logo
home மருத்துவம் நவம்பர் 05, 2018
முக அழகை அதிகரிக்கும் பிராணாயாமம்
article image

நிறம்

ஒருசிலரை பார்க்கும்போது சற்று அழகு இல்லாதவர் போல இருப்பார்கள் ஆனால் அவர்களிடம் அனைவரும் நட்புடன் பழகுவர