
கலைமகளுக்கு நாமகள், பாரதி, வாணி, இசைமடந்தை, ஞான வடிவு, பனுவலாட்டி, பிராஹ்மி, பூரவாஹினி, அயன்மனைவி, வெண்தாமரையாள், சாவித்திரி, வாக்தேவி என்ற பெயர்கள் உண்டு. இந்தியாவில் ஓடும் நதிகளில் சரஸ்வதி நதியும் ஒன்றாக உள்ளது. ஆனால், சரஸ்வதி நதி அனைவர் கண்களிலும் தென்படும் படியாகவே ஒரு காலத்தில் ஓடியதாம். பின்னர் ஒரு கட்டத்தில் இது பூமிக்குள் சென்று மறைந்து விட்டது. இதற்கு காரணமாக புராணத்தில் ஒரு கதை சொல்லப் படுகிறது. படைப்புக்கடவுளான பிரம்மா, உயிர்களின் தலைவிதியே தன் கையில் தான் உள்ளது என்று பெருமை அடைந்திருந்தார். இத„ல் ஆணவம் அடைந்த அவரது ஒரு தலையை சிவபெருமான் வெட்டி விட்டார். இத„ல் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நெருப்புக்கோளமாக மாறியது. இதை ஏந்திச்சென்று கடலில் சேர்க்கும்படி தேவர்கள் சரஸ்வதி நதியிடம் கேட்டனர். சிவனால்தான் தன் கணவருக்கே இத்தகைய நிலையை ஏற்பட்டது இந்நிலையை ஏற்படுத்திய சிவனின் பிரம்மஹத்தி தோஷத்தை சுமக்க விரும்பாத சரஸ்வதி, பூமிக்கு அடியில் சென்று மறைந்ததாக கூறப்படுகிறது.