logo
home மருத்துவம் செப்டம்பர் 02, 2016
சாப்பிடுவதிலும் 12 வகையான முறைகளை சொல்லிக் கொடுத்த முன்னோர்கள்
article image

நிறம்

நமது முன்னோர்கள் கடைபிடித்த பல்வேறு பழக்கவழக்கங்களில் உணவு சாப்பிடும் முறையை அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய ஒன்று. உணவு உண்ண வேண்டிய அவசியம் இல்லையென்றால் இந்த உலகில் யாருக்கும் எந்த வேலையும் இல்லை. 
வயிற்று பசிக்காக உழைக்கக் கற்றுக் கொண்ட மனிதன் நாளடைவில் சொத்து சுகம் போன்றவற்றிற்கு ஆசைப்பட்டு தனது வாழ்நாளை பணம் சம்பாதிப்பதில் மட்டுமே கழிக்கின்றான். ஒரு ஜான் வயிற்றை கட்டிக்காக்கவில்லையென்றால் சம்பாதித்ததை அனுபவிக்கமுடியாமல் போய்விடும் என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் வயிற்றுக்குக் கொடுக்கப்படும் உணவுகளுக்கு சில வரைமுறைகளை வெகு அழகாக கூறியுள்ளனர்.
1. அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.
2. உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.
3. உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.
4. குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.
5. தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.
6. துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.
7. நக்கல் - நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல்.
8. நுங்கல் - முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.
9. பருகல் - நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.
10. மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.
11. மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
12. விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.

முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ),
பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ),
பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ),
பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..
முக்கியமாக இந்த உணவுமுறைகளை வாழையிலையில் வைத்து சாப்பிட வேண்டும் என்பதை எழுதப்படாத விதியாக நமது முன்னோர்கள் கடைபிடித்துள்ளனர். 

குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 
தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம் 
                                            
www. aanmeegamalar.com 
எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com