அமைதியே நம் இயல்பான சுபாவம். அதனால் அமைதியைத் தேடி நாம் அலைய வேண்டியதில்லை. அமைதியை உபத்திரவப் படுத்தும் எண்ணங்களை ஒழித்தாலே போதும். மனித வாழ்க்கைக்கு அப்பால் என்ன இருக்கிறது என்பதற்கு விடைதேட பலரும் ஆர்வம் கொள்கிறார் கள். நிகழ்காலத்தில் முழுமையாக வாழ்வோம். எதிர்காலத்தைப் பற்றிய கவலை இப்போது வேண் டாம். எதிர்காலத்தை எதிர்காலமே கவனித்துக் கொள்ளும். மனிதன் எல்லாவற்றையும் தானே செய்வதாக எண்ணிக் கொள்கிறான். நம்மை மீறிய ஒரு சக்தியால் நாம் இயக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்துக் கொண்டால் எல்லாத் தொல்லை களிலிருந்தும் விடுபட்டவர்களாகி விடுவோம். விதிப்படி தான் வாழ்க்கை நடக்கிறது. வாழ்க்கை என்பது திட்டமிட்ட கணக்குப் போலத்தான். பாலன்ஸ் ஷீட் என்று சொல்வார்களே அதைப் போன் றது. இதை மாற்றினால் கணக்கு சரிப்பட்டு வராது. ஆண்டவனும் தான் ஏற்படுத்திய நியதியை யாருக் காகவும் எப்போதும் மாற்ற முன் வருவதில்லை. முற்பிறவியில் புண்ணிய வினைகளைச் செய்தவன் வாழ்வில் இன்பத்தை நுகர்ந்து மகிழ்கிறான். பாவ வினைகளை செய்தவன் துன்பத்தில் உழல்கிறான். நாமேதான் நமது பிரச்னைகளுக்கு மூலக் காரணம். எனவே நாம் யார், எந்த நிலையில் நாம் இருக்கிறோம் என்பதைப் புரிந்துக் கொண்ட பிறகு கடவுள் பற்றிய ஆராய்ச்சியில் இறங்குவது பலன் தரும். நாம் விரும்புகின்ற அனைத்தையும் கடவுள் நமக்கு நிச்சயம் அருள்செய்வார் என்ற நம்பிக்கை பூரணமாக ஏற்படும்போது நம்மை அவரிடம் முழுமையாக ஒப்படைப்போம். விதிப்படி வகுத்திருக்கும் வாழ்க்கையில், நன்மை களைப் பெற்றால் ஆர்ப்பரிக்காமல் அமைதியோடு இருப்பதற்காகவும் தீமை வந்தால் ஒரேடியாக துவண்டுப் போய் வருந்தாமலும், இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் காணும் மனநிலையை ஆன்மீகம் நமக்குக் கற்றுத் தருகிறது. பக்தியால் பக்குவம் பெற்றவர்கள் மனதில் சுகமோ கவலையோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதோடு வரவிருக்கும் அடுத்தடுத்த பிறவிகளுக்கு வினைச்சுமைகளை சேர்த்துக் கொள்ளாமல் காப்பாற்றுவதற்கும் பக்தித் துணையாக அமைகிறது. உண்மையான பக்தி தீமைகளிலிருந்து மனிதனைக் காப்பாற்றுகிறது.
நிறம்