத்து 8 முறை தண்ணீர் விட்டுக் கழுவி அந்த தண்ணீரை எடுத்து அதனுடன் சோற்று கற்றாழைச்சாறு மற்றும் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து நன்றாக காய்ச்சி தண்ணீர் வற்றி புகைந்து போன பின் எண்ணெயை வடித்து வைத்து கொள்ளவும். இந்த வெங்காய எண்ணெயை கொடுத்து வந்தால் தேக எரிச்சல், மூலச்சூடு ஆகியவை குறையும்.

நாயுருவி இலை,நல்லெண்ணெய் கலந்து குடித்தால் மூலம் குறையும்.

வேப்பம் கொட்டையின் பருப்பை எடுத்து சுத்தம் செய்து அதை மைபோல நன்றாக அரைத்து சிறிதளவு சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்.

கவிழ்தும்பைச் சாறு, பசும் பால் சேர்த்து கொடுக்க மூலக் கடுப்பு குறையும்

வில்வ காய், இஞ்சி, சோம்பு சேர்த்து குடிநீர் செய்து குடிக்க மூலம் குறையும்

கவிழ்தும்பை வேர், நத்தைச் சூரி வேர் இவைகளை அரைத்து வெண்ணெயில் கொடுக்க மூல நோய் குறையும்.

ஒரு ஸ்பூன் கொத்தமல்லி இலைச்சாறு எடுத்து அதனுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்.

ஒரு கப் வெது வெதுப்பான பாலை எடுத்து அதில் வாழைப்பழத்தை பிசைந்து போட்டு சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்.

பசும்பால், சிற்றாமணக்கெண்ணெய் இரண்டையும் கலந்து வெந்தயம், வெங்காயம் நாகபலா மூலிகை, சேர்த்து அரைத்து காய்ச்சி வடித்து சாப்பிட்டு வர மூலச்சூடு குறையும்.

ஒரு ஸ்பூன் கொத்தமல்லி இலைச்சாறு எடுத்து அதனுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்.

நாயுருவி விதை பொடி, துத்தி கீரையுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மூலநோய் குறையும்.

வெங்காயத்தாள், பொடுதலை, வெந்தயம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குறையும்.

5 அத்தி பழங்களை எடுத்து தண்ணீரில் இரவில் ஊற வைத்து காலையில் அதை எடுத்து சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்.

இலவம் பிஞ்சு, சீரகம் இரண்டையும் பாலில் அரைத்து பாலில் சாப்பிட மூலகனம் குறையும்.

மலை வேம்பு விதையின் பருப்பை எடுத்து அதனுடன் மிளகு வைத்து நன்றாக இடித்து சலித்து தண்ணீர் கலந்து நன்கு பிசைந்து கற்கண்டுகலந்து சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்.

வால் மிளகு சூரணத்தை பால் கலந்து சாப்பிட மூலச்சூடு குறையும்.

மலை வேம்பு விதையின் பருப்பை எடுத்து அதனுடன் மிளகு வைத்து நன்றாக இடித்து சலித்து தண்ணீர் கலந்து நன்கு பிசைந்து கற்கண்டுகலந்து சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்.

வேப்ப விதையை வெல்லம் சேர்த்து அரைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குறையும்.

முள்ளங்கியை அரைத்து 1 டம்ளர் அளவு சாறு எடுத்து 2 கிராம் நெய் கலந்து நன்றாக கலக்கி காலை, மாலை குடித்து வந்தால் மூலம் குறையும்.

நீளமான ஒரு முள்ளங்கியை எடுத்து அதை துண்டுகளாக வெட்டி அதில் சிறிது உப்பு சேர்த்து இரவு முழுவதும் பனி அதன் மேல் விழும் படி வைத்து பிறகு காலையில் எடுத்து முள்ளங்கியை சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்

1 தேக்கரண்டி கொத்தமல்லி இலைச்சாறுடன் அரை தேக்கரண்டி தேன் கலந்து மூன்று வேளை குடித்து வந்தால் மூலம் குறையும்.

மூல நோய் இருப்பவர்கள் ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி பாதியை இரவு முழுவதும் பனியில் ஊற வைத்து காலையில் அதை எடுத்து சாறு பிழிந்து குடித்து வந்தால் மிகவும் சிறந்தது.

மூலத்தில் நெளியும் பூச்சிகள் குறைய
கஞ்சாங்கோரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் ஆசனவாயில் போட்டால் மூலத்தில் நெளியும் பூச்சிகள் குறையும்.

மூலத்தில் இரத்தம் வருவது குறைய
இரத்தம் வருவது குறைய மாதுளம் பழத்தோலை நன்றாக சுட்டு அதை பஞ்சு போல தட்டி தூள் செய்து தண்ணீர் விட்டு ஊற வைத்து அந்த தண்ணீரை கொண்டு கழுவி வந்தால் மூலத்தில் இரத்தம் வருவது குறையும்.

மூலச்சூடு குறைய
நாவல் விதையை பாலில் அரைத்து சாப்பிட மூலச்சூடு குறையும்.

மூலம் மற்றும் சீதபேதி குறைய
ஆகாயத்தாமரை இலைகளை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து 5 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலம் மற்றும் சீதபேதி குறையும்.


குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 
தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம் 
                     

www. aanmeegamalar.com 


எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com