நீல எருக்கு, ராம எருக்கு என 9 வகையான எருக்குகள் இருக்கின்றன. எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் மழையில்லாமல் இருந்தாலும் கூட,சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை கிரகித்து வளரும் தன்மை கொண்டது. அதன் பருவ காலத்தில் பூத்து, காய்த்து, வளர்ந்துவிடும். இதில் விஷேச அம்சம் கொண்டதுதான் வெள்ளெருக்கு.இதை வீட்டிலும் வளர்க்க கூடாது. வெள்ளெருக்கன் பூ பூத்த இடத்தில் வேதாளம் வளம் வரும் . இதன் பூவை வைத்து விநாயகருக்கும், சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம்.வெள்ளெருக்கம் பூ சங்கை பஸ்மமாக்கப் பயன்படுகிறது. வெள்ளெருக்கு பட்டையை நூலுக்குப் பதில் விளக்குத் திரியாக போட்டு வீட்டில் எரிக்க சகல பூதங்களும் விலகி ஓடும்.வெள்ளெருக்கு வடக்கு வேரில் மணிமாலை செய்யலாம். விநாயகர் செய்து வழிபடலாம். ஆகர்ஷணம் எட்டு வகைப்படும். இதில் தன ஆகர்ஷணம் பண வரவை அள்ளிக் கொடுக்கக் கூடியது இந்த வெள்ளெருக்கு விநாயகர். வெள்ளெருக்கு விநாயகர் என பல இடங்களில் விற்பனை செய்கிறார்கள். வேர்ப்பகுதிக்குபதில் தண்டுப்பகுதியில் விநாயகர் செய்து விற்கிறார்கள். அதனால், அது விரைவில் உளுத்துப் போய் உதிர்ந்து விடுகிறது நம்பிக்கைக்குரிய சித்த வைத்தியர் மூலமாக வெள்ளெருக்கு செடியை அடையாளம் கண்டு, அதன் வேரை எடுத்து உள்ளூர் ஆசாரியை வைத்து வெள்ளெருக்கு விநாயகர் செய்து கொள்ளவும். ஒரு வெள்ளிக் கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் ராகு காலத்தில், அதற்கு அரைத்த மஞ்சள் கலவையைத் தடவவும்.அதற்கு அடுத்த வெள்ளிக் கிழமை காலை 10.30 முதல் 12க்குள் ராகு காலத்தில் சந்தனம் அரைத்த கலவையை அதன்மேல் தடவி, நிழலில் காய வைக்கவும். இப்பொழுது அதன் கதிர்வீச்சுக்கள் கட்டுப்படுத்தப்பட்டு, நன்மையான கதிர்கள் நம் வீட்டில் பரவும்படி தயார் செய்து விட்டோம். இனி, அவரவர் இஷ்டம் போல வழிபாடு செய்யலாம்; தூப தீப நைவேத்தியம் செய்யலாம்; ஸ்ரீ சொர்ணகணபதி மந்திரம் சொல்லி, வெள்ளெருக்கு விநாயகரை வழி பட்டால், தன ஆகர்ஷணம் உண்டாகும்.
நிறம்