logo
home மருத்துவம் ஜூலை 29, 2017
புகைப் பழக்கத்தை முழுவதும் போக்க உதவும் யோகப் பயிற்சி
article image

நிறம்

புகை பழக்கம் உள்ளவர்கள், அதனை விட நினைக்கும் போதெல்லாம் பல பிரச்சனைகள் சிந்திக்கிறார்கள். விட முடியாமல் தவிப்பார்கள், கவனம் அதிகமாக சிதறும், படபடப்பு, ஓய்வின்மை, பதட்டம், எரிச்சல், சிந்தனை சிதறும், பசியின்மை, உடல் எடை அதிகரிக்கும். ஒருவர் போதையில் இருந்து வெளிப்பட நினைக்க நினைக்க அதனால் பிரச்சனை வலுத்துக் கொண்டே போகுமே தவிர, தீர்வு இருக்காது. பல நேரங்களில் பிரச்சனையை சரி செய்ய ஒரு போதையில் இருந்து மற்றொரு போதைக்கு மாறிவிடுவார்கள். சனாதன் கிரியாவில் பயிற்சி மூலமாக போதை பழகங்களில் இருந்து முழுமையக வெளிவர முடியும். பலரும் இதனால் பயன் அடைந்துள்ளனர். தொடர் புகையிலை பழக்கம், ரத்த நாளங்களை சுருங்க செய்து , ரத்த ஓட்டத்தை பாதிக்கும். ரத்த நாளங்களையும் , ரத்த ஓட்டத்தையும் சரி செய்ய உடம்பில் பிராண சக்தி முக்கியம். பிராணம் உடம்பில் எல்லா பகுதிகளிலும் பரவ செய்வது நல்லது. பிராண சக்தியை உள்வாங்கும் பயிற்சியே பிரணாயாமம். பிராணாயாம் செய்ய வஜ்ரா சனத்தில் உக்காருவது சிறந்தது. கண்களை மூடிக்கொண்டு சுவாசத்தை மெதுவாக உள் இழுங்கள். உள் இழுத்த சுவாசம் மூக்கு, தொண்டை வழியாக வயிறு வரை செல்வதை உணருங்கள். வயிற்றில் அடங்கிய சுவாசம் மெதுவாக மீண்டும் தொண்டை, மூக்கு வழியாக வெளியேறுவதை கவனியுங்கள். சுவாசம் உள் இழுக்கும் பொது வயறு விரிவடைய வேண்டும், மார்பு விரிவடையக் கூடாது. தொண்டை குழாயில் கவனம் வைத்து தொண்டை பகுதியின் விசையினால் காற்றை உள் இழுக்கவும். அதேபோல் தொண்டை குழாய் விசையினால் வெளிவிடவும். இது மிகவும் முக்கியம். காற்றை வெளி விடும்போது, வயறு உள் இழுக்கப்படும். சுவாசம் உள் இழுக்கும் பொது “சோ” எனும் மந்திரத்தை, வெளிவிடும் போது “ஹம்” என்ற மந்திரத்தை மனதிற்குள் ஒலிக்கவும். பிராணாயாம் தொடரும் போது கண்கள், காகி யோகா முத்தராவிலும், உள் சுவாசத்தின் போது மெதுவாக சாம்பவி யோகா முத்திரைக்கு செல்லவும். வெளி சுவாசத் தின் போது மீண்டும் காகி யோக முத்திரைக்கு மாறவும். காகி - கண்கள் இரண்டும் மூக்கின் நுனியை நோக்குதல். சாம்பவி - கண்கள் இரண்டும் புருவத்தை நோக்கி இருத்தல். இந்த பயிற்சி செய்யும் போது, உங்கள் உள் கவனம் உங்கள் உடம்பில் உள்ள எழு சக்ராவிலும் பயணிக்கும். காகி முத்திராவில் இருக்கும் போது மூலதாரம் சக்ராவிலும், கண்கள் மேலே செல்லச் செல்ல, ஸ்வதிச்டானம், மணிபூரகம், அனாகதம், விஷுத்தி, ஆக்யா, கடைசியாக ஷஹஷரா சென்று அடையும். கண்கள் மூடிய நிலையில் இந்த க்ரியாவை செய்தல் அவசியம். ஒரு முறை சுவாசம் உள் இழுத்து வெளிவிடுதல் ஒரு முறை என கணக்கில் கொள்ளப்படும். குறைந்தது எழு முறை செய்ய வேண்டும். கண்களைத் திறக்கும் போது மிகவும் மெதுவாக திறந்து உள்ளகைகளை முதலில் பாருங்கள். இந்த கிரியா உடம்பில் பிராண சக்தியை வலுபடுத்தும். உடம்பில் உள்ள புகையிலை நச்சு களையும், போதை உணர்வுகளுக்கு காரணமாக இருக்கும் காரணிகளையும் உடம்பில் இருந்து அகற்றும். தினமும் இந்த கிரியாவை பயிற்சி செய்பவர்கள் எளிதில் புகை பழக்கம் மற்றும் போதையில் இருந்து விடுபடலாம். தர்காலிகமாக அல்ல, நிரந்தரமாக. உங்கள் உணர்வுகளில் உன்னதம் அடைவதையும் நீங்கள் உணர முடியும். இந்த காலங்களில் தண்ணீர் மற்றும் பழங்கள் அதிகமாக உட்கொள்ளவும். புகை ஞாபகம் வரும்போது, கரும்பை மெல்வது தற்காலிக தீர்வு. சனாதன் கிரியா பயிற்சி எல்லா வித இடர் பாடுகளில் இருந்து விடுதலை அளிக்கும்.யோகி அஷ்வினிஜியின் வழிகாட்டுதல் படி இந்திய முழுவதும் தியான் ஆசிரமம் சனாதன் கிரியா யோகா பயிற்சியை இலவசமாக கற்றுக் கொடுக்கிறது. குரு சிஷ்ய பரம்பரை வழியாக யோகா நெறியை கற்றுக்கொள்ள அணுகவும். அனுமதி முற்றிலும் இலவசம். 9841430369, Dhyan Foundation.