logo
home மருத்துவம் ஆகஸ்ட் 19, 2017
ஆயுளை அதிகரிக்கும் சத்துக்கள் நிறைந்த காய்கறி உணவுகள்
article image

நிறம்

வெங்காயம் வைட்டமின் சி, பொட் டாசியம் அதிகமாக இருப்ப தால், நோய் எதிர்ப்புச் சக்தி யை அதிகரிக்கும். ஜீரண சக்தி தரும். சிறுநீரகப் பிரச்னை மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்தும், பெரிய வெங் காயத்தை சாலட் செய்தும் பச்சையாகவே சாப்பிடுவது மிகுந்த பலனைத் தரும்.
வாழைக்காய் வைட்டமின் ஏ, சி, மெக்னீசி யம், பொட்டாசியம், கால்சியம், கார்போஹைட்ரேட்ஆகிய சத்துகள் உள்ளன. மூன்று வாரத்துக்கு ஒரு முறை சாப்பிட்டலாம். கர்ப் பிணிகளின் ஆரோக்கியத் துக்கு உதவும்.
வெண்டைக்காய் இந்தக் காயில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, ஏ. கே. மெக்னீசியம் உள் ளிட்ட சத்துகள் உள்ளன. ஜீரணத்துக்கு உகந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து, மூளை வளர்ச்சிக்கு உதவுவதுடன் எலும்புக்கும் வலு சேர்க்கும். குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
கேரட் கேரட்டில் உள்ள வைட் டமின் சி, கால்சியம் ஃபோ லிக் ஆசிட் கண்களின் ஆரோக்கியத்துக்கும் இதயத் துக்கும் நல்லது. சர்க்கரை நோயாளிகள் பச்சையாக மட்டும் எடுத்துக்கொள்வது நல்லது. ஒரு வயதுக் குழந் தை முதல் எல்லோரும் சாப் பிடலாம். பளபளவென்ற முகப் பொலிவு தரும் என்பது கூடுதல் தகவல்.
புடலங்காய் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால், சருமத்துக்கு நல்லது. இதில் கொழுப்பு இல்லாததால் இதயத்துக்கு நல்லது. வைட்டமின் ஏ, பி, சி, அயோடின் இருப்பதால் பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையைக் கட்டுப்படுத்தும். நரம்பு மண்டலத்தைப் பாது காப்பதுடன் எடையைக் குறைக்கவும் உதவும்.
தக்காளி வைட்டமின் சி, ஏ, கே., பொட்டாசியம், நார்ச்சத்து உள்ள தக்காளி வாய்ப்புண் மற்றும் சேன் சரைத் தடுக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டும். இதயத்துக்கு நல்லது. எலும்புக்கு வலிமை சேர்க்கும். பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது. பொதுவாக சமை யலின்போது, தக்காளியின் தலைப் பகுதியில் இருக்கும் உள்தண்டை நீக்கிவிடுவது நல்லது.
வாழைத்தண்டு இதில் கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து உள்ளதால், மலச்சிக்கலைத் தடுக்கும். பித்தப்பை, சிறுநீரகம் இவற்றில் உண்டாகும் கற்களைத் தடுக்கவும் உதவும். நச்சுத் தன்மையை முறியடிக்கும்.
கத்திரிக்காய் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, புரோட்டீன் சத்துக்கள் கொண்டது. குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நமது இணையதளம் மூலம் வெளிவரும் ஆன்மிகமலர்.காம் மாதம் இருமுறை இதழை இலவசமாக பெற உங்கள் இ-மெயில் முகவரியை aanmeegamalar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும் மேலும் விவரங்களுக்கு ஆசிரியர் பக்கத்தை பார்க்கவும்.