logo
home ஆன்மீகம் ஏப்ரல் 21, 2016
சித்திரைத் திருவிழா காணும் மதுரையின் எண்ணற்ற சிறப்புகளும், மகிமைகளும்
article image

நிறம்

• தேவாரப்பாடல் பெற்ற பாண்டியநாட்டுத் தலங்களில் முதன்மையான மற்றும் முதல் தலம் இது • பஞ்சசபைகளில் இத்தலம் வெள்ளிசபைத் தலம். சிவனார் பாண்டிய மன்னருக்காக கால்மாறி ஆடிய தலம் • பாண்டிய நாட்டின் தலைநகராக விளங்கிய தலம் • வைகையாற்றின் கரையில் அமைந்துள்ள தலம் • தமிழகத்தின் தலைசிறந்த பெரிய நகரங்களில் ஒன்றான தலம் • சங்கப்புலவர்களுடன் சிவனாரும் ஒருவராய் இருந்து தமிழ் வளர்த்த தலம் • சிவனார் 64 திருவிளையாடல்களை நிகழ்த்திய தலம். சிவனார் நடத்திய 64 திருவிளையாடல்கள்: மதுரைக் காண்டம் : 1. இந்திரன் பழி தீர்த்த படலம் 2. வெள்ளையானை சாபந்தீர்த்த படலம் 3. திருநகரம் கண்ட படலம் 4. தடாதகைப்பிராட்டியார் அவதாரப் படலம் 5. திருமணப்படலம் 6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் 7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் 8 அன்னக்குழியும் , வைகை தோற்றமும் படலம் . o அழைத்த படலம் 9. ஏழுகடல் அழைத்த படலம் 1௦. மலையத்துவஜ பாண்டியனை அழைத்த படலம் 11. உக்கிரபாண்டியன் அவதாரப் படலம் 12. உக்கிரபாண்டியனுக்கு வேல்வளை அளித்த படலம் செண்டு கொடுத்த படலம் 13. கடல் வற்ற வேல் விட்ட படலம் 14. இந்திரன் முடிமேல் வளையெரிந்த படலம் 15. மேருமலையை செண்டால் அடித்த படலம் 16. வேதத்திற்கு பொருளருளிச் செய்த படலம் 17. மாணிக்கம் விற்ற படலம் 18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் கூடற் காண்டம் 19. நான்மாடக்கூடலான படலம் 2௦. எல்லாம் வல்ல சித்தரான படலம் 21. கல்யானைக்கு கரும்பு கொடுத்த படலம் 22. யானை எய்த படலம் 23. விருத்த குமார பாலரான படலம் 24. கால் மாறியாடின படலம் 25. பழியஞ்சின படலம் 26. மாபாதகம் தீர்த்த படலம் 27. அங்கம் வெட்டின படலம் 28. நாகமெய்த படலம் 29. மாயப் பசுவை வதைத்த படலம் 30. மெய்க்காட்டிட்ட படலம் 31. உலவாக்கிழி அருளிய படலம் 32. வளையல் விற்ற படலம் 33. அட்டமா சித்தி உபதேசித்த படலம் 34. விடை இலச்சினை இட்ட படலம் 35. தண்ணீர்ப் பந்தர் வைத்த படலம் 36. இரசவாதஞ் செய்த படலம் 37. சோழனை மடுவில் வீட்டிய படலம் 38. உலவாக் கோட்டை அருளிய படலம் 39. மாமனாக வந்து வழக்குரைத்த படலம் 40. வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம் 41. விறகு விற்ற படலம் 42. திருமுகங் கொடுத்த படலம் 43. பலகையிட்ட படலம் 44. இசை வாது வென்ற படலம் 45. பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த படலம் 