ஒவ்வொரு யுகத்திலும் கடவுள் பல அவதாரம் எடுப்பது வழக்கம், அப்படித்தான் கலியுகத்தில் அவதாரம் எடுக்க எண்ணினார் பெருமாள், அப்போது மகாலட்சுமியை உடன் அழைத்தார். ஆனால் மகாலட்சுமியோ, “திரோயுகம், துவாபர யுகங்களிலே உங்களுடன் எண்ணற்ற துன்பத்தை அனுபவித்து விட்டேன், அதுவும் மிகவும் கொடிய யுகமாகிய இந்த கலியுகத்தில் பிறந்து நான் அவஸ்தைப்பட தயாரில்லை’’ என்று கூறிவிட்டார். அந்த சமயத்தில் மகாவிஷ்ணுவிற்கு உதவி செய்தவள், பூமாதேவிதான் “சுவாமி என்ன கஷ்டம் வந்தாலும் தங்களுக்கு கைங்கர்யம் செய்ய நான் தயார்’’ என்று கூறி, ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில் பூலோகத்தில் ஆண்டாள் என்னும் திருநாமத்துடன் பிறந்தாள். பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து வந்த பெரியாழ்வாரிடம் மகளாக வளர்ந்த ஆண்டாள். கொடிய கலியுகத்திலும் தன் அவதாரத்திற்கு கைகொடுக்க வந்ததால் அவளை சிறப்பிக்க வேண்டும் என்பதற்காகவே, ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை தான் சூடிக்கொண்டு ஆண்டாளுக்கு முதலிடம் தந்தார் பெருமாள்.
நிறம்