
ஒரு சில செயல்களை நாம் செய்யும் போது அது நல்ல செயலாக தெரிந்தாலும், அதில் ஒரு சில தவறுகளால் நல்ல செயலாலும் ஒரு சில சிறு தோஷங்கள் உண்டாகிவிடும், அவற்றால் பெரிய கெடுபலன்கள் இல்லையென்றாலும், சிறு சிற கெடுபலன்கள் உண்டாக்கிவிடும். எனவே அனைவரும் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டிய சிறு தோஷங்கள் உண்டாக்கும் செயல்களை நமது ஆன்மிகமலர்.காம் உங்களுக்கு தொகுத்து வழங்குகிறது. இதை உங்களுக்கு தெரிந்த ஆன்மிக அன்பர்களுக்கும் எடுத்து சொல்லுங்கள்.
1.ஒரு கோவிலுக்கு எடுத்து சென்ற பொருளை அங்கே சேர்த்து விடவேண்டும் அதை மற்ற கோவிலுக்கு எடுத்து செல்ல கூடாது .
2.நாம் வீட்டில் இருந்து எடுத்து வந்த உணவை கோவிலில் அமர்ந்து உண்ணும் முன் அங்கே உள்ள ஒரு தெய்வத்திற்கு படைத்தது விட்டு உண்ணவேண்டும் .
3. காலை குளிக்காமல் உணவு உன்ன கூடாது .
4.வீட்டில் உள்ள தெய்வம்களை வணங்காமல் வெளியே செல்ல கூடாது .
5.தெய்வம்களுக்கு அலங்கரித்த பூக்களை நீரில் சேர்க்காமல் தரையில் வீசகூடாது.
6.மண்,அல்லது மற்ற உலோகத்தினால் ஆன விளக்கில் மட்டும் தீபம் ஏற்ற வேண்டும் ..
7.நாயிக்கு உணவு வைத்து விட்டு அதை ரசிக்க கூடாது .
8.பூசணிக்காயை பெண்கள் உடைக்கக் கூடாது
9.இரவில் துணி துவைக்கக் கூடாது. குப்பையை வெளியே கொட்டக் கூடாது
10.தீபாவளி தவிர மற்ற நாட்களில் அதிகாலைப் பொழுதில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளக்கூடாது.
11.வீட்டில் தீபத்தை ஆடவர்கள் அணைக்கக் கூடாது.
12.அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.
13.ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.
14.செவ்வாய் கிழமையும், வெள்ளிகிழமையும், மனைவியுடன் சண்டை போட கூடாது ...
15.வெறும் தரையில் அமர்ந்து சாப்பிடக்கூடாது
இவைகள் எல்லாம் அறிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் சின்ன சின்ன தோசம்களாக நம்மிடம் சேர்ந்து நம்முடைய ஆரோக்கியத்தை கெடுப்பதுடன்,நம்முடைய குல தேவதை,தெய்வம்,மற்றும் அருள்களை தரும் குருமாரின் ஆசிகளையும் கெடுத்துவிடும் ....
குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்
www. aanmeegamalar.com
எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com