காஞ்சி பெரியவர் ஒரு சமயம் கிராமத்தில் முகாமிட்டிருந்தார். அவரைப் பார்க்க ஒரு விவசாயப் பெண்மணி கால்கடுக்க நின்றிருந்தார். பெரியவரின் தரிசனம் கிடைத்தது.
பெரியவாள் எதிரில் கையைக் கூப்பிக்கொண்டு நின்றாள். நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது.
"என்ன வேலை பண்றே?" என்றார் பெரியவர்
"வயல் வேலைக்குப் போறேன் சாமி. ஆறு பசங்கள், மாமியா, எங்கிட்ட இருக்கு. காலையில் சோறாக்கி வெச்சுட்டுப் போயிடுவேன். இருட்டினப்புறம்தான் வீட்டுக்கு வருவேன். நான் எப்படி சாமியைக் கும்பிடறது? கோயிலுக்குப் போறது? உடம்பும் களைச்சுப் போவுது. சாமி கும்பிடவே நேரமில்லே, சாமி....." என்று பய பக்தியுடன் கூறினாள்
பெரியவாளின் திருக்கண்கள் கருணையால் நிரம்பியிருந்தன.
"சாமி கும்பிடணும்னு நினைக்கிறயே, அதுவே சாமி கும்பிட்ட மாதிரிதான்.!. காலையிலே சூரிய உதயம் ஆனவுடன், கிழக்கே சூரியனைப் பார்த்து ஒரு கும்பிடு போடு.சாயங்காலம் விளக்கு வெச்சவுடனே மேற்கு திக்குப் பார்த்து ஒரு கும்பிடு போடு. கடமை தொடர்ந்து செய்வதால் நீ கர்மயோகி. ஒரு விநாடி நேரம் தெய்வத்தை நினைச்சாலே போறும்-சகல புண்ணியமும் கிடைச்சுடும்..."
பெண்மணி கண்களை துடைத்துக் கொண்டாள்.
'சூரியனைக் கும்பிடு-சகல புண்ணியமும் கிடைச்சுடும்!'
என்ன, ஆறுதல்! என்ன,கருணை!. பெரியவாள் பலவகையான பழங்களை அந்தப் பெண்மணிக்குக் கொடுக்கச் சொன்னார்கள்.
குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்
தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம்
www. aanmeegamalar.com
எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com
நிறம்