உத்திரப்பிரதேசத்தில் தங்கப் புதையல் இருப்பதாக 2013ம் ஆண்டு சோபன் சர்க்கார் என்ற சாமியார் கூறினார், அவர் கனவில் தோன்றிய மன்னர் ராஜாராவ் ராம்பக்ஸ் சிங், இந்தியாவை கொள்ளையடிக்க வந்த, கிறிஸ்தவ வெள்ளையர்களின் சூழ்ச்சியால் மரணமடைந்ததாகவும், இன்றும் அந்த தங்கம் அப்படியே இருப்பதாகவும் கூறினார். இந்தப் புதையலை அரசாங்கத்தைத்தான் சேரவேண்டும் என்று எண்ணிய சோபன் சர்க்கார் சாமியாரை, பல்வேறு பகுத்தறிவு புலிகள் கேலியும் கிண்டலும் செய்தனர். உத்திரபிரதேசத்தை ஆண்ட அகிலேஷ் யாதவ், சாமியார் கனவில் வந்த அரசனின் அரண்மனையைச் சுற்றி பள்ளம் தோண்டி ஆராய்ச்சி மேற்கொண்டதோடு நின்றுவிட்டது. கனவில் வந்த படி தங்கம் ஏதும் கிடைக்கவில்லை என்று அறிக்கை கொடுத்துவிட்டு தேடுதல் முயற்சியை கைவிட்டது. ஆனால், இன்று சாமியார் கூறிய இடத்திலிருந்து 390 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோன்பத்ரா எனும் மாவட்டத்தில், ஹார்தி மற்றும் சோனா பகதி ஆகிய பகுதிகளில் தங்கச் சுரங்கங்கள் உள்ளன என்பதை இந்திய புவியியல் ஆராய்ச்சித்துறை, உத்தரப்பிரதேச மாநிலத்தின் புவியியல் ஆராய்ச்சிதுறை மற்றும் சுரங்கத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக, அந்த மாநிலத்தின் சுரங்கத்துறை இயக்குநர் ரோஷன் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``சோன்பத்ராவில் அதிக தங்கம் இருக்கும் இரண்டு பெரிய தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சோனா பகதி பகுதியில் சுமார் 2,943 டன் தங்கமும் ஹார்தி பகுதியில் சுமார் 646 கிலோ தங்கமும் இருக்கலாம்” என்று கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், சோன்பத்ரா மாவட்டத்தின் சுங்கத்துறை அதிகாரி கே.கே.ராஜ், ``ஆய்வுகள் முழுவதுமாக முடிந்தபிறகு அறிக்கையை சமர்பிக்க உள்ளோம். பின்னர், அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார். 2013ல் சாமியார் கூறியதைவிட இரண்டு மட்ங்கு அதிக தங்கம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, தற்போது கிடைத்துள்ள தங்கத்தின் அளவுகள் உறுதியாகும் பட்சத்தில், உலகில் அதிக தங்கத்தை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என கூறப்படுகிறது. தற்போது, இந்தியாவில் இருக்கும் தங்கத்தின் மதிப்பைவிட 5 மடங்கு அதிகமாக இருக்கும். உலக தங்க கூட்டமைப்புகளின் தரவுகளின்படி, அமெரிக்கா 8,133.5 டன் தங்கத்துடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகள், தற்போது அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தங்கத்தைத் தவிர ஆண்டலூசைட், அலுமினியம் நெசோலிகேட், பொட்டாசியம் மற்றும் இரும்பு போன்ற பிற தாதுக்களும் டன் கணக்கில் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருப்பதை புவியியல் மற்றும் சுங்கத்துறை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நான்கு மாநிலங்களின் எல்லைகளைக் கொண்டுள்ள சோன்பத்ரா மாவட்டம், பழங்குடிகள் அதிகம் வசிக்கும் பகுதியாக அறியப்படுகிறது. இன்று இந்தியாவே தங்க மலைகளைக் கொண்டாடிவருகிறது. இந்நிலையில் 2013ல் சாமியார் கனவு கண்டு சொன்ன சம்பவத்திற்கு எல்லாம் அரசு வேலை வெட்டி இல்லாமல் பூமியை தோண்டுவதா? அரசு அதிகாரிகளுக்கு வேறு வேலை இல்லையா? என நாடு முழுவதும் உள்ள நாத்திக அறிவுஜீவிகள்... பகுத்தறிவு கம்யூனிஸ்டுகள் பரிகாசித்தது இன்று பலரும் கேலி கிண்டலாக சமூக வலைதளத்தில் கிண்டல் செய்து வருகின்றனர். கணினி யுகத்தில் சாமியாரின் கனவை நம்பி தங்கப்புதையல் தேடுவதா என ... இந்துமத வெறுப்பு ஊடகங்கள் எல்லாம் இதையே சாக்காக வைத்து நம் தர்மத்திற்கு எதிராக அன்று கூவியது. தற்போது அதே உபி மாநிலம் சோன்பத்ராவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 3500 டன் 12 லட்சம் கோடி மதிப்பு கொண்ட தங்கச் சுரங்கங்கள் நம் தேசத்தின் தலையெழுத்தையே மாற்றும் என நாம் மகிழ்ச்சி கொள்ளும் நேரத்தில். அந்த சோபன் சர்க்கார் என்ற சாமியாரின் கனவையும் ... நம் தேசத்தின் ஆன்மீக சக்தியையும் நினைவுகூர்வது நமது கடமை . அன்று இந்து சமய ஆன்மிகத்தை கேலியும் கிண்டலும் செய்த பகுத்தறிவு புளுதிகளின் முகம் தற்போது மாட்டுச் சாணத்தால் வரட்டி தட்டிவைத்ததைப்போன்று சுருங்கி காணப்படுகிறது.
நிறம்