46. பன்றிக்குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம் 47. கரிக்குருவிக்கு உபதேசஞ் செய்த படலம் 48. நாரைக்கு முத்தி கொடுத்த படலம் o திருவாலவாய்க் காண்டம் 49. திருவாலவாயான படலம் 50. சுந்தரப் பேரம்பெய்த படலம் 51. சங்கப் பலகை கொடுத்த படலம் 52. தருமிக்குப் பொற்கிழியளித்த படலம் 53. கீரனைக் கரையேற்றிய படலம் 54. கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம் 55. சங்கத்தார் கலகம் தீர்த்த படலம் 56. இடைக்காடன் பிணக்கு திர்த்த படலம் 57. வலை வீசின படலம் 58. வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் 59. நரி பரியாக்கிய படலம் 60. பரி நரியாக்கிய படலம் 61. மண் சுமந்த படலம் 62. பாண்டியன் சுரந்தீர்த்த படலம் 63. சமணரைக் கழுவேற்றிய படலம் 64. வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம் • மீனாட்சியம்மன் திருவடிவம் (சிலை) முழுவதும் மரகதக்கல்லால் ஆனது • சிவனாரின் கருவறை மேல் உள்ள விண்ணிழி விமானம் இந்திரனால் அமைக்கப்பட்டது • மங்கையர்க்கரசியார் , குலச்சிறையார் வாழ்ந்த தலம் • கபிலர் , பரணர் , நக்கீரர் முதலிய சங்கப்புலவர்கள் வாழ்ந்த தலம் ம் • தமிழ்ச்சங்கம் அமைந்த தலம் • சம்பந்தர் அனல் , புனல் வாதங்களை நிகழ்த்தி சமணர்களை வென்ற தலம் • மூர்த்தி நாயனார் வாழ்ந்த தலம் • சிவனார் இத்தலத்தில் வாழ்ந்த பாணபத்திரர் மூலம் திருவஞ்சைக்கள சேரமான் பெருமாள் நாயனாருக்கு திருமுகப்பாசுரம் தந்தனுப்பியதாக வரலாறு • யோக நிலையில் இத்தலம் துவாத சாந்தத்தலம் எனப் போற்றப்படுகிறது • அம்பாள் மீனாட்சியாக அரசாண்ட தலம். பார்வதியம்மை அங்கயற்கண்ணியம்மையாக அவதாரம் செய்து , பாண்டிய மன்னனின் மகளாக வளர்க்கப்பெற்று , சோமசுந்தரராக வந்த சிவனாரைத் திருமணம் செய்து கொண்ட தலம் • விநாயகருக்கான அறுபடை வீடுகளில் இத்தலம் நான்காவது படைவீடாகும். மீனாட்சியம்மை சந்நிதியின் நுழைவுவாயில் இடது பக்கம் உள்ள சீதி விநாயகர் சந்நிதியே நான்காவது படைவீடாகும் • மிக உயர்வான முப்பெருஞ் சக்திபீடங்களில் இத்தலமும் ஒன்று. ராஜமாதங்கி சியாமள சக்தி பீடமாக திகழ்கிறது • மதுரை சம்பந்தர் ஆதீனம் தெற்காவணி மூலவிதியில் அமைந்துள்ளது • குமரகுருபரர் மீனாக்ஷி பிள்ளைத்தமிழ் பாடியருளிய தலம் • பதினெண் சித்தர்களில் சுத்தரானந்த சித்தர் பீடம் அமைந்துள்ள தலம் • ஊரின் பெயர் – மதுரை ; கோயிலின் பெயர் – ஆலவாய் • சிவராஜதானி , பூலோக கயிலாயம் , கடம்பவனம் , கூடல் , நான்மாடக்கூடல் என்றெல்லாம் அழைக்கப்படும் தலம் • நாகம் உமிழ்ந்த விஷத்தை சிவனார் மதுரமாக மாற்றியருளிய