இறைவனை இன்னதென்று துல்லியமாக சுட்டிக்காட்டும் தகுதி மனிதர்கள் யாருக்கும் இதுவரை இல்லை. உலக வரலாற்றில் எத்தனையோ ஞானிகள் யுக புருஷர்கள் இன்றுவரை தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இறைவனைப் பற்றி சொன்னார்கள். அப்படி அவர்கள் சொன்னது, அவர்கள் அறிந்த ஒரு சிறு பகுதியை மட்டும் தான். அவர்கள் அறியாமல் விட்டிருக்கும் பகுதியோ இன்னும் ஏராளம். யானையைத் தொட்டுப் பார்த்த குருடர்கள், தூண் என்றும் பானை என்றும் முறம் என்றும் பாம்பு என்றும் வித விதமாகச் சொன்னது போல், இறைவனை உணர்ந்த ஞானிகள் தனது அனுபவத்தை மட்டுமே சொல்ல முடிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். அறிவுக்கெல்லாம் அறிவாக, மூலத்துக் எல்லாம் மூலமாக இருக்கும் இறைவனை, உண்டு என்று சொல்வதற்கான தகுதியும், இல்லை என்று சொல்வதற்கான தகுதியும் இன்னும் எந்த மனிதனுக்கும் இல்லை என்பதே என் கருத்து. எனவே இறைவனை.. இறைவனின் தன்மையை.. இறைவனின் ஆட்சியை.. இறைவனின் அன்பை முழுவதுமாக உணருவதற்கு நமது ஆயுள் காலம் அனைத்தையும் அற்பணித்து பாடுபடுவோம். நமக்கு இறைவன் மனிதப் பிறவியை தந்திருப்பதன் இரகசியமே அவனை அறிந்து கொள்ள உழைப்பதற்காகத்தான். எனவே நமது சின்னஞ்சிறு கரங்களைக் கொண்டு, விண்ணுக்கும் மண்ணுக்குமாக எழுந்து நிற்கும் விஷ்வ ரூபியான வாசு தேவ கிருஷ்ணனை அறிந்து கொள்ள பாடுபடுவோம். யோகி ஸ்ரீ ராமானந்த குரு மேலும் தொடர்பு கொள்ளவும் போன்: 9442426434
நிறம்