நம் முன்னோர்கள் அன்று சொன்னவற்றை கேலியும் கிண்டலும் செய்தோம், முன்னோர்களின் பழக்கவழக்கங்களை முட்டாள்தனம் என்று பகுத்தறிவு போர்வையில் பேசிய முட்டாள்களை தட்டிக்கேட்காமல் இருந்துவிட்டோம். இன்றைய காலகட்டத்தில் நம் முன்னோர் சொன்ன செயலை கடைபிடிக்க வைத்துள்ளது "கொரானோ" பயம். கழிவறையும், குளியலறையும் வீட்டிற்குள் வைக்காமல் கொல்லைபுறத்தில் வைத்தார்கள். கண்ணுக்கு தெரியாத கிருமிகள் மனிதர்களை தாக்க கூடாது என்பதால். தலைமுடி வெட்டும்போதும், இறப்பிற்கு சென்று வந்தால் எதையும் தொடாமல் குளித்த பின் வீட்டிற்குள் வந்தார்கள், இதனால் குறிப்பிட்ட கிருமிகள் வராமல் தடுக்க. செருப்பை வீட்டின் வெளியே விட்டார்கள். பிள்ளைகள் பள்ளிக்கும், வெளியேயும், சென்று வந்தால் கைகால் கழுவி வீட்டிற்குள் வரசொன்னார்கள். கொடிய கிருமிகள் தண்ணீரில் அழிந்து போகும் என்பதை உணர்ந்ததால் அன்றே கடைபிடித்தனர் நம் முன்னோர்கள். பிறந்தாலோ, இறந்தாலோ தீட்டு என்று 10, 16 நாட்கள் தனிமைபடுத்தினர். இதுவும் கிருமிகள் ஆக்கிரமிப்பிலிருந்து நம்மை பாதுகாக்கத்தான். இறப்பு வீட்டில் சமைக்க கூடாது என்றார்கள். குடும்பத்திற்கு சமைக்கும் பெண்கள் குளித்துவிட்டு சமைத்தார்கள். மற்றவரை பார்த்தால் கைகூப்பி வணக்கம் தெரிவித்தல். வாசல் பெருக்கி சாணம், மஞ்சள் தெளித்து கோலமிட்டார்கள். மண், செம்பு, வெண்கல பாத்திரங்களை உபயோகித்தார்கள். வீட்டில் சமைத்த உணவு அதிலும் சைவமே பெரும்பாலும் உண்டார்கள். காலையில் நீராகாரத்தை எடுத்துக்கொள்வது. பல் துலக்க வேப்பங்குச்சி, ஆலங்குச்சி, உப்பு, கரித்தூள் போன்றவைகளை பயன் படுத்தினர். சமுதாய விலகல் முறையை, மற்றவரிடமிருந்து தள்ளி நின்று பேசுவது, தொடுதலுக்கு அனுமதிக்காமல் சுகாதாரத்தை பேணுதல். தனிமனித சுகாதாரம், சமூகத்தில் ஒழுக்கம், அண்டை அயலாரோடு அகலாது அணுகாது உறவாடுதல் போன்ற நம் மூதாதையர் வாழ்வியல் நெறியை ஒருசில மூடர்கள் கிண்டலடித்து, கேலி செய்து திட்டமிட்டு சிதைத்தனர். அந்த மூடர் கூட்டத்தினர் இன்று வாய் பொத்தி மௌனமாக இருக்கிறார்கள். மேலைநாட்டு நாகரிகத்தை பின்பற்றி அதற்கான விலையை இன்று கொடுத்து கொண்டிருக்கின்றோம். இனியாவது, முன்னோர் வாக்கை முழுவதும் கடைபிடிப் போம். முட்டாள் பகுத்தறிவு பேசுவோரை வேரறுப்போம்.
நிறம்