தலம் • பொற்றாமரைக்குளம் கோயிலினுள் அமைந்துள்ளது • கோயில் நகரின் நடுவில் அமைந்துள்ளது • நாற்புறமும் உள்ள கோபுரங்கள் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன • அன்னை மீனாட்சிக்கே இக்கோயிலில் முதல் வழிபாடு. அதன் பின்னரே சிவனாருக்கு வழிபாடுகள் செய்யப்படுகின்றன • மிகப்பெரிய கோபுரங்களில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன • அட்டசத்தி மண்டபத்தில் மனோன்மணி , மகாலட்சுமி , வைஷ்ணவி , மகேஸ்வரி , சியாமளா , ரௌத்ரி , கௌமாரி , யக்ஞரூபிணி முதலான அஷ்ட சக்திகளின் வடிவங்கள் எட்டு தூண்களில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. திருவிளையாடற்புராணக் காட்சிகளும் இத்தூண்களில் உள்ளன • நாயக்கர் மண்டபத்தில் உள்ள ஏராளமான விளக்குகளை கொண்ட திருவாசி அழகானது • பொற்றாமரைக்குளம் மிகப்பெரியதாக உள்ளது. இந்திரன் சிவ வழிபாட்டிற்காக இக்குளத்தில் இருந்து தங்கத்தாலான தாமரை மலர்களை பறித்து சிவவழிபாடு செய்ததாக வரலாறு. இதன் அடையாளமாக இக்குளத்தின் நடுவில் தங்கநிறத்திலான தாமரை மலரின் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இக்குளத்தில் அமாவாசை , கிரகணக்காலங்கள் , மாதப்பிறப்புகள் முதலான நாட்களில் நீராடி சிவனாரை வழிபட்டால் வேண்டியதைப் பெறலாம் என்று சொல்லப்படுகிறது • திருக்குறளை இக்குளத்தில் சங்கப்பலகையில் வைத்துத் தான் சங்கப்புலவர்கள் ஏற்றுக்கொண்டதாக வரலாறு ஒன்றும் சொல்லப்படுகிறது • பொற்றாமரைக்குளத்தின் வடகரைத் தூண்களில் சங்கப்புலவர்கள் வடிவங்கள் உள்ளன • பொற்றமரைக்குளத்தின் மேற்கே ஊஞ்சல் மண்டபம் உள்ளது. வெள்ளிக்கிழமைகள் தோறும் சிவனாரும் , அம்மையும் இங்கு பொன்னூஞ்சல் வைபவம் காண்கின்றனர் • கிளிக்கூட்டு மண்டபத்தில் பாண்டவர்கள் , திரௌபதி , வாலி , சுக்ரீவன் , புருஷாமிருகம் , வேடன் முதலியோரின் அழகிய , கலைநுணுக்கம் நிறைந்த சிற்பங்கள் அமைந்துள்ளன. யாளி வடிவங்களும் உள்ளன. இம்மண்டபத்தின் மேற்க்கூரையில் தெய்வங்களின் பல்வேறு தோற்றங்களும் , மீனாட்சி கல்யாணமும் வண்ணச்சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன • இப்பிராகாரத்தில் உள்ள ஆறுகால் பீடத்தில் தான் குமரகுருபரர் மீனாட்சி பிள்ளைத்தமிழ் பாடி அரங்கேற்றியதாக வரலாறு • மகாமண்டபத்தில் ஐராவத விநாயகர் சந்நிதியும் , முருகப்பெருமான் சந்நிதியும் உள்ளன • மீனாட்சியம்மை தனிக்கோயிலில் கிழக்கு நோக்கி நின்றகோலத்தில் கையில் கிளியை ஏந்தியவாறு அற்புத திருக்காட்சி தருகிறார். சிவனாரின் வலப்புறம் மீனாட்சியம்மையின்கோயில் அமைந்துள்ளது. திங்கட்கிழமைகளில் அம்மைக்கு தங்கக்கவசமும் , வைரக்கிரீடமும் சார்த்தப்படுகிறது • அம்பாள் சந்நிதியில் இருந்து சிவனாரின் சந்நிதிக்கு செல்லும் வழியில் முக்குறுணி விநாயகரின் சந்நிதி உள்ளது. சுமார் எட்டு அடி உயரம் கொண்ட அற்புத திருவடிவம். விநாயகர் சதுர்த்தியன்று இவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. அன்றைய தினம் 18 படி அரிசியில் ஒரே கொழுக்கட்டையாக செய்து இவருக்கு படைப்பது வழக்கமாக உள்ளது • இப்பிரகாரத்தில் சங்கப்புலவர்கள் , சம்பந்தர் சந்நிதிகள் உள்ளன • சிவனாரின் சந்நிதி எதிரில் உள்ள கம்பத்தடிமண்டபம் சிற்பக்கலையின் கருவூலமாக விளங்குகிறது. இம்மண்டபத்தில் உள்ள எட்டு தூண்களின் அனைத்து பக்கங்களிலும் சிவனாரின் 25 திருவடிவங்களின் அற்புதமான சிலாரூபங்கள் உள்ளன. • இம்மண்டபத்தின் பக்கத்தில் அக்னி மற்றும் அகோர வீரபத்ரர்கள் , ஊர்த்துவ தாண்டவர் , ஆலங்காட்டு காளி முதலானோரின் பிரம்மாண்டமான திருவடிவங்கள் அற்புத பேரழகுடன் உள்ளன • சிவனார் சந்நிதி உட்பிரகாரத்தில் திருவிளையாடற்புராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட ஆறுகால் பீடம் உள்ளது. • 63வர் , கலைமகள் , காசி விஸ்வநாதர் , பிட்சாடனர் , எல்லாம் வல்ல சித்தர் , துர்க்கை மற்றும் அனைத்து பரிவார மூர்த்தங்கள் முதலானோரின் சந்நிதிகளும் உட்பிரகாரத்தில் அமைந்துள்ளன • சிவனார் எல்லாம் வல்ல சித்தராக வந்து திருவிளையாடல்கள் பல செய்த தலம். இவரது சந்நிதி சிவனார் கோஷ்டத்தில் உள்ள துர்க்கையம்மன் சந்நிதி அருகே அமைந்துள்ளது • தலமரமான ஆதி கடம்பமரம் வெள்ளிக்கவசமிட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அருகில் கனக சபையும் , சாட்சி சொல்லிய வன்னிக்கிணறும் அடுத்தடுத்து உள்ளன • சிவனாரின் சந்நிதி முன்பு வெள்ளியம்பலம் உள்ளது. சிவனார் பாண்டிய மன்னருக்காக கால்மாறி ஆடிய கோலம் கற்சிலை வடிவில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. • சிவனார் அழகிய சிறிய திருமேனியராக கிழக்கு நோக்கி திருக்காட்சி தருகிறார். இவரது கருவறை விமானம் 8 யானைகளும் , 32 சிங்கங்களும் , 64 பூத கணங்களும் தாங்கும் அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்திரனால் தேவலோகத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட விண்ணிழி விமானம் • ஆயிரங்கால் மண்டபத்தில் தற்போது தொல்பொருள் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இம்மண்டப மேற்கூரையில் 6௦ தமிழ் மதங்களையும் குறிக்கும் சக்கரம் வரையப்பட்டுள்ளது. இங்குள்ள பிட்சாடனர் , நிருத்த கணபதி , பாணர் குலப்பெண் , அர்ஜூனன் , ரதி , மன்மதன் , சுப்பிரமணியர் , குறவன் , குறத்தி , கலிபுருஷன் முதலானோரின் சிற்பங்கள் அற்புத அழகு வாய்ந்தவை. இங்குள்ள கல்லிலான சிவகாமி அம்மையுடனான நடராஜர் மூர்த்தம் அழகு நிறைந்தது. இம்மண்டபத்தில் 985 தூண்களே உள்ளன. இரு உட்கோயில்கள் உள்ளன • மங்கையர்க்கரசியார் மண்டபத்தில் கூன் பாண்டியன் , மங்கையர்க்கரசியார் , சம்பந்தர் , குலச்சிறையார் முதலானோரின் வடிவங்கள் உள்ளன. சிவலிங்கத்திருமேனி இம்மனபத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. • மருது பாண்டியர் கட்டிய சேர்வைக்காரர் மண்டபமும் , அழகிய மரவிதானங் கொண்ட கல்யாண மண்டபமும் உள்ளன • வடக்கு ஆடி வீதியில் பெரிய கோபுரத்தை அடுத்து ஒவ்வொன்றும் 22 சிறிய தூண்களை கொண்ட 5 இசைத்தூண்களின் தொகுப்புகள் உள்ளன. இவ்வமைப்பு அழகும் , அதிசயமும் நிறைந்த ஒன்று. • கிழக்கு கோபுரத்திற்கு எதிரில் வசந்த மடபமான புது மண்டபம் உள்ளது. தடாதகைப் பிராட்டி , கல்யானை கரும்பு உண்பது , ராவணன் கயிலையை தூக்குவது , மீனாட்சி திருமணம் முதலான பல சிற்பங்கள் உள்ளன. தற்போது இம்மண்டபம் முழுவதும் கடைகள் நிறைந்துள்ளது. இம்மண்டபத்தின் எதிரே ராய கோபுரம் முற்றுப்பெறாமல் உள்ளது • இத்தலத்தில் திருமலை நாயக்கர் மகால் உள்ளது. கட்டிட கலைக்கு சிறப்பானதாக சொல்லப்படுகிறது • அருகில் அழகர் கோயில் , பழமுதிர்சோலை , திருப்பரங்குன்றம் முதலான தலங்கள் அமைந்துள்ளன • 36௦௦ ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையுடைய பதி. • 7-ம் நூற்றாண்டான சம்பந்தர் காலத்தில் சிவனாரின் கோயில் மட்டுமே இருந்ததாகவும் , 12-ம் நூற்றாண்டில் குலசேகர பாண்டியன் மீனாட்சியம்மைக்கு தனிக்கோயில் அமைத்ததாகவும் , 13-ம் நூற்றாண்டில் சுந்தர பாணியன் கீழ்க்கோபுரத்தையும் , சுற்றுமதில்களையும் அமைத்ததாகவும் , 14-ம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியன் மேற்குக் கோபுரத்தையும் , 16-ம் நூற்றாண்டில் தெற்கு கோபுரத்தை செவ்வந்திச் செட்டியாரும் , ஆயிரங்கால் மண்டபத்தை அரியநாத முதலியாரும் அமைத்ததாகவும் , 17-ம் நூற்றாண்டில் திருமலை நாயக்கர் புது மண்டபம் , அஷ்டசக்தி மண்டபம் , கிளிக்கூட்டு மண்டபம் முதலியவற்றை அமைத்ததாகவும் வரலாறுகள் சொல்லப்படுகின்றன. ஆடிவீதிகளில் உள்ள சுற்று மண்டபங்கள் ராணி மங்கம்மாள் அவர்களால் கட்டப்பட்டதாக வரலாறு சொல்லப்படுகிறது. • பார்வதியம்மை , இந்திரன் , பிரம்மா , திருமால் , கணபதி , வருணன் , வானவர்கோன் , துன்மதவேடன் முதலியோர் வழிபட்ட தலம் • கன்னி , கரியமால் , காளி , ஆலவாய் என்னும் நான்கு மாடங்கள் கூடிய தலம் • திருநீறு , அக்கமணி மாலை , சடைமுடி இவற்றை அணிந்து கொண்டு மூர்த்தி நாயனார் அரசாட்சி செய்த தலம் • மாணிக்கவாசகர் பாண்டிய மன்னனிடம் அமைச்சராய் இருந்து தொண்டு செய்த தலம் • சம்பந்தர் கூன்பாண்டியனின் ஜுரநோயையும் , கூனியும் நீக்கி நின்ற சீர் நெடுமாறனாக விளங்கும்படி செய்த தலம் • அனல் , புனல் வாதங்களில் தோற்ற சமணர்கள் கழுவேற்றப்பட்டது இத்தலத்தில் தான் • தருமபுர ஸ்தாபனர் வழிபடும் சொக்கலிங்கப்பெருமான் திருவடிவம் இத்தல தீர்த்தமான பொற்றாமரைக்குளத்தில் இருந்து கிடைத்ததாக வரலாறு • சித்திரைத்திருவிழா , ஆவணிமூலப்பெருவிழா , தைப்பூசத்தில் மாரியம்மன் தெப்பத்திருவிழா முதலான உற்சவங்கள் மிக விசேஷமானவை • இத்தலத்தில் ஆதி சொக்கநாதர் கோயில் , இம்மையிலும் நன்மை தருவார் கோயில் , தென் திருவாலவாய்க்கோயில் முதலான திருக்கோயில்களும் அமைந்துள்ளன. • மற்றொரு தேவாரப்பாடல் பெற்ற தலமான திரு ஆப்பனூர் இம்மதுரையின் ஒரு பகுதியாக திகழ்கிறது • “ தென்னாடுடைய சிவனே “ என்ற சொற்றொடர் தோன்றக் காரணமான தலம் • ராமர் , லட்சுமணர் , தேவர்கள் , முனிவர்கள் , இந்திரன் , வருணன் வழிபட்டு அருள்பெற்ற தலம் • திருவாதவூரார் மாணிக்கவாசகர் என்று அழைக்கப்பட்ட தலம் • மதுரை சுந்தரேஸ்வரர் கோயிலின் நான்கு திசைகளிலும் உள் மற்றும் வெளி ஆவரணத் தலங்கள் என எட்டு தலங்கள் அமைந்துள்ளன. • உள் ஆவரணத் தலங்களாக கிழக்கில் ஐராவதம் வழிபட்ட ஐராவதநல்லூர் முக்தீஸ்வரர் கோயிலும் , மேற்கில் சிவனார் தம்மைத்தாமே அர்ச்சித்து வழிபட்ட இம்மையிலும் நன்மை தருவார் கோயிலும் , வடக்கில் குபேரன் வழிபட்ட பழைய சொக்கநாதர் கோயிலும் , தெற்கில் எமன் வழிபட்ட தென்திருவாலவாய்க் கோயிலும் அமைந்துள்ளன • வெளி ஆவரணத் தலங்களாக கிழக்கில் திருபுவனம் தலமும் , மேற்கில் திருவேடகமும் , வடக்கில் திரு ஆப்பனூரும் , தெற்கில் திருப்பரங்குன்றமும் அமைந்துள்ளன • திருக்கூடல் கூடலழகப்பெருமாள் கோயிலும் , திருமோகூர் சக்கரத்தாழ்வார் கோயிலும் சுமார் 1௦ கிமீ தொலைவில் அமைந்துள்ளன • சகல ஐஸ்வர்யங்கள் பெறவும் , கல்யாண வரம் பெறவும் , மழலை பாக்கியம் பெறவும் , மன அமைதி பெறவும் , முக்தி பெறவும் வழிபடவேண்டிய தலம் • தவம் , தியானம் செய்யவும் உகந்த தலம் இது • எப்போதும் உற்சவங்கள் நடந்தவாறே இருக்கும் தலம் • நவக்கிரகங்களில் புதனுக்கான தலம் • உலகிலேயே சுமார் 3 கோடி சிற்பங்கள் உள்ள ஒரே கோயில் இது • ஒவ்வொரு தமிழ மாதப்பிறப்பன்றும் மீனாட்சியம்மையின் தங்கத்தேரை அனைவரும் இழுக்கலாம். மற்ற நாட்களில் பணம் செலுத்தி அலுவலகத்தில் அனுமதி பெற்றபின்பே