40 வருடம் ஜலவாசம், 48 நாட்கள் பக்தர் களுக்கு காட்சி, பின்பு மீண்டும் ஜலவாசம். இது தொடர்ந்து தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக் கோயிலில், நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே இரண்டு குளங்கள் உள்ளன. இதில் தென்திசையில் உள்ள நீராழி மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் உள்ள ஒரு மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு இருக்கிறார் அத்தி வரத பெருமாள். இவர் ஜலவாசம் செய்யும் இந்த குளத்தின் நீர் என்றும் வற்றுவதில்லையாதலால் பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்பட மாட்டார். பெருமாளின் தாருமயமான திருமேனி (மரத்தினால் செய்யப்பட்டது) மிகப்பெரிய அத்தி மரத்தால் வடித்து, பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரம்மனின் யாகத் தீயினின்று தோன்றியதால் சிறிது பின்னப்பட்டுவிட்டார். எனவே அசரீரி மூலம் தன்னை ஆனந்தத் தீர்த்தத்தில் விட்டுவிட்டு பழைய சீவரத்திலிருந்து சிலையை காஞ்சியில் பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார். பெருமாள் பெரும் உஷ்ணத்தைத் தணிக் கவே தெப்பக் குளத்தில் வாசம் செய்கிறாராம். அப்படியே இவரை வெள்ளித் தகடு பதித்த பெட்டியில் சயனக் கோலத்தில் வைத்து ஆனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்து விட்டனர். பழைய சீவர பெருமாளை தேவராஜப் பெருமாள் என பிரதிஷ்டை செய்து விட்டனர். ஆனந்த தீர்த்தம் என்றும் வற்றாது. எனவே நீரை அருகில் உள்ள மற்றொரு குளத்திற்கு மாற்றி விட்டு ஆதி அத்தி வரதரை வெளியே கொண்டு வருவார்கள். வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் சயன கோலமாக, அமிர்தசரஸ் என்னும் அந்த குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள், 40 வருடங்களுக்கு ஒரு முறை, மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலமாக எழுந்தருளி இருப்பார். வசந்த மண்டபத்தில் 48 நாட்கள் பக்தர்களுக்குசேவை சாதிப்பார்... நின்ற கோலத்திலும், சயனக் கோலத்திலும் தரிசனம் தந்தபின் மீண்டும் அனந்தத் தீர்த்தத்தில் (குளத்தில்) சயனித்து விடுவார். பக்தர்கள் மிகவும் தொன் மையான இந்த அத்தி வரதரை, உற்சவ விழா வழிபாட்டோடு கண் குளிர தரிசிக்கலாம். பிறகு மீண்டும் வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் வைத்து குளத்தில் மூழ்கடிக்கப் பட்டுவிடுவார். இந்த வைபவம், 1939&ஆம் ஆண்டும், 1979&ஆம் ஆண்டும் நடைபெற்றது. இதில் பல்வேறு ஊர்களிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் அருள் பெற்று திரும்பினர். இந்த வைபவம் 01.07.2019- அன்று காஞ்சியில் மீண்டும் நடைபெறவுள்ளது. 27.06.2019 அன்று அத்திவரதரை குளத்திலிருந்து வெளியே எடுக்கும் பணி துவங்கப்பட்டது, இதற்கு முன்பே குளத்தில் இருந்த தண்ணீர் முழுவதும் அருகில் இருந்த மற்றொரு குளத்திற்கு மாற்றப்பட்டது. பின் 12.00 மணிக்கு அத்தி வரதரை வெளியே எடுக்கும் பணி துவங்கப்பட்டது. 12.10 மணிக்கு இரண்டாவது தொட்டவுடன் குளத்தில் இருந்த சேரும் சகதியும் அகற்றப்பட்டது 2 மணிக்கு ஓரளவு பணி முடியும் தருவாயில் 6 வது படி தாண்டிய சேரும் சகதியும் அகற்றப் பட்டது. அப்போதுதான் எம்பெரு மான் வரதரின் பொற்பாதம் தெரிந்தது! அங்கு பணியில் இருந்த சுமார் 70 நபரும் வரதா, வரதா என கோஷம் எழுப்பி உற்சாகம் அடைந்தனர். 2.45 மணிக்கு அத்தி வரதரின் முழு வடிவமும் மிக அழகாய் தெரிந்தது வரதரின் முகம்! பார்த்ததும் அனைவரும் புல்லரித்து போயினர். 3.15 மணிக்கு வரதர் மிகப் பாதுகாப்புடன் வெளியே எடுக்கப்பட்டார். கோயில் முழுவதும் சிசிஜிக்ஷி கேமரா உள்ளதால், வரதர் துணி சுத்தப்பட்டு வசந்த மண்டபம் எடுத்து செல்லப்பட்டார் அங்கே 4 மணிக்கு திருமஞ்சணம் செய்யபட்ட பிறதி அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந் நிகழ்வில் ஈடுபட்ட பட்டர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன், எங்களது வாழ்நாளில் இது ஒரு மிகப் பெரிய புனிதமான நாள் என்று உணர்ச்சி பெருக்குடன் கூறினர். மூன்று நாட்கள் வரதரை புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வந்தது. 01.07.2019 முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவுள்ளனர். தொடர்ந்து 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். இந்த அற்புத வைபத்தில் அவசியம் பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் ஆசியை பெறுவோம். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒருமுறை மட்டுமே இந்நிகழ்வினை பார்க்க முடியும், பாக்கியம் இருந்தால் வாழ்வில் 2 முறை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் தற்போது உலகெங்கிலும் உள்ள ஒருசிலர் இந்த நிகழ்வை 2வது முறை பார்க்க ஆவலுடன், வயது முதிர்வுடன் காத்திருப்பதாக தெரிவித்தனர்.
நிறம்