logo
home ஆன்மீகம் ஏப்ரல் 05, 2016
கோள்களால் ஏற்படும் பிரச்சனையை சமாளித்து புத்துணர்வு, படிப்பு போன்றவற்றிற்கு உதவும் அதிகாலை பயிற்சிகள்
article image

நிறம்

அதிகாலை 4.30 முதல் காலை 7.30 வரை சூரிய உதயத்தில் பிராண வாயு பூமியில் நிறைந்திருக்கும்.இக்காலங்களில் மூளைக்கு மனப்பாட பயிற்சி ,உடலுக்கு உடற்பயிற்சி அளித்தால் சகல உள் உறுப்புகளும் ஆக்சிஜனை குடித்து வலுவாகும்..இளம் சூரிய ஒளியையும் தோலின் துவாரங்களின் வழியே ஆக்சிஜனுடன் பரவுவது ஹைப்போ தலமசையும்,உயிர் ஹார்மோன் சுரக்கும் பினியல்,பிட்யூட்டரி,தைராய்டு அட்டிரனல் சுரப்பிகளையும் வலுப்படுத்தும்.அன்று முழுவதும் சோம்பலும் வராது.கண் ,குரல்,முகப்பொலிவு போன்ரவை உண்டாகி சர்வஜன வசியம் உண்டாகும்... அதிகாலையில் எழுதல் தினசரி ஆறுமுறை தியானம் செய்தல், உடற்பயிற்சி,மெளனவிரதம்,சிக்கனப்பழக்கம், போன்றவை மன உறுதியை வளர்க்கும்..சோம்பலை போக்கும்.தீய கிரக திசாபுத்தியை சமாளிக்கும் அறிவு மனோபலம் தரும்..ஏழரை சனி,அஷ்டம சனி,அஷ்டம குரு இவற்றுக்கு பயப்பட தேவையில்லை... செவ்வாய் கெட்டால் வாகனத்தால் பிரச்சினை,வீண் வம்பு,கோர்ட் கேஸ் பிரச்சினை உண்டாகிறது சனி கெட்டால் சோம்பல்,சோர்வு உண்டாகிறது சந்திரன் கெட்டால் நிம்மதி கெடுகிறது சூரியன் ஆரோக்கியம் கெடுகிறது புதன் கெட்டால் அறிவு கெடுகிறது...குரு கெட்டால் செல்வாக்கு கெடுகிறது மரியாதை கெடுகிறது. சுக்கிரன் கெட்டால் சுகம் கெடுகிறது. இவ்வாறு நவகிரகங்கள் தரும் தொல்லைகளை சமாளிக்க மன உறுதி உடல் உறுதி அவசியம்..அதற்கு அதிகாலை எழுதல்,தியானம் ,யோகா,உடற்பயிற்சிகள் செய்தல்,வழிபாடு பிரார்த்தனைகள் இவைகள்தான் உதவும்....