பழனி மலைகோவில் கும்பாபிஷேகம் முதல்காலபூஜை தொடங்கியது.
பழனி தண்டாயுதபாணி சுவாமிமுருகன் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 27ஆம் தேதி நடைபெறுகிறது.
16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் கடவுள் முருகனின் மூன்றாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது பழனி முருகன் கோவில். போகர் சித்தர் உருவாக்கிய நவபாஷான மூலவர் சிலையான தண்டாயுதபாணியை வணங்கினால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாகவே லட்சக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து தண்டாயுதபாணியை வணங்கிச் செல்கின்றனர்.
பழனியில் போகர் சித்தர், புலிப்பாணி சித்தர் ஜீவசமாதிகளும் உள்ளதால் ஏராளமானோர் முருகனை வழிபட்டதோடு ஜீவ சமாதிகளையும் வழிபட்டு செல்கின்றனர். தைப்பூச திருவிழா, பங்குனி உத்திரம் என பிரசித்தி பெற்ற விழாக்கள் பழனியில் நடைபெறும்.
ஜனவரி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனால் பழனி மலைக் கோவில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு ஜனவரி 26ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
23.01.2023 திங்கட்கிழமை மாலையில் முதற்கால யாகம் தொடங்குகிறது. பழனி பாதவிநாயகர் கோவில் முதல் இரட்டை விநாயகர் கோவில் வரை உள்ள அனைத்து பரிவார சன்னதிகளிலும் 26ஆம்தேதி காலை 9.50 மணியில் இருந்து 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து ஜனவரி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதி, ரேவதி நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய காலை 8.30 மணியில் இருந்து 9.30 மணிக்குள் பழனி முருகன் கோவில் ராஜகோபுரம், தங்ககோபுரத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கும்பாபிஷேத்தை முன்னிட்டு மதுரை, திருச்சி, கோவை, திரூப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கபடுகிறது.
அருள்மிகு பழநிய தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழக்கு விழாவையொட்டி, அருள்மிகு சண்முகர் சன்னதி முழுவதும், ஒரு கோடியே பதினாறு லட்சம் ரூபாய் செலவில், கரூர் அரவிந்த் க்ரீன் இன்ஃப்ரா பிரைவேட் லிமிடட் மேனேஜிங் டைரக்டர் திரு.பாலசந்திரன் அவர்கள், வெள்ளி தகடுகளில் புதியதாக நகாஸ் வேலை செய்யப்பட்ட கவசத்தை காணிக்கையாக கொடுத்தார். இதனை அறங்காவலர் குழு தலைவர் திரு.க.சந்திரமோகன் அவர்கள் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டனர்.
தமிழகம்முழுவதும் ஒருலட்சம் வாசகர்கள் கொண்ட நமது ஆன்மிக மலர்.காம் ஆன்மிக மலர் டிரஸ்ட் சார்பில் பழனிதண்டாயுதபாணி கும்பாபிஷேகம் தைபூசம் சிறப்பு மலராக வரும் 27 ந்தேதி பழனிமலை முருகன் சிறப்புகள் அடங்கிய வண்ணபுத்தகமாகதமிழகம் முழுவதும் வெளிவருகிறது.
இதழ் தேவைப்படுபவர்கள் 9994323622, 9444228203 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.