
மகாபாரதத்தில கா்ணன் கேட்பவா்ககு இல்லை என்று வாரி வழங்கும் குணம் படைத்தவா், கா்ணனின் இறப்பிற்கு பின் சொர்கத்தில் கா்ணனுக்கு மிகவும் பசி எடுத்ததாம்,
சொர்கத்தில் பசி என்பதே எடுக்காது,கா்ணனுக்கு குழப்பம். தாங்கமுடியாத பசி.
அவ்வழியே வந்த நாரதரிடம் பசி எடுப்பதற்கான காரணம் என்ன என வினவினார் கர்ணன்.
உடன் நாரதா் தனது ஞானதிருஷ்டியால் காரணம் என்ன என அறிந்து உடன் கா்ணனின் ஆள்காட்டி விரலை கா்ணனின் வாயில் வைக்க சொனனார். உடன் கா்ணனின் பசி நின்றது. கா்ணன் குழப்பமானார். வாயிலிருந்து விரலை எடுத்ததும் மீண்டும் பசி எடுத்தது. காரணத்தை நாரதரிடம் வினவினார்.
நாரதா் அதற்க்கு "கா்ணா நீ பூலோகத்தில் கேட்டவா்க்கு இல்லை என அனைத்து தா்மமும் செய்தாய் ஆனால் நீ அன்னதானம் மட்டும் செய்யவில்லை, உன்னிடம் ஒரு ஏழை அன்னதான சத்திரம் எங்கே என கேட்டபோது, அவருக்கு உனது ஆள்காட்டி விரலால் அன்னதான சத்திரத்தை காண்பித்தாய் அதனால் தான் உனது விரலை வாயில் வைத்தவுடன் பசி எடுக்கவில்லை.என்றார் நாரதர்.
கைகாட்டியதற்கே இப்படி எனறால் அன்னதானமிட்டால்? எவ்வளவு புண்ணியம் ஏற்படும் என்பதை அறியவே இந்து சமயத்தில் இந்த நிகழ்வை புகுத்தியுள்ளனர் நமது முன்னோர்கள்.
குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்
தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம்