தற்போது ஒருசில வருடங்களாக வைரஸ் கிருமிகளின் தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளது. வருடம் தோறும் புதுப் புது வைரஸ் கிருமிகள் உருவாகி மனிதர்களை தாக்குவதும், அதனால் ஒருசில உயிரிழப்பு நிகழ்வதும் தொடர் கதையாக உள்ளது. கொசுக்கள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றை தாக்கும் வைரஸ் கிருமிகள் மனிதர்களையும் தாக்கி மனித குலத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது. இதுபோன்ற பிரச்சனைகளை ஏற்கனவே நமது முன்னோர்கள் அனுபவித்துள்ளனர். அதற்கு அவர்கள் இயற்கை பொருளையே மருந்தாகவும் பயன்படுத்தி பலன் அடைந்துள்ளனர். பிற்காலத்தில் இதுபோன்ற பிரச்சனை ஏற்படாதவண்ணம் மக்களை காக்க வேண்டும் என்பதால் சித்த புருஷர்கள் மருத்துவ குறிப்புகளாக அவற்றை எழுதி வைத்து சென்றுள்ளனர். ஆனால் நாம் அவற்றை பாதுகாக்காமல், அவற்றை பயன்படுத்தாமல் விட்டதன் விளைவுதான் தற்போது பல்வேறு நோய்க்கிருமிகள் நம்மை தாக்கிக் கொண்டுள்ளன. இந்தவகையில் நோய்க் கிருமிகள் அண்டாமல் தடுக்கும் எளிமையான முறை: கருங்காலிக்கட்டை, வன்னிக்குச்சி, வன்னி இலைகளை சிறிய துணியில் கட்டி வீட்டு வாசலில் தொங்குமாறு வைக்கவேண்டும். அல்லது வீட்டில் ஏதாவது ஒரு இடத்திலில் வைத்தால் வைரஸ் கிருமிகள் அழிக்கப்படும். வேலைக்கு செல்பவர்கள், வெளியூர் பயணம் மேற்கொள்பவர்கள் கூட, மேற்கண்டவற்றில் சிறிதளவு சட்டைப்பையில் அல்லது கையில் வைத்துக் கொண்டால் வேறு எந்த வைரஸ் கிருமியும் நம்மை தொற்றாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது மேற்கண்டவற்றை சிறிதளவு ஒரு சிறு துணியில் கட்டி அவர்களின் பாக்கெட்டில் வைப்பது அவர்களை பாதுகாக்கும். நிபா வைரஸ் கிருமியை அழிக்க உதவும் பவளமல்லி இலை: தற்போது தென்னிந்தியாவை குறிவைத்து பரவிவரும் வைரஸ் கிருமியானது நிபா. இந்த வைரஸ் கிருமி கேரள மாநிலத்தில் ஒருசிலரின் உயிரை பறித்துள்ளது. தற்போது இந்த வைரஸ் கிருமிக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது அதிர்ச்சியான செய்தியாக இருந்தாலும், மற்ற மாநிலங்கள், இந்த வைரஸ் கிருமி பரவாமல் தடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் கிருமி நம்மை தாக்காமல் இருக்க நம் முன்னோர் ஏற்கனவே அற்புதமான இயற்கை மருந்துகளை ஏடுகளில் எழுதி வைத்து சென்றுள்ளனர். அகஸ்தியர் போன்ற மாமுனிவர்கள் கூறிய மருத்துவ குறிப்புகளின்படி, இந்த நிபா வைரஸ் கிருமிகளைப் போன்ற ஏனைய வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்தி ‘பவளமல்லி இலை கஷாய’த்திற்கு உண்டு. இந்த கஷாயம் தயாரிக்கும் முறை: மிக ஸ்லிம்மாக எரியும் அடுப்பில் 200 மில்லிஅளவு தண்ணீரை வைத்து, அதில் பவளமல்லி இலைகளை 5 எண்ணிக்கை எடுத்து, நன்றாக சிறிய துண்டுகளாக நறுக்கி போட வேண்டும், 200 மில்லி அளவுள்ள நீர் 100 மில்லி நீராக சுண்டும் வரை அடுப்பில் வைக்க வேண்டும், அதில் 3 முதல் 5 எண்ணிக்கையில் மிளகை நசுக்கி போட வேண்டும், எலுமிச்சை சாறு 3 முதல் 4 சொட்டுக்கள்விட்டு நன்றாக கிளறிவிட வேண்டும். தற்போது கஷாயம் தயாராகிவிட்டது. அடுப்பில் இருந்து இறக்கியதும் அந்த கஷாயத்தை வடிகட்டி ஒரு நாளைக்கு 3 முறை அல்லது 4 முறை குடித்து வந்தால் நிபா வைரஸ் மட்டுமல்ல வேறு எந்த வைரஸும் தாக்காமல் நம்மை பாதுகாக்கும். ஸ்ரீ சஞ்சீவி ராஜ சுவாமிகள் +91 9600396444, 9600397444
நிறம்