
ஏதோ ஒரு மந்திரம் நம்மையும் அறியாமல் நம்முள்ளே அடிக்கடி நம் ஆழ்மனத்தில் ஓடிக்கொண்டிருக்கும் மந்திரம் சிலருக்கு அம்மா, அப்பா, சிலருக்கு அண்ணன், தம்பி , சிலருக்கு அக்கா, தங்கை சிலருக்கு நண்பர்கள், சிலருக்கு உறவினர், சிலருக்கு எஜமானன், சிலருக்கு ஆலயம், சிலருக்கு குருமார்கள், சிலருக்கு இறை நாமங்கள் , என்று எதுவாயினும் சரி ஏன் வெற்றுச் சிந்தனையும் கூட ஒரு மந்திரம் தான்.
மந்திரம் என்றால் ஏதோ ஆன்மீக தொடர்பு உள்ளது என்று எண்ண வேண்டாம்.
நம் எண்ணத்தில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் எந்த ஒரு வார்த்தையும் மந்திரம் தான்.
இதில் ஒரு சிறு .விஷயம் என்னவென்றால் ஒழுக்கத்தின் அடிப்படையில் எழுவது தான் மந்திரம் .
ஒழுக்கம் என்பது மேலான சிந்தனையினை . கொண்டது.
ஒழுக்கமின்றி தொடர்ந்து ஓடும் சிந்தனை மந்திரம் ஆகாது.
"மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டா" எனும் வார்த்தையை பாருங்கள்..
செம்மை (ஒழுக்கம் ) இருந்தால் மந்திரம் வேண்டாம் எனில் செம்மையும், மந்திரமும் ஒன்றே என்று தானே பொருள்,
– Thali + 91 96009 99279
குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்
தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம்
www. aanmeegamalar.com
எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com