logo
home பலன்கள் நவம்பர் 23, 2018
கார்த்திகை முழுவதும் வீடுகளில் விளக்கேற்றி யாகம் செய்த புண்ணியம் பெறுங்கள்
article image

நிறம்

எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும். கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும். தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உதயதிற்கு முன்) மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை (சூரிய உதயதிற்கு பின்). கார்த்திகை தீபத் திருநாளில், திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய பிறகு, அனைத்து வீடுகளிலும் ஏற்றுவது வழக்கம். இத்தனை தீபங்கள்தான் ஏற்றவேண்டும் என்ற எண்ணிக்கை உண்டு. ஒவ்வொரு இடத்திற்கும் இத்தனைதான் ஏற்ற வேண்டும் என்ற வரைமுறையும் உள்ளது. கோலமிடப்பட்ட வாசலில் ஐந்து அகல் விளக்குகள் ஏற்ற வேண்டும். திண்ணைகளில் 4 அகல் விளக்குகள் ஏற்ற வேண்டும். மாடங்களில் 2 அகல் விளக்குகள் ஏற்ற வேண்டும். நிலைப்படியில் 2 அகல் விளக்குகள் ஏற்ற வேண்டும். நடையில் 2, முற்றத்தில் 4 அகல் விளக்குகள் ஏற்ற வேண்டும். இந்த முறையில் விளக்குகளை ஏற்றினால், மகாலட்சுமி நிரந்தரமாக குடி இருப்பாள் என்பது ஐதீகம். எத்தனை முக தீபம் என்ன பலன்: ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும். இரு முகம் ஏற்றினால் – குடும்ப ஒற்றுமை கிட்டும். முன்று முகம் ஏற்றினால் – புத்திரதோஷம் நீங்கும். நான்கு முகம் ஏற்றினால் – பசு, பூமி, செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும். ஐந்து முகம் ஏற்றினால் – சகலநன்மையும், ஐஸ்வர்யம் பெருகும். விளக்கேற்றும் திசையின் பலன்: கிழக்கு – துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி. மேற்கு – கடன், தோஷம் நீங்கும். வடக்கு – திருமணத்தடை அகலும். தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது (மரணபயம் உண்டாகும்).-