கருப்பான சருமம் என்பது இந்தியர்களை பொருத்தவரை இரண்டாம் பட்சமாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் சிவந்த மேனி கொண்டவர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமைதான். கருப்பு என்பது வெறுக்கத்தக்க நிறமில்லை. இந்தியர்களின் உண்மை நிறமே கருப்புதான். கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். ஏனெனில் அவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கொப்புளங்கள், கோடைகால சரும பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கருப்பான பெண்கள் கலையாக மாற சில ஆலோசனைகளை பார்க்கலாம்…… சிறிதளவு தேன், சிறிதளவு பாலேடு, சிறிது வெள்ளரிச்சாறு, கொஞ்சம் கடலை மாவு எல்லாவற்றையும் நன்றாகக் குழைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு கழுவலாம். இதனால் கருப்பான சருமம் களையாகும். ஆயுர்வேதக் கடைகளில் சுத்தமான குங்குமாதி தைலம் கிடைக்கும். அதை வாங்கி கொஞ்சம் பாலுடன் கலந்து வாரம் ஒரு முறை முகத்துக்கு தடவி வர வேண்டும். இவ்வாறு தடவிய பிறகு அரைத்த சந்தனத்தில் பால் கலந்து மீண்டும் தடவ வேண்டும். இதனால் முகம் நிச்சயம் பொலிவாகும். வெயிலில் வாகனங்களில் செல்கிற போது ‘சன் ஸ்கிரீன்’ உபயோகிக்கலாம். அதேபோல் கைகளுக்கு தற்காப்பு கவச துணி அணிவது சருமத்தை பாதுகாக்கும். சூடான பாலில் குங்குமப் பூவைப் போட்டு கால் மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும். அது வெதுவெதுப்பாக மாறி, மஞ்சள் நிறத்துக்கு வரும் போது குடிப்பது தான் பலன் தரும். இதனால் சரும நிறத்தில் பொலிவு கூடும். அதேபோல் பச்சைக் காய்கறிகள், பழங்கள், இளநீர், பால், தயிர் சாப்பிடுவது போன்றவையும் நிறத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
நிறம்