ஆன்மிக அன்பர்கள் அனைவருக்கும் ஆன்மிகமலர்.காம் சார்பாக சிரம்தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்....
இந்து மதம் என்பது பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உருவான ஒரு “வாழ்வியல் மதம்” என்பதை தற்போது உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் உள்ளது. இதற்கு காரணம். எந்தவிதமான கட்டுப்பாடும் இந்து மதத்தில் கிடையாது.
“இப்படித்தான் வழிபட வேண்டும்” என்ற கட்டுப்பாட்டையும் ஏற்கிறது. “இப்படித்தான் வழிபட வேண்டும் என்பது அவசியம் இல்லை” என்ற சுதந்திரத்தையும் ஏற்கிறது இந்து மதம்.
மேற்கண்ட, “அளவுக்கு மீறிய சுதந்திரத்தை சுவாசித்த நாம், நமது முன்னோர்கள் சொல்லிச் சென்ற பல்வேறு வழிமுறைகளை கடைபிடிக்காததால் தான், தற்போது பல்வேறு சிக்கலை அனுபவித்து வருகிறோம்” என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இதை தற்போது மக்கள் உணரத் துவங்கியதால்தான். குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, பிரதோஷம், சங்கட ஹர சதுர்த்தி, அமாவாசை, பௌர்ணமி, சஷ்டி போன்ற விஷேச நாட்களில் கோயில்களில் கூட்டம் வழிந்து கொண்டிருக்கிறது.
“பொருளாதாரமும், ஆடம்பரமும் மக்களை ஆக்கிரமித்ததால்தான், நமது முன்னோர்களின் வழிமுறைகளை மக்கள் மறந்து தற்போது அவதிப்படுகின்றனர்” என்று பல்வேறு மகான்கள் கூறுவதை மறுக்க முடியாது.
பொருளாதாரத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதிலேயே, மனித ஆயுளில் முக்கால் பாகம் செல்வதால், இந்து மதம் என்ற கடலில் உள்ள அமிர்தத்தை மக்கள் சுவைக்க முடியாமல் துன்பப்படுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையை உணர்ந்துதான், தற்போதைய டெக்னாலஜிக்கு ஏற்ப கணினி, செல்போன், டேப்லெட் போன்றவற்றின் உதவியால் படிக்கக்கூடியவகையில் “ஆன்மிகமலர்.காம்” ("aanmeegamalar.com'') என்ற இணைய தளத்தை துவக்கி, கடுகை கோடிக்கணக்கில் உடைத்தால் வரும், மிகச்சிறிய அளவிலான துகளைப் போன்று, ஆன்மீக சேவையை, அணிலாக மாறி செய்து வருகிறோம்.
இந்து மதத்தைப்பற்றியும், இந்துக் கடவுள்களின் சிறப்புகளைப் பற்றியும், இந்திய இயற்கை மருத்துவத்தையும், ஆன்றோர் சான்றோர் போன்றவர்களின் தத்துவங்களையும், ஒரு சில செயலால் கிடைக்கக் கூடிய பலன்களைப் பற்றியும் எளிய முறையில், சிறிய அளவில் “ஆன்மிகமலர்.காம்” ("aanmeegamalar.com'') என்ற இணைய தளத்தின் வாயிலாக மக்களுக்கு எடுத்துச் சொல்கின்றோம்.
எங்களின் சேவையை தற்போது இன்னும் ஒருபடி மேலாக விரிவு படுத்த விரும்புகிறோம் .........“இ-புக்”"e-book''...... என்ற தொழில் நுட்ப உதவியின் வாயிலாக மேற்கண்ட எங்களது பணியை செய்ய முன்வந்துள்ளோம்.
ஆன்மீகச் செய்திகள், தத்துவங்கள், மருத்துவம், பலன்கள், உடல்நலம் போன்ற தகவல் களை புத்தக வடிவில் கணிணியில் படிக்கும் வகையில் “இ-புக்”"e-book'' வடிவில் மாதம் இரண்டு புத்தகம் தயாரிக்க முடிவு செய்துள்ளோம்.
இதை எந்தவித கட்டணம் இன்றி வாசகர்களுக்கும், ஆன்மிக அன்பர்களுக்கும் இ-மெயில் (e-mail) வாயிலாக இலவசமாக வழங்க விரும்புகின்றோம்.2017 ஆம் வருடம் ‘விநாயர் சதுர்த்தி’ தினத்தில் எங்களது இந்தச் சிறிய பணியை துவக்கவுள்ளோம். எங்களது இந்த விருப்பத்திற்கு, இறைவன் கட்டளையிட்டால்தான் செய்ய முடியும் என்பதால் ஆன்மீக அன்பர்கள். எங்களது முயற்சி வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். எங்களது சேவைக்கு உங்களின் ஆதரவு அவசியம் என்பதால் உங்களது இமெயில் முகவரியை எங்களுக்கு தெரியப்படுத்தவும்.
இதற்கு முன்பு e-mail முகவரியை அனுப்பியவர்கள் மீண்டும் அனுப்ப வேண்டாம் நீங்கள் நமது வாசகர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் புதிய வாசகர்கள் மட்டும் தங்களது e-mail முகவரியை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அன்பர்கள் தங்களது
பெயர்,
இ-மெயில் (e-mail) முகவரி
போன்எண்
போன்றவற்றை aanmeegamalar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இமெயிலில் இலவசமாக அனுப்பப்படும் முதல் இந்துமதம் சம்பந்தப்பட்ட புத்தகமாக நமது “ஆன்மிகமலர்.காம்” ("aanmeegamalar.com'') திகழும்.
உங்கள் நலன் விரும்பிகளுக்கும் இந்த தகவலை பரப்பி எங்களின் சேவையில் நீங்களும் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
ஆசிரியர் ச.நாகராஜன்,
மேலும் தொடர்புக்கு (இந்திய நேரப்படி) காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசிஎண் 07299992699
நிறம்