logo
home பலன்கள் ஜூன் 19, 2020
சூரிய கிரகணம் 2020 சாஸ்திர விளக்கமும், கொரானா அழியும் என்ற ஆராய்ச்சியாளர் வாதமும்
article image

நிறம்

இந்திய நேரப்படி சூரிய கிரகணம் ஜூன் 21 அன்று காலை 9.15 மணிக்கு தொடங்கி மதியம் 2:30 மணிக்கு முடிவடையும். கிரகணம் உச்சம் அடையக் கூடிய நேரம் நண்பகல் 12:18 மணி. இந்த சூரிய கிரகணம் காலை 9.15 மணிக்கு தொடங்குகிறது.மிதுன ராசியில் உள்ள மிருகஷீரிடம் நட்சத்திரத்தில் ஏற்படுகிறது. சூரிய கிரகணம் இந்தியாவில் மட்டுமல்லாமல் மத்திய ஆபிரிக்க குடியரசு, காங்கோ, எத்தியோப்பியா, பாகிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட ஆப்பிரிக்காவிலும் தெரியும். சாஸ்திரப்படி கிரகண காலத்தில் செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும் 1. சூரிய கிரகணம் ஏற்படுவதற்கு நான்கு யாமத்துக்கு, அதாவது 12 மணி நேரத்துக்கு முன்பும், சந்திர கிரகணத்துக்கு முன்பு மூன்று யாமத்துக்கு, அதாவது 9 மணி நேரத்துக்கு முன்பும் உணவு உட்கொள்வதை நிறுத்திவிடவேண்டும். 7 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 70 வயதுக்குட்பட்ட பெரியவர்களுக்கு அந்த விதியில்லை. முடியாதவர்கள் திரவ உணவுகளை உட்கொள்ளலாம். கிரகண காலத்துக்கு முன் சமைத்த உணவுகளை கிரகணத்துக்குப் பின் உண்ண வேண்டாம் என்கின்றன சாஸ்திரங்கள்.
2. நீர், வேகவைக்காத உணவுப் பொருள்களில் ஓரிரு தர்ப்பை புல்லைப் போட்டுவைக்க வேண்டும். இவை கிரகண தோஷம் ஏற்படாதவாறு தடுக்கும்.
3. கிரகண நேரத்தில் உறங்கக் கூடாது.
4. கிரகணத்தை நேரடியாகக் கண்ணால் காணக் கூடாது. இன்று அறிவியலாளர்களும் இதே கருத்தைச் சொல்கிறார்கள்.
5. கர்ப்ப ஸ்திரிகள் சூரியக் கிரணங்கள் மேனியில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
6. கிரகணம் தொடங்கும்போதும் முடிந்த பின்னும் கட்டாயம் குளிக்க வேண்டும்.
7. கிரகண காலத்தில் தர்ப்பணங்கள் செய்வது விசேஷம். தகப்பனார் இல்லாதவர்கள் இந்த நேரத்தில் தர்ப்பணம் செய்வதன் மூலம் அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுபடுவர். பிறப்பு, இறப்புத் தீட்டு இருப்பவர்களும் கிரகணத்தின்போது தர்ப்பணங்கள் செய்யலாம்.
8. கிரகண நேரத்தில் இறைவனை ஸ்தோத்திரம் செய்ய வேண்டியது அவசியம். இந்தக் காலத்தில் ஒரு முறை செய்யும் மந்திர ஜபம் பன்மடங்கு பலனைத் தரும் என்கிறது சாஸ்திரம். எனவே, அமைதியாக அமர்ந்து ஜபம் செய்ய வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் தனிமையில் அமர்ந்து இறைவனின் நாமத்தை சொல்லிக்கொண்டிருப்பது கருவில் இருக்கும் குழந்தைக்கு மிகவும் நன்மை பயக்கும்.
9. கிரகண நேரத்தில் தானம் அளிப்பது மிகவும் நன்மை பயக்கும். சூரிய கிரகணத்தின்போது கேதுவுக்குப் பிரியமான தானங்களை அளிப்பது விசேஷம். கோதுமை, கொள் அல்லது உளுந்து, தேங்காய், பழம் ஆகியவற்றைத் தானம் செய்வது நல்லது.
10. கிரகணம் எந்த நட்சத்திரக்காரர்களைப் பாதிக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப பரிகாரம் செய்வது அவசியம்.
சூடாமணி க்ரஹணம். வாக்ய(பாம்பு)பஞ்சாங்கப்படி க்ரஹண ஆரம்பம் 10 22 Am. க்ரஹண மத்யமம் 11 59 Am. க்ரஹண மோக்ஷம் 1 42 Pm. தர்ப்பணம் செய்யும் நேரம். 10 30 Am முதல் 12 00 Pm வரை. ஸ்நானம் தாநம் ஜபம் ஹோமம் யாவும் க்ரஹணகாலம் முழுவதும் செய்யலாம்.
ஆனி ( மிதுன ) மாத க்ருஷ்ண பக்ஷ ப்ரதமை திதி ச்ராத்தம் 21/06/2020.ஞாயிறன்று க்ரஹணம் முடிந்தவுடன் செய்ய வேண்டும்.
ரோகினி. மிருகஷீரிஷம்,திருவாதிரை, சித்திரை, அவிட்டம்.ஆகிய நக்ஷத்ரம் உடையவர்கள் (ஸ்நானம் தாநம் ஜபம் செய்து) பரிஹாரம் செய்து கொள்ள வேண்டும். 20/06/2020 இரவு 10மணிக்குள் எல்லோரும் சாப்பிட்டுவிட வேண்டும். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எந்த நியமமும் கிடையாது. கர்ப்பிணிப்பெண்கள். (சர்க்கரை வ்யாதி. ரத்தகொதிப்பு. தவிர) வ்யாதியுள்ளவர்கள் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் இவர்கள் யாவரும் தேவைப்பட்டால் பால் அருந்தலாம்.க்ரஹணகாலத்தில் இதுவும் இல்லாமல் இருப்பது நலம்.
க்ரஹணம் முடிந்தவுடன் மோக்ஷ ஸ்நானம் கட்டாயம் அனைவரும் செய்ய வேண்டும். க்ரஹண காலத்தில் சொல்ல வேண்டிய ச்லோகம். இந்த்ரோநலோ தண்டதரஸ்ச ருக்ஷ: ப்ரசேதஸோ வாயு குபேர ஈச: । மஜ்ஜன்ம ருக்ஷே மமராசி ஸம்ஸ்த்தே ஸூர்யோபராகம் ஸமயந்து ஸர்வே.।।
அறிவியல் அறிஞர்கள் கருத்து
2020 ஜூன் மாதம் வரவிருக்கும் சூரிய கிரகணத்தை இந்தியா மட்டுமல்ல உலகமே தற்போது எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது. தற்போது உலகை ஆட்டிப்படைக்கும கொரானா வைரஸ் கிருமி கடந்த சூரிய கிரகத்தின் போது ஏற்பட்டதாகவும், அந்த கொடிய வைரஸ் நோய்க் கிருமி வரப்போகும் சூரிய கிரகணத்தின் போது சக்தி இழக்க வாய்ப்புள்ளதாகவும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கையாக உள்ளது. சென்னையைச் சேர்ந்த Drகே எல்.சுந்தர்கிரிஷ்ணா, சென்னை [போன்+91 89399 02019] கூறும்போது “சென்னையில் வசிக்கும் நான் உலகளவில் அனுபவம் மிக்க ஒருஅணு விஞ்ஞானி. பல நாடுகளில் அணு உலைகளை ஆய்வு செய்திருக்கிறேன். செர்னோபில் உட்பட கிட்டத்தட்ட 750 அணு உலைகளை நான் பார்த்திருக்கிறேன். இபோதும் சில நாடுகளுக்கு நான் கன்சல்டன்டாக இருக்கிறேன். கொரோனா பூமியின் காற்று மணடலத்தில் உலகெங்கும் பெருகி வளரும் ஒரு வைரஸ். இது உலகளாவிய செயல்பாடு. உங்களுக்கு நினைவிருக்கும், டிசம்பர் 2019ல் பல கோள்கள் ஒரே நேர்க் கோட்டில் வந்த விஷயம். அதனுடைய தாக்கம்தான் இது. அப்போது நாம் இதுபற்றிப் பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளவில்லை. இது எப்படி நடைபெறுகிறது என்றால் இது ஒரு விதமான நியுட்ரான்கள் மூலம் ஏற்படும் வைரஸ். இது காற்றுமண்டலத்தில் லட்சம் கோடிகளில் பெருகி பயோ ப்ரோடீன் கூறுகளில் நுழைந்து பூமியின் மேற்பரப்பில் பல மடங்கு விரிவடைந்து காற்றில் வருகிறது. இதை எந்த மருந்தாலும் சரி செய்ய முடியாது. வரும் ஜூன் 21 அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டு அதனுடைய நிழல் பூமியின் மீது விழுந்து பூமியை மறைக்கும் போது இந்தக் கொடிய வைரஸ் தானாகவே மறையக் கூடிய தன்மை வாய்ந்தது. அந்த கிரஹணம் முடிந்து பூமியின் மீது விழும் சூரியனின் புத்தொளி இந்த வைரஸை செயலிழக்க வைக்கும். ஜூன் 21க்குப் பிறகு சுத்தமாக மறைந்து விடும். இது நடக்கும் என்று நிச்சயம் நான் நம்புகிறேன். இதையேதான் நாசாவில் விஞ்ஞானியாக வேலை செய்யும் அனுபவம் மிக்க என்னுடைய நண்பரும் உறுதியாக நம்புகிறார். அதற்குப் பிறகு எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். கொரோனாவால் பல பாதிப்புகள் ஏற்பட்டாலும் பல நல்ல விஷயங்களும் நடந்துள்ளது. இது விஷயமாக என்னுடன் பேச விரும்பினால் நான் தயாராக இருக்கிறேன்.” என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கையை பிரதமர் அலுவலத்திற்கும் தான் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.