இரும்பை தங்கமாக்கலாம் , வானத்தில் மறையலாம் என்ற எந்த பெரியவிதமான சாதனைகளும் நம்மிடம் கிடையாது. மக்களுக்கு ஏற்படும் நோய்களை சித்தர்களின் வழியில் எளிதாக குணப்படுத்தலாம் வெறும் வாய்ப்பேச்சோடு நில்லாமல் ஆதாரப்பூர்வமாக பல உண்மைகள் உங்கள் முன் வைக்கப்படுகின்றன .
வெறும் மாயாஜால வேலைகளை செய்தவர்கள் அல்ல சித்தர்கள், மனித குலம் தழைக்க வேண்டிய பல அரிய மருத்துவ முறைகளை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றனர்.
பல் வலிக்கு பத்தே நிமிடத்தில் தீர்வு
இன்றும் பலரும் பல்வலியால் ( Pain Killer ) மாத்திரைகளை பயன்படுத்துவதை பார்த்திருப்போம். ஆங்கில மருந்தைவிட வேகமாக நிவாரணம் அளிக்க இயற்கை மருந்தைப் பற்றி சொல்கிறோம்.
எந்தப் பல்லில் வலி இருக்கிறதோ அந்தப்பகுதியில் வாயினுள் சர்க்கரை வைத்துவிட்டு, 18 மிளகு- ஐ நன்றாக அரைத்து (அல்லது பொடி செய்து) கால் டம்ளர் தண்ணீரில் விட்டு காய்ச்ச வேண்டும். காய்ச்சிய நீரை சிறிது நேரம் ஆற வைத்து விரல் சூடு தாங்கும் அளவிற்கு வந்ததும், வெளியே வலி இருக்கும் கண்ணத்தின் பகுதியில் இந்த நீரால் நன்றாக தேய்க்க வேண்டும். இதனை செய்து பத்தே நிமிடத்தில் பல் வலி இருந்த இடமே தெரியாமல் மறைந்து விடும். இது கை கண்ட மருந்து. பயன் பெறுங்கள்.
குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்
தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம்
www. aanmeegamalar.com
எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com
நிறம்