logo
home ஆன்மீகம் மார்ச் 02, 2016
இழந்த பொருள் மற்றும் வீண் பழியிலிருந்து மீட்கும் விநாயகர்விரதம்: ஆயுளையும் விருத்தியடையச் செய்யும் அதிசயம்
article image

நிறம்

விநாயகர் விரதத்தைமுதன்முதலில் உபதேசித்தவர் சிவபெருமான் திருக்கயிலை மலையின்மந்தார விருச்சத்தின்அடியில் முருகப் பெருமானுக்கு இதனைஉபதேசித்தார்.இந்தவிரதத்தால் ஆயுள் விருத்தியாகும்.ஆவணி மற்றும்புரட்டாசிமாதங்களில் பூர்வ பட்சசதுர்த்தியில் இந்த விரதத்தை அனுஷ்டிக்கவேண்டும். விரத முறை; அதிகாலையில் நீராடிநித்தியா கடமைகளை முடித்துக்கொண்டு தாங்கள் சக்திக்கு தக்கபடி களிமண்,மஞ்சள் ,பசுஞ்சானம்,பொன்,வெள்ளி,ஆகிய ஏதாவதுஒன்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை எடுத்துக் கொள்ளவேண்டும்.வீட்டின் வடதிசையில் ஒரு இடத்தை சுத்தம் செய்து மொழுகி கோலமிட்டு மண்டபம் போல் அமைத்துக் கொள்ளவேண்டும். அந்தகோல மண்டபத்தில் அரிசி அல்லது நெல்லை கொட்டி,அதில் கணேசனை பிரதிஷ்டை செய்யவேண்டும் .பின்பு சந்தானம் ,மலர்கள், அருகம்புல் ஆகியவற்றால் பூஜித்து துப,தீப,நைவேத்தியம் செய்துவணங்க வேண்டும்.21கொழுக்கட்டை,21நாவல்பழம் 21விளாம்பழம் ஆகிய பழவகைகளாலும் வாழைப்பழம் ,தேங்காய்,கரும்பு ,முதலியவைகள் வைத்தும் உறவினர்களுடன் அமர்ந்தும் உண்ணவேண்டும். அந்தனர்களுக்கு தானமும் செய்ய வேண்டும். மறுநாள் காலையில் நீராடி விநாயகருக்கு பூசை செய்து, களிமண் முதலியவற்றால் செய்திருந்த சிலையாக இருந்தால் அதை நீர்நிலையில் கரைக்க வேண்டும்.இந்த விரதத்தை பாண்டவர்கள் மேற்கொண்டதன் மூலமாக இழந்த ராஜ்யத்தை மீண்டும் பெற்றனர். வீண்பழி தீர்க்கும்விரதம்; கண்ண பரமாத்மாவுக்கு ஒருமுறை வீண்பழி ஏற்பட்டது. சத்ராஜன் என்றமன்னன் சூரியனை தரிசித்து சமந்தகம் என்னும் மணியை அடைந்தான். அந்த மணி கேட்டநேரத்தில் தங்கத்தை கொடுக்கும் சக்தி உடையது. சத்ராஜன் கிருஷ்ணனின் தரிசனத்திற்கக் துவாரகை சென்றான். அந்த மணியைப் பார்த்த கண்ணன் அதை சத்ரஜனிடம் கேட்டான்.ஆனால்சத்ராஜன் அதை கொடுக்க மறுத்து விட்டான். கண்ணனும் மேலும் வற்புருத்தாமல் அத்துடன் விட்டுவிட்டான். ஒருமுறை சத்ராஜனின் தம்பி அந்த மணியை எடுத்துக்கொண்டு வேட்டைக்கு சென்றான். அவன் ஒரு சிங்கத்தால் கொல்லப்பட்டான். அந்தமணியை சிங்கம் எடுத்து சென்றது .அப்போது ஜாம்பவான் என்பவன் அந்த சிங்கத்தை கொன்று மணியை தன்னுடன்எடுத்து சென்றான். ஆனால்விஷயம் வேறு விதமாகப் பரவியது. கண்ணன்தான் மணிமீது ஆசைப்பட்டு சத்ராஜனின் தம்பியை கொன்று மணியை திருடிவிட்டான் என்ற பழி ஏற்பட்டது. இந்த பழிநீங்க கண்ணனும் பலராமனும் விநாயகர் விரதத்தை மேற்கொன்றனர் அவர்களுடன் துவரகபுரி மக்களும். இந்தவிரதத்தை மேற்கொண்டனர் இதன் பலனாக ஜாம்பவனிடம் சென்று மணியை பெற்றகண்ணன் அதை மீண்டும் சத்ராஜனிடம் ஒப்படைத்தார். ஜாம்பவானின் மகள் ஜம்பவதியையும் திருமணம் செய்துகொண்டார். விநாயகர் விரதம்சிறந்த விரதமாகும்!. கடன் தீர கணபதி மந்திரம் ! ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம் ஹீம் பட்ஸ்வாஹா ஹே பார்வதி புத்ரா ருணம் நாசம் கரோதுமே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட சித்திம்மே தேஹி சரணாகத வத்ஸல பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் ஸ்வாஹா ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா