logo
home ஆன்மீகம் மார்ச் 02, 2019
ஆண் பெண் துரோகங்களைத் தீர்க்கும் சிவராத்திரி விரதம்
article image

நிறம்

பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும்; ஏனென்றால்,பல சதுர்யுகங்கள் முடிந்து,பல கல்பங்கள் முடிந்து, இதில் வரும் இரவுகள் அனைத்திலும் அன்னை பராசக்தி ஈசனை பூஜை செய்திருக்கிறாள்; ஆகவே,சிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி; ஆலமரத்தடியில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி யோகத்தில் அமர்ந்திருப்பதற்குக் காரணமே சிவராத்திரி மகிமையை எடுத்துச் சொல்வதற்காகத்தான்; திங்கட்கிழமையன்று சதுர்த்தசி திதி பகலும், இரவும் 60 நாழிகைகள் சேர்ந்து வந்தால், அது யோக சிவராத்திரி ஆகும்; அதாவது,யோகியர் மறந்திடாத சிவராத்திரி ஆகும்; தை மாதத்தில் வரும் தேய்பிறை சிவராத்திரியே பட்ச சிவராத்திரி ஆகும்; ஒரு (தமிழ்)வருடத்திற்கு 12 மாதங்கள்! ஒரு மாதத்திற்கு இரண்டு சிவராத்திரிகள்! ஆக ஆண்டிற்கு 24 சிவராத்திரிகள்! அவை வளர்பிறை சதுர்த்தசி,தேய்பிறை சதுர்த்தசி ஆகும்;இது நித்திய சிவராத்திரி ஆகும்; மாசிமாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி இரவுதான் மகாசிவராத்திரி ஆகும். மாதம் தோறும் வரும் சிவராத்திரியை மாத சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது; சிவராத்திரிகள் இப்படி ஐந்து விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன; ஈசனின் ஐந்து முகத்தை நினைவூட்டும் விதமாகவும், பஞ்ச பூதங்களின் தத்துவங்களை விளக்கும் விதமாகவும் ஐந்துவித சிவராத்திரிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன; இவைகளில் ஏதாவது ஒரே ஒரு சிவராத்திரி விரதம் இருந்தாலே போதும்; மனிதப் பிறவி எடுத்தமைக்கான பலனை அடைந்துவிடமுடியும் என விளக்குகிறார் சித்தர்களின் தலைவரான அகத்தியர்!!! ஒரு மனிதன் சதுர்த்தசி திதியில் இயற்கையான முறையில் இறந்து,அமாவாசையன்று தகனம் செய்தால்,அந்த ஆன்மா சிவலோகத்தில் சிவகணமாக உயர்ந்த நிலையை அடைவார். சில நேரங்களில் சிவராத்திரி திதி பகலிலும் வரும்; அப்படி வந்தால், அந்த சிவராத்திரி பூஜையை பகலில்தான் செய்ய வேண்டும்; சதுர்த்தசி திதி நேரத்தில் தான் சிவராத்திரி வரும்; மதியம் வரை திரயோதசி திதி இருந்து, அதன் பிறகு, சதுர்த்தசி திதி துவங்கினால், மதியத்திற்குள் உணவு உண்டுவிடவேண்டும்; மதியம் சதுர்த்தசி திதி ஆரம்பித்ததும், சிவராத்திரி பூஜைகளைச் செய்ய வேண்டும்; சிவராத்திரி என்பது இரவில் தான் வரவேண்டும் என்பது அல்ல; இந்த சிவராத்திரி பூஜையால் பெண்களுக்கு இழைத்த துரோகம்; பெண்களுக்கு செய்த சாபம்; பெண்களுக்கு இழைத்த கொடுமைகள் நீங்கும்; அதே போல, ஒரு பெண் ஆணுக்கு துரோகம் செய்திருந்தால், தவறை உணர்ந்து திருந்தி, இந்த சிவராத்திரி பூஜையைச் செய்தால், ஆணுக்கு செய்த துரோகம் மறைந்துவிடும்.