திருவண்ணாமலை மலையில் ஏராளமான சித்தர்கள் இருந்தார்கள். இப்போதும் கூட அங்கு பல சித்தர்கள் இருக்கிறார்கள், ஆனால் நம் கண்களுக்குத்தான் தெரிவதில்லை. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் திருவண்ணாமலையில் ஜீவசமாதி அடைந்துள்ளார். திருவிடை மருதூர், இடைக்காட்டூர் உள்பட பல இடங்களில் இடைக்காடர் ஜீவ சமாதி உள்ள போதிலும் திருவண்ணாமலையில் தான் அவரது பரிபூரண அருள் உள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை இவர் கோடி ஆண்டுகளுக்கு கண்டு தரிசனம் செய்துள்ளார். திருவண்ணாமலை தலத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் போது அதை நேரில் கண்டு தரிசனம் செய்தாலே அளவற்ற புண்ணியம் கிடைக்கும் என்பார்கள். கோடி தடவைக்கு மேல் கார்த்திகை தீபத்தை தரிசனம் செய்த, இடைக்காடர் பற்றி நினைத்தால், திருவண்ணாமலை ஈசனின் மகிமையைத் தெரிந்தவர் இவர் ஒருவர் தான் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இவர் திருவண்ணாமலை பற்றிய ரகசியங்களை முழுமையாக அறிந்தவர் என்று கூறப்படுகிறது. இன்றும் பவுர்ணமி தோறும் திருவண்ணாமலையில் இடைக்காடர் கிரிவலம் வருவதாக கூறப்படுகிறது. இடைக்காடர் மட்டுமல்ல, மேலும் பல சித்தர்களும் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். கலசப்பாக்கம் அருகில் உள்ள பூண்டியில், பூண்டி சித்தரின் ஜீவசமாதி இருக்கிறது. அந்த சித்தர் பவுர்ணமி தோறும் திருவண்ணா மலையில் கிரிவலம் வருவதாக சொல்லப்படுகிறது. வாத்தியார் அய்யா ஸ்ரீமுத்து வடுகநாதர் சித்தர் என்று ஒரு சித்தர் உள்ளார். இவரது ஜீவசமாதி எங்கு இருக்கிறது என்று இதுவரை யாருக்குமே தெரியவில்லை. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீவராகி தீர்த்தத்துக்கு தினமும் இவர் வந்து வழிபட்டு செல்வதாக கூறப்படுகிறது. சீரியா சிவம் பாக்கினி சித்தர் என்று ஒரு சித்தர் திருவண்ணாமலையில் வசித்தார். இவர் பெயரில் மலை ஒன்று அங்குள்ளது. அங்கு இந்த சித்தரின் அருள் இன்னமும் பரவி உள்ள தாக கூறப்படுகிறது. அதுபோல ஸ்ரீபெத்த நாராயண சித்தர் என்பவரும் பல நூற்றாண்டுகளாக திருவண்ணா மலையில் வாழ்கிறார். யார் கண்களுக்கும் அவர் தன்னைக் காட்டியது இல்லை. மேலும் வயிறு சார்ந்த நோய்கள் தீரும். திருவல்லத்தில் பிறந்தவர் பாம்பணையான் சித்தர், இவர் மற்ற சித்தர்கள் போல அரூபமாக கிரிவலம் வருவதில்லை. இவர் மனித வடிவம் எடுத்து கிரிவலம் வருகிறார். மார்கழி மாத பவுர்ணமியில் இவர் கிரிவலம் வருவதாக சொல்கிறார்கள். இவரது பார்வை நம் மீது பட்டாலே போதும் விஷக் கடிகளால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும். ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர நாட்களில் கிரிவலம் வருபவர்களுக்கு கணதங்கணான் சித்தர் அருளால் சகல நோய்களும் தீரும். மாத சிவராத்திரி கிரிவலத்தின் போது அர்த்தஜாம பூஜை நேரத்தில் குரு ஓரையில் இவரை பார்க்கும் தரிசனம் கிடைத்தால் நமது ஆத்மா தூய்மை அடையும். இவர்களைப் போல கணக்கற்ற சித்தர் பெருமக்கள் திருவண்ணாமலையில் தினம், தினம் கிரிவலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். கிரிவலம் செல்லும் போது, இந்த சித்தர் பெருமக்களை நினைத்துக் கொண்டு நடந்தால், நிச்சயம் நல்லதே நடைபெறும். இதுபோன்று சித்தர்களும் முனிவர்களும் நிறைந்த இந்த சக்தி வாய்ந்த மலையை சுற்றும்போது, மிகவும் பய பக்தியுடன் செல்வது உகந்தது. வீணான அரட்டை, தெய்வ சிந்தனை யில்லாமல் செல்வது போன்றவற்றால் அருபமாக இருக்கும் சித்தர்களின் சாபமும் ஏற்படும் என்பதால்தால் மலையை சுற்றும்போது பேசாமல் சிவ மந்திரத்தையும், சிவ நாமத் தையும் ஜெபித்துக்கொண்டு செல்ல வலியுறுத்தப் படுகிறது.
நிறம்