logo
home தத்துவம் பிப்ரவரி 21, 2016
கடவுள், ஆசிரியர் மற்றும் கடவுளின் பக்தனுக்கு முன்னால் காலை நீட்டித் தூங்குதல் கூடாது: ராமானுஜர்
article image

நிறம்

நல்ல ஒழுக்கமும், உயர்ந்த பக்தியும் கொண்டவர் களிடம் இருந்து மட்டும் உணவைப் பெற்று மகிழுங்கள். ஒரு கடவுள் வணக்கமே மேலானது, பிற தெய்வங்களை வணங்குதல் பாவமாகும்.
கடவுளின் பக்தர்களுக்கு பணி செய்வதால் தான் கடவுளை அடைய முடியும் என்பதை உங்கள் இதயத்தில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
கடவுளுடைய பக்தர்களுக்குப் பணி செய்யத் தன் னையே எவன் தியாகம் செய்யாமல் இருக்கிறானோ, அவன் சிறந்தவனாக இருந்தாலும் அழிந்து விடுவான்.
தன் உறவினர்களை எப்படி நேசிக்கிறீர்களோ அவ் வாறே கடவுளின் பக்தர்களைப் பாடி மகிழ வேண்டும்.
காலையில் எழும்போது ஆன்மீகச் சொற்களை உச்சரித்துப் பழக வேண்டும்.
கடவுளுக்கு முன்னால், ஆசிரியருக்கு முன்னல் கடவுளின் பக்தனுக்கு முன்னால் காலை நீட்டித் தூங்குதல் கூடாது.
கோயில், விமானம், கோபுரம் ஆகியவற்றைக் கண்டதும் மரியாதையுடன் தலைவணங்குதல் வேண்டும்.
ஒருவனுடைய பிறப்பைப் பற்றியோ, தொழிலைப் பற்றியோ எண்ணாமல் அவனுடைய கொள்கை களைப் பின்பற்றி பணிவிடை செய்வதே மேலான தாகும்.