குண்டான உடல் ஒல்லியாக வேண்டுமா, ‘‘ஒல்லியான உடல் குண்டாக வேண்டுமா? இரண்டாயிரம், மூன்றாயிரம் ரூபாயில் மருந்துகள் உள்ளது’’ என்ற விளம்பரங்கள் வராத நாளிதழே இல்லை... இதுபோன்ற மக்களின் ஒல்லி மற்றும் குண்டு உடல் அமைப்பை வைத்து காசு பார்க்கும் வெளிநாட்டினர் நாளுக்கு நாள் பெருகி வருகின்றனர். இந்தப் பிரச்சனையை போக்க நமது முன்னோர் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே நல்ல இயற்கை மருத்துவ முறைகளை கூறிச் சென்றுள்ளனர். அதனை நாம் பாதுகாக்காமல் விட்டு விட்டோம், அதன் விளைவு.... உலகத்திற்கே மருத்துவத்தை சொல்லித் தந்த இந்திய தேசத்திற்குள், வெளிநாட்டுக்காரர்கள் இதுபோன்ற பக்கவிளைவுகள் அதிகம் உள்ள மருந்துகளை அதிக பணத்திற்கு விற்று லாபம் சம்பாதிக்கின்றன. நமது முன்னோர் ஒல்லியான உடலை குண்டாக மாற்ற, கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்துள்ளனர். இதனால் ஒல்லியான உடல் குண்டாக மாற்றி வெற்றியும் கண்டுள்ளனர். குண்டான உடல் ஒல்லியாக மாற்ற தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் மிதமான சூட்டில் உள்ள நீரில் தேனையும், லவங்க பொடியையும் கலந்து குடிக்கவும். அதே போல இரவில் படுக்க போகும் முன்னர் தேனையும், லவங்க பொடியையும் மிதமான வெந்நீரில் கலந்து குடிக்கவும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் எத்தனை குண்டாக இருந்தாலும் உடல் எடை குறைவது உறுதி. இதை நீங்கள் குடித்து வரும் போது உடலில் கொழுப்பை சேர விடாமல் தடுத்து விடும். அதாவது நீங்கள் சாதாரண உணவை சாப்பிட்டு வந்தாலும் கூட எடை கூடாமல் தடை செய்யும். இதனை நாமும் கடைபிடிப்போம், இந்த முறையை மற்றவர் அறியவும் செய்வோம். வீண் விளம்பரங்களால் கவரப்பட்டு, அதனால் பக்கவிளைவுகளுடன் அவதிப்படும் நமது மக்களை பாதுகாக்க இந்த முறையை அவர்களுக்கும் எடுத்துச் சொல்வோம். குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நமது இணையதளம் மூலம் வெளிவரும் ஆன்மிகமலர்.காம் மாதம் இருமுறை இதழை இலவசமாக பெற உங்கள் இ-மெயில் முகவரியை aanmeegamalar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும் மேலும் விவரங்களுக்கு ஆசிரியர் பக்கத்தை பார்க்கவும்.
நிறம்