logo
home ஆன்மீகம் மார்ச் 25, 2016
தாய்தந்தையரை சுற்றி பிள்ளையார் மாங்கனி பெற்ற தலம்
article image

நிறம்

நாரதர் கொடுத்த மாங்கனியை சிவபெருமானிடமிருந்து பெறுவதற்கு `அம்மையப்பரே உலகம், உலகமே அம்மையப்பர்’ என்று சொல்லி வலம் வந்து மாங்கனியைப் பெற்றதால் `மாங்கனிப்பிள்ளையார்’ என்றுப் பெயர். இக்கோவில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ளது. கடிக்குளம் என்று அழைக்கப்படுகிறது. ஆதிகாலத்தில் கார்த்திகார்ஜுனன் என்ற அரக்கன் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான், அவன் தவ வலிமையை கண்டு சிவபெருமான் காட்சியளித்தார். அவன் கேட்ட வரங்களையெல்லாம் கொடுத்தார். அப்படி தான் கேட்ட வரங்களை வாரி வழங்கியதற்காக அவன் இங்கு ஒரு சிவாலயம் கட்ட முடிவெடுத்தான். அப்படி கட்டப்பட்ட கோவிலில் சுவாமிக்கு கற்பகேஸ்வரர் என்று நாமம் சூட்டினான். இத்தலத்து சிவபெருமானைப் போன்று விநாயகரும் கேட்டதையெல்லாம் தருவதால் கற்பக விநாயகர் என்று இன்னொரு பெயரும் உண்டு.