தேர் இழுக்கமுடியும் • திருவனந்தல் , விளாபூஜை , காலைசந்தி , திருக்காலசந்தி , உச்சிக்காலம் , சாயரட்சை , அர்த்தஜாமம் , பள்ளியறை பூஜை என எட்டு கால பூஜை நடைபெறும் தலம் • சித்திரையில் நடைபெறும் சித்திரைத்திருவிழா மிக விசேஷமானது. சித்திரை வளர்பிறையில் 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கி , பின் ஒவ்வொரு நாளும் சிவனாரும் , அம்மையும் வாகனங்களில் வீதியுலா வருவதும் , எட்டாம் நாளன்று மீனட்சியம்மைக்கு பட்டாபிஷேகம் நடைபெற்று செங்கோல் வழங்கும் வைபவமும் , 9 – ம் நாள் மீனாட்சி திக்விஜயமும் , 1௦ - ம் நாள் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் , 11 – ம் நாள் தேர் திருவிழாவும் நடைபெறுகின்றன. 12 – ம் நாள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதுடன் இத்திருவிழா நிறைவுபெறுகிறது • வைகாசியில் - 1௦ நாள் வசந்த விழா , சம்பந்தர் திருவிழா , ஆனியில் - ஊஞ்சல் திருவிழா , ஆடியில் - முளைக்கொட்டு திருவிழா , ஆவணியில் - 12 நாட்கள் நடைபெறும் ஆவணிமூலப்பெருவிழாவில் கருங்குருவிக்கு உபதேசம் செய்தது , நாரைக்கு முக்தி அளித்தது , மாணிக்கம் விற்றது , தருமிக்கு பொற்கிழி அளித்தது , உலவாக்கோட்டை வழங்கியது , அங்கம் வெட்டியது , வளையல் விற்றது , குதிரைக்கயிறு மாற்றியது , பிட்டுக்கு மண் சுமந்தது , விறகு சுமந்தது முதலான லீலை உற்சவங்கள் திருவிழா , புரட்டாசியில் – நவராத்திரி திருவிழா , ஐப்பசியில் – ஆறு நாட்கள் கோலாட்ட உற்சவ திருவிழா , அன்னாபிஷேகத் திருவிழா , கார்த்திகையில் – தீபத்திருவிழா , சோமவார 1௦௦8 சங்காபிஷேகங்கள் திருவிழா , மார்கழியில் – மீனாட்சியம்மைக்கு நான்கு நாட்கள் எண்ணெய்காப்பு உற்சவம் , ஆருத்ரா தரிசன திருவிழா , தை மாதத்தில் – மகர சங்கராந்தியன்று கல்யானை கரும்பு தின்ற திருவிளையாடல் உற்சவம் , வலை வீசியருளிய திருவிளையாடல் உற்சவம் , தைப்பூசத்தன்று வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் நடைபெறும் தெப்பத்திருவிழா உற்சவம் , மாசியில் – மகா சிவராத்திரியன்று சகஸ்ரசங்காபிஷேகமும் , நான்கு கால பூஜையும் நடைபெறும் உற்சவம் , பங்குனியில் – பங்குனி உத்திரம் , திரு ஆப்பனூர் தலத்திற்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளும் உற்சவம் என மாதந்தோறும் உற்சவங்கள் நடந்தவாறு இருக்கும் தலம். • 5 வாசல்கள் கொண்ட ஒரே தலம். கிழக்குப் பக்கம் சிவனாருக்கும் , அம்மைக்கும் என இரு வாசல்கள் உள்ளன. - திருக்கோயில் வாட்-சப் குழு 93400 91600 குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www.aanmeegamalr.com