logo
home தத்துவம் ஆகஸ்ட் 07, 2017
ஆன்மிக பாதையில் பயணிக்க விரும்பி விட்டால் எந்த பக்கத்திலிருந்தும் நம்மை வழி நடத்தும்
article image

நிறம்

தினம் ஒரு நினைவு , தினம் ஒரு கனவு. என நாளுக்கு நாள் மாறிக்கொண்டே செல்லும் நமது வாழ்க்கைப் பாதையில் ஆன்மீகம் பற்றிய குறுக்கீடும் வருகிறது..
சொல்லிக் கொடுத்தோ அல்லது நாமாகவோ தெரிந்து கொள்ள வேண்டிய . மைல்கல் அது.
வேகமாக செல்வதால் பலர் தவறவிடக் கூடும்.. ஆனாலும் அந்த மைல் கல்லின்றி எவர்க்கும் பிறவிப் பயணம் பூர்த்தியாவதில்லை, அது எல்லோரையும் கவனித்துக் கொண்டே இருக்கும். தான் இருக்கும் இடத்தை தேடி வருவோர்க்கு பிறவிப்பயணம் இன்னும் எத்தளை தூரம் என்று சுட்டிக் காட்டும்.
சிலர் கண்களில் படாமல் மறைந்துமிருக்கும். ஒரு சிலர்க்கோ வழிகாட்டியேத் தீரும்.
பயணிக்க விரும்பாதவர்க்கு தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாது. பயணிக்க விரும்பி விட்டால் எந்த பக்கத்திலிருந்தும் நம்மை வழி நடத்தும்.
அது அதற்குரிய தனித்தன்மையோடு என்றும் சிறப்புற்றிருக்கும்.
மனிதர் வாழ்வில் ஆயிரம் குறுக்கீடுகள். வரலாம், வரும். ஆனால் ஆன்மீக குறுக்கீடு என்பது தனி ஒரு மனிதனின் தனித்துவம்.
அந்த தனித்துவத்தை வெளிப்படுத்தி காட்டத் தான் இந்த நீண்ட போராட்டம் பல ஆண்டுகளாக பல ஜாம்பவான்களை கொண்டு அரங்கேறிக் கொண்டே இருக்கிறது.
குறுக்கீடுகளும் நன்மை தருவதாய் இருப்பதால் தான் அங்கும் இங்குமாய் ஆன்மீகப் பயணம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது . Thali ph:09600999279 குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நமது இணையதளம் மூலம் வெளிவரும் ஆன்மிகமலர்.காம் மாதம் இருமுறை இதழை இலவசமாக பெற உங்கள் இ-மெயில் முகவரியை aanmeegamalar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும் மேலும் விவரங்களுக்கு ஆசிரியர் பக்கத்தை பார்க்கவும்.