
முருகப்பெருமானின் ஆறுபடை விட்டில் முதற்படையாக திகழும் திருப்பரங்குன்றம், மதுரைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராகும். இரண்டு படை வீடும் ஒரே ஊரில் அமைந்ததும் மதுரையின் சிறப்புகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது.
புராணங்களின் படி பார்த்தால், சூரபத்மனை வதம் செய்த பிறகு, முருகப்பெருமான் இந்திரனின் மகளான தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்ட தலம் திருப்பரங்குன்றம் ஆகும்.
இங்கு முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். சிவபெருமானைச் சத்தியகிரீசுவரராக / பரங்கிரீசுவரராக வழிபட்ட சிறப்பும் இத்தலத்திற்கு உண்டு.
இது ஒரு குடைவரைக் கோயிலாகவே திகழ்கிறது. முற்காலப் பாண்டிய மன்னர்கள் காலத்தில் (பொ.ஆ. 6-ஆம் நூற்றாண்டு வாக்கில்) பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயிலாக இது அறியப்படுகிறது.
இதற்கு பின்னரும் இந்த கோவில் பல வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. பிற்காலப் பாண்டியர்கள் மற்றும் நாயக்கர் காலங்களில் கோபுரங்கள், மண்டபங்கள் மற்றும் திருப்பணிகள் செய்யப்பட்டு விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
இந்த மலையில்சமணக் கற்படுக்கைகள் இன்றும் காணலாம், இம்மலையின் தென்புறப் பகுதியில் சமணர்களின் கற்படுக்கைகள் உள்ளது.
திருப்பரங்குன்றத்தை சங்க இலக்கியங்களிலும், திருமுருகாற்றுப்படை மற்றும் தேவாரப் பாடல்களிலும் சிறப்பித்து கூறப்பட்டுள்ளது.
இவ்வளவு சிறப்பு மிக்க இடத்தில் திடீர் பிரச்சனைக்கு காரணம் இந்துக்களின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையே இன்றி வேறு ஒன்றும் இல்லை.
பொதுவாக இந்தியாவை கொள்ளை அடிக்க வந்த முகலாயர்களும், வெள்ளையர்களும், முதலில் அழிக்கப்பார்த்தது இந்துக்களின் கலாச்சாரம், பண்பாட்டைத்தான்.
அந்த வகையில் இந்துக்கள் இருக்கும் கோவிலை ஆக்கிரமித்து மசூதி கட்டுவது, தர்கா கட்டுவது, போன்ற வேலையில் முகலாயர்கள் ஈடுபட்டனர்.
வெள்ளையர்கள் இந்துக்களின் புராணங்கள், வேதங்கள், இதிகாசங்களில் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தும் பல்வேறு இடைச் சொருகலைச் செய்தனர்.
குறிப்பாக முகலாயர்கள் எங்கெல்லாம் கோவில்கள் உள்ளதோ அங்கெல்லாம் கோவிலை ஆக்கிரமித்து மசூதி கட்டி தொழுகை நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அந்த வகையில் திருப்பரங்குன்றத்திலும் அவர்களின் செயல் தொடர்ந்தது.
- திருப்பரங்குன்றம் கோயில் வளாகம்: சுமார் 6 ஏக்கர்.
- இராஜகோபுரம் உயரம்: சுமார் 150 அடி (46 மீட்டர்), ஏழு நிலைகளைக் கொண்டது.
- மலையின் உயரம்: சுமார் 1,048 – 1,050 அடி (319 – 320 மீட்டர்).
- திருப்பரங்குன்றம் மலை நிலப்பரப்பு: சுமார் 172 ஏக்கர்
- 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்து முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்த இந்த மலையில் தர்க்கா கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு சாட்சியாக, தர்கா முகப்புக் கல்வெட்டில் 1805 என்ற ஆண்டு பொறிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் உள்ளன. மேலும், 18-ஆம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப் வேண்டுகோளுக்கினங்க, ஆங்கிலேயர்கள் இந்த இடத்தை இஸ்லாமியர்கள் பயன்படுத்த தாரைவார்த்ததாகவும் கூறப்படுகிறது. ஆங்கிலேயர் காலத்தில்தான் தற்போதைய அமைப்பு உருவானதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
- ஏற்கவே கோவில் மண்டபமாக இருந்த இடத்தை தர்காவாக மாற்றியதாகவும் கூறுகின்றனர், இதற்கு சாட்சியாக தர்கா அமைப்பு முழுவதும் கோவில் அமைப்பாகவே உள்ளது.
- தற்போதைய தர்கா கட்டிடமானது 1905-இல் இளையான்குடி மீராமுகையதீன் ராவுத்தர் என்பவரால் கட்டப்பட்டது.
- காலப்போக்கில் இந்த தர்க்காவிற்கே அந்த மலை சொந்தம் என்று இஸ்லாமியர்கள் தங்கள் சுய ருபத்தை காட்டத் தொடங்கியதால் வழக்கு தொடுக்கப்பட்டது.
- அதன்படி தர்கா அமைந்துள்ள 0.33 ஏக்கர் பகுதி நீங்கலாக, மலைப் பகுதி கோயிலுக்குச் சொந்தமானது என 2025-இல் சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
திருப்பரங்குன்றம் கோவிலைச் சுற்றி பல ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தும், இந்துக்களின் புனிதமாக கருதப்படும், முருகனின் ஆறுபடை வீட்டின் முதற்படை வீடான மலையில் தர்கா அமைத்தது ஏன் என்று அப்போது கேட்க இந்துக்கள் மறந்து விட்டதன் விளைவால் இன்று இந்துக்க நாட்டில் இந்துக்கள் வழிபாட்டிற்கு நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இன்று கோவிலுக்காக போராடுபவர்களை, இந்துக்களில் ஒரு சிலரே சங்கி என்று கூறுவது வெட்க கேடானது. இது நடுநிலைவாதிகளின் கேடுகெட்ட செயல்பாடாகவே அறியப்படுகிறது.
எந்த கோவிலும் மசூதியை ஆக்கிரமித்து கட்டப்படவில்லை, கோவிலை ஆக்கிரமித்துதான் மசூதிகள் கட்டப்பட்டுள்ளன, அதை மீட்க போராடும் அனைத்து இந்துக்களுக்கும் சங்கி என்ற பட்டத்தை வழங்குகின்றனர்.
குறிப்பு
மசூதிகளையோ... சர்ச்களையோ எந்த இந்துக்களும் ஆக்கிரமித்து கோவில் அமைப்பதில்லை... ஆனால், பழங்கால கோவில்களையும், வழிபாட்டு இடங்களையும் ஆக்கிரமித்து தங்கள் மதத்தை பரப்புபவர்களை ஆதரித்து, அதை எதிர்ப்பவர்களை சங்கி என்றும், மதவாதி என்றும் அழைக்கும் முட்டாள் கூட்டத்திற்கு சரி எது தவறு எது என்று தெரிவதில்லை.
வெள்ளைக்காரன் ஆட்சி நடத்தியபோது, இந்திய சுதந்திரத்திற்கு போராடியவர்களை தீவிரவாதிகள் என்று கூறினார்கள் போராடாத மக்கள், ஆனால் சுதந்திரம் அடைந்த பின் தீவிரவாதிகள் என்று அழைத்தவர்களை, சுதந்திர போராட்ட தியாகிகள் என்று கூறினர். இதுதான் நடுநிலைவாதிகளின் செயல்.
உதாரணத்திற்கு....
நடுநிலைவாதிகளின் வீட்டின் மொட்டைமாடி சும்மா இருக்கு என்பதால் அடுத்தவர் வந்து வீடு கட்டிக்கொள்ள அனுமதிப்பார்களா?
எங்கள் கோவில் எங்கள் உரிமை...
கடவுளை வணங்குபவன் மட்டும் பக்தன் அல்ல, கடவுள் இருப்பதான நினைக்கும் இடத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் அதற்கு குரல் கொடுப்பவன்தான் உண்மையான பக்தன்.
