logo
home மருத்துவம் ஜூலை 29, 2017
உடலைக் குளிர்சியாக்கி பல்வேறு நோய்களை தீர்க்க உதவும் கற்றாழை
article image

நிறம்

கற்றாழை என்பது மிகச் சிறந்த அற்புத இயற்கை மருந்து. ஏற்கனவே கற்றாழை பயன்படுத்தி இருந்தால் அதன் பயன்பாடு, ஆரோக்கிய நலன்கள் ஆகியவை பற்றி தெரிந்திருக்கும்.. ஆனால் பலருக்கு கற்றாழையின் மகத்துவம் தெரியாமல் இருப்பது வேதனைதான். முகத்தை அழகுபடுத்த காயங்கள், சூடுகளில் ஏற்படும் கட்டி மறைய என பலவற்றிற்கு கற்றாழை பயன்படுகிறது. கற்றாலையை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பல உண்டு. கற்றாழையை பொதுவாக அழுத்த எதிர்ப்பி என அழைக்கிறோம். இது உடலை தேவைக்கேற்றபடி மாற்றியமைக்கிறது. இவை இயற்கையிலே பல்வேறு சத்துக்களை கொண்டுள்ளது. இயற்கை சத்துக்களான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள். இது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள கற்றாலை உதவுகிறது. கற்றாலையை ஜூஸ் செய்தும் சாப்பிடலாம் பல்வேறு மருந்தாகப்பயன்படும்: கற்றாழைச் சாறு போதையை நீக்க செயலாக செயல்படுகிறது. தோல் நீக்கிய சோற்றை கழுவி கசப்பு நீக்கி குழம்பாகச் சமைத்துண்டால் தாதுவெப்பு அகன்று தாகந்தணியும், மலச்சிக்கல் போகும். தோல் நீக்கிய சோறு கசப்பில்லாத வகையும் உள்ளது. ஒரு வகை இனிப்புக் கூழ் மூலநோயிக்கு மருந்தாகும். கடும் வயிற்றுப்புண்ணுக்கு இலையின்சாறு பயன்படுகிறது. இதன் ஜெல் தோலின் மேல் தடவினால் வெப்பத்தின் தன்மையை போக்கும். முக அழகு சாதனமாகப்பயன் படுகிறது. இலை மஞ்சள் நிறத் திரவமும் தேனும் கலந்துண்டால் இருமல் சளி போகும். வயிற்றில் உள்ள நாக்குப்பூச்சிகளை வெளியேற்றுகிறது. எரிசாராயத்துடன் கலக்கி முடிக்குப் போட முடிவளரும், நிறம் கருமையடையும். ஜெல்லைப் பதப்படுத்தி குளிர்பானமாகவும் பயன் படுத்தப்படுகிறது. வேறை சுத்தம் செய்து பால் ஆவியில் அவித்து உலர்த்திப் பொடி செய்து 15 மில்லி பாலுடன் கொடுக்க சூட்டு நொய்கள் தீரும்.ஆண்மை நீடிக்கும். குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நமது இணையதளம் மூலம் வெளிவரும் ஆன்மிகமலர்.காம் மாதம் இருமுறை இதழை இலவசமாக பெற உங்கள் இ-மெயில் முகவரியை aanmeegamalar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும் மேலும் விவரங்களுக்கு ஆசிரியர் பக்கத்தை பார்க்கவும்.