logo
home ஆன்மீகம் பிப்ரவரி 13, 2024
சென்னையில் சித்தர்கள் குருபூஜை அன்னதான பெருவிழா நாளை நடைபெறுகிறது
article image

நிறம்

சென்னையில் வியாசர்பாடி பிவி நகர் மூன்றாவது தெருவில் பகவான் ஶ்ரீகுருதாத்தா சுவாமி ஆசியும் சித்தர்கள் குருபூஜை மற்றும் சிறப்பு அன்னதானமும் நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

அனைத்து சித்தர் பெருமக்களுக்காக செய்யப்படும் பூஜை இது, இந்த உலக வாழ்க்கையே வேண்டாம் என்று உதறி விட்டு மற்றவர்களுக்காக வாழ்ந்து ஆசீர்வாதம் வழங்கிக்கொண்டிருக்கும் சித்தர்களுக்கான நாளாக  நாளை புதன்கிழமை அன்று அவர் களுக்காக சிறப்பு பூஜையும், பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானமும் நடத்தப்பட உள்ளது.

இந்த அன்னதானத்தின் சிறப்பு எத்தனையோ பக்தர்களுக்கு இது ஒரு அரு மருந்து உடல் மற்றும் மன பினியை நீக்கி அனைத்து ஆன்மாக்களுக்கு பிரசாத மாக திகழ்கிறது. 

கர்மயோகி பகவான் ஸ்ரீ குரு தாத்தா சுவாமிகளின் சித்தர் பெருமக்களுக்கான குரு பூஜை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதி அனைத்து சித்தர் பெருமக்களுக்காக நடத்தப்படும் குரு பூஜை மற்றும் அன்னதான விழாவின் சிறப்பு இந்த கண்ணுக்கு புலப்படுகின்ற அனைத்தும் நிரந்திரம் இல்லாதவை என்று உணர்ந்து உலக வாழ்வை துறந்து எந்த சுயநலமும் இல்லாமல் பிறருக்காகவே வாழும் அந்த சித்தர் பெருமக்களை சிறப்பிர்க்கும் வகையில் இவ்விழா அமைந்திருக்கிறது. 

இந்த உலக வாழ்க்கையே உண்மை என்று எண்ணி துன்பத்தில் சிக்கித் தவிக்கும் அனைவருக்கும் சித்தர் பெருமக்களின் ஆசீர்வாதம் அவர்களுக்கு துன்பங்கள் நீங்கி நல் வழியை காட்டும்.

பல பிறவிகளில் நாம் செய்த பாவங்கள் புனித கங்கையில் நீராடினாலும், எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் தீராது. குரு பார்வை கோடி நன்மை என்று நாம் எல்லோரும் கேள்விப் பட்டிருப்போம் அதாவது ஒரு குருமார்களின் பார்வையே இவ்வகை பாவங்களை தீர்க்க முடியும்.

 

தன்னை அறிந்தவன் மனிதன் பிறரை அறிந்தவர் ஞானி அப்பேற்பட்ட ஞானியின் தரிசனம் நம் சகல தோஷங்களையும் நீக்கி நமது வாழ்வை நல்லபடியாக மாற்றிவிடும். இந்த அன்னதானத்தின் சிறப்பு என்னவென்றால் சித்தர் பெருமக்களின் ஆசீர்வாததுடன் கூடிய உணவை உண்ணுபவர்களுக்கு சகல விதமான உடல் மற்றும் மன பினி நீங்கி உணவே அறு மருந்தாக செயல்படுகிறது.

ஆன்மீக அன்பர்களும் பொதுமக்களும் வருகை தந்து சித்த பெருமக்களின் ஆசியை பெற்று அன்னதான விழாவினை சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

கர்மயோகி பகவான் ஸ்ரீ குரு தாத்தா சுவாமிகள் அவர்களின் தரிசனத்தை பக்தர்கள் எண். 160. 3ஆவது தெரு. B.V. காலனி, வியாசர்பாடி. சென்னை39.

மேலும் தகவல்களுக்கு அனுக வேண்டிய   80159 21657 .  9361917913  என்ற எண்களை தொடர்பு கொண்டு பக்தர்கள் பயன் அடையலாம்.