logo
home ஆன்மீகம் அக்டோபர் 13, 2022
பித்ரு தோஷத்தையும் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்
article image

நிறம்

சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபீட்சம் பெருகும் தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.

சங்கடஹர சதுர்த்தி விரதமிருப்பவர்கள், அன்றைய நாள் அதிகாலையில் எழுந்து நீராடி பிள்ளையார் கோவிலுக்கு சென்று 11 முறை வலம் வர வேண்டும். அதன் பின்பு பிள்ளையாருக்கு அருகம்புல் சாற்றி, தேங்காய் உடைத்து, அர்ச்சனை செய்து வழிபட்டு வரலாம். வழிபாடு முடிந்தவுடன் தலையில் குட்டிக் கொண்டு, தோப்புக்கரணம்  போட வேண்டும்.

சதுர்த்தி விரதம் மேற்கொள்பவர்கள் பித்ரு தோஷத்தில் இருந்து நீங்க அன்றைய நாளில் கோவிலுக்கு சென்று வந்ததும் ஒரு ஆழாக்கு பச்சரிசியில், வெல்லம் கலந்து, வாழைப் பழத்தை துண்டு துண்டாக நறுக்கி அதனுடன் சேர்த்து உருண்டைகளாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதனை உங்கள் அருகில் இருக்கும் பசு விற்கு தானம் கொடுக்க வேண்டும். உங்கள் கைகளால் இவ்வாறு 11 சதுர்த்தி செய்து வர பித்ரு தோஷம் விலகி நிறைய நன்மைகள் உண்டாகும்.

ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி விரத தினத்தன்றும் பசுமாட்டிற்கு உணவு கொடுப்பதால் விரதத்திற்கு பலன் அதிகரிக்கும்.

உங்களுடைய வீட்டை, உங்களுடைய பூஜை அறையையும் சுத்தம் செய்து வைத்துக் காலை 6 மணிக்கு முன்பாகவே குளித்து விட்டு, பூஜை அறையில் விநாயகரை நினைத்து ஒரு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து உங்களுடைய விரதத்தைத் தொடங்க வேண்டும்.

அவரவர் உடல் சவுகரியத்தைப் பொறுத்து விரதம் இருந்து கொள்ளுங்கள். உடல்நிலை சரியில்லாதவர்கள் மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள், பலகாரங்கள் சாப்பிட்டும் விரதம் இருக்கலாம்.

அன்றய தினம் வீட்டில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, அதன் பின்பு காலையிலேயே விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகருக்கு உங்களது கையால் அருகம்புல் மாலையை வாங்கி கொடுக்க வேண்டும்.

முடிந்தால் பசுமையாக விளைந் திருக்கும் அருகம்புல்லை உங்கள் கையாலேயே பறித்து, அதை மாலையாகத் தொடுத்து விநாயகருக்கு கொடுப்பது மிக மிக நல்லது.

மாலையாக தொடுக்க முடியாதவர்கள் ஒரு கட்டு அருகம்புல்லையாவது விநாயகருக்கு சார்த் தலாம்.

அருகம் புல்லை வாங்கி கொடுத்து விட்டு, விநாயகருக்கு 11 தோப்புக்கரணம் போட்டு, விநாயகரை 11 முறை வலம் வரவேண்டும். இப்படியாக உங்களது விரதத்தை விநாயகர் கோவிலுக்கு சென்று தொடங்குவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

அன்றய தினம் முழுவதும் உங்களுக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போ தெல்லாம் விநாயகர் நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.  

அன்று மாலை 6 மணி அளவில் உங்களுடைய  வீட்டில் சங்கட ஹர சதுர்த்தி பூஜையை தொடங்க வேண்டும்.

உங்கள் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, விநாயகருக்கு பிடித்தமான அருகம்புல்லினை   சூட்டி, விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை, இனிப்பு, சித்தி ரான்னங்கள், பால், தேன், கொய்யா, வாழை, நாவல், சுண்டல் என்று பலவிதமான உணவு பொருட்களை விநாயகருக்கு நைவேத்தியம் வைத்து, விநாயகருக்குப் பிடித்த வன்னி இலைகளால் விநாயகரை அர்ச்சித்து, விநாயக ருக்குரிய மந்திரங்கள் ஸ்தோத்திரங்கள் கூறி வழிபட வேண்டும்.

கொழுக்கட்டை செய்ய முடியாதவர்கள் ஒரு டம்ளர் பசும்பாலில் இனிப்பு சேர்த்தும் நிவேதனம் செய்யலாம்.

உங்கள் வீட்டு பூஜை  அறையிலேயே நீங்கள் அமர்ந்து ‘ஓம் கம் கணபதயே நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். 

இறுதியாக உங்களுடைய பிரார்த்தனையை இறைவனிடம் சொல்லி, சங்கடங்கள் தீர வேண் டும், அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, இறைவனுக்கு தீப தூப கற்பூர ஆரத்தி காட்டி உங்களது பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

அன்றய தினம் விநாயகரை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு இருக்கக்கூடிய தீராத சங்கடங்கள் எதுவாக இருந்தாலும் விரைவாக தீர்ந்துவிடும்.