logo
home ஆன்மீகம் மே 22, 2016
இந்து மதத்தின் உன்னதத்தால் ஈர்க்கப்படும் வெளிநாட்டினர், பரப்பாமல் பரவும் ஒரே மதம் இந்து மதம்
article image

நிறம்

ஐரோப்பியாவில் வேகமாக வளர்ந்து வரும் மதங்களில் இந்துதர்மம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இந்து தர்மத்தின் ஆழ்ந்த அகன்ற தத்துவங்களும் போதனைகளும் எல்லா வகையான மக்களுக்கும் ஏற்புடையதாக அமைந்துள்ளது. மற்ற மதங்களைவிட இந்து மதத்தில் சுதந்திரமும், கட்டுப்பாடு இல்லாத தெய்வ வழிபாட்டு முறையாலும், வாழ்வியலுடன் சம்பந்தப்பட்ட இந்துமதத்தால் ஈர்க்கப்படும் வெளிநாட்டினர் வெகு வேகமாக இந்து கலாசாரத்திற்கு மாறிவருகின்றனர். ஐரோப்பியாவில் இந்துக்களின் எண்ணிக்கை: ஆஸ்திரியா - 8,200 பெல்ஜியம் - 6,235 டென்மார்க் - 5,468 பிரான்ஸ் - 121,312 ஜெர்மனி - 1,20,000 இத்தாலி - 1,15,000 நெதர்லாந்து - 2,15,000 நோர்வே - 7,382 போர்த்துகல் - 9,000 ஸ்வீடன் - 10,837 ஸ்விட்சர்லாந்து - 27,839 யு.கே (லண்டன்) - 8,32,000 மேற்கண்ட எண்ணிக்கையில் இந்து தர்மத்தை நாடி மக்கள் வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான இந்துக்கள் வாழ்கின்றனர். மேலும் பெரும்பான்மை மக்கள் யோகா, வேதாந்தம், ஆயுர்வேதம் போன்றவற்றை பயின்று வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளிலே லண்டன், இத்தாலி, நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இந்துக்கள் வாழ்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில் 10,000-க்கும் அதிகமானோர் இந்துதர்மத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்து தர்மம் உலகளாவிய நிலையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாமும் நம்முடைய தர்மத்தையும் தத்துவங்களையும் பிழையறக் கற்று அதன்படி வாழ்க்கையில் நடந்துகொள்ள வேண்டும். குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www. aanmeegamalar.com எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com