logo
home தத்துவம் ஜூலை 01, 2016
பொருள் நிதியை தேடுபவர் அருள்நிதியை நாடுவார்கள், அருள்நிதியை நாடியவர் பொருள்நிதியை தேடுவதில்லை
article image

நிறம்

அருள் நிதி, பொருள் நிதி, இவையிரண்டும் மனிதனின் உயிரும் , உடலும் போல இணைந்தே இருக்கும்.    ஒன்றை விட்டு ஒன்றில் பயணம் செய்ய பலரும் எண்ணம் கொண்டிருக்கலாம்.    இதில் எந்த ஒன்றும் இல்லாமல் பயணம் செய்வது என்பது. சுகமாகவோ , நிம்மதியாகவோ இருக்காது.   உலகம் முழுவதும் பொருள் நிதியைச் சுற்றியே இருப்பதால்     அதற்க்கென்று ஒரு தனி இடம் அமைக்க வில்லை.

அருள்நிதி மட்டும் நாம் தேட முற்படாததால் ஏதோ ஓரிடத்தில் அதை பாதுகாத்து வைக்க தனி இடம் அமைத்து வைத்தனர்.

பொருள். நிதியை பல காலம் தேடி , ஓடி சம்பாதித்து வைத்தப் பின்னர்  ஓயும் காலம்   என்று ஒன்று வரும் போது   இனி வேறு எந்த நிதியை தேடலாம் என்று முற்படும்போது    இதோ இங்கு ஒன்று இருக்கிறது, உன் வீட்டின் அருகிலேயே பல காலம் நீ வருவாய் என்று காத்திருந்த    அருள்நிதி      நம் முன்வினைப் பயனாய் நம் எண்ணத்தில் வந்து உதிக்க     நம் கால்கள் அந்த அருள்நிதி இடத்தைத் தேடி ஓடும், கைகளை குவிக்கும், குரல் தழுதழுக்கும், கண்களில் நீர் பெருக்கெடுக்கும் ,     நம் ஆன்மா லயப் படும்.    இது தான் ஆலயமா? என்று ஆச்சர்யப்பட வைக்கும்.   

இது தான் இறைவனின் சன்னிதியா என்பதை அறிந்துக் கொண்ட மறுகணம் பொருள் நிதிக்கும், அருள்நிதிக்கும் உள்ள வேறுபாடு புரியும்.

பொருள் நிதி தேடி ஓடியவன் இங்கு வருவான்     ஆனால் .அருள்நிதியில் உழன்றவன பொருள் நிதியை தேடி வருவதில்லை , வரவும் மாட்டான்.                                    

ஆலயத்தில் இறைவன் உறையும் இடத்தை" சன்னிதி " என்போம்.   ஆலயத்தில்   அருள்நிதி     மட்டும் கிடைப்பதில்லை. மேலும் சில நிதிகளும் கிடைப்பதால் தான் அதனை ("Some –  நிதி" ) சன்னிதி என்றனர்.


குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 

தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம் 
                              

www. aanmeegamalar.com 

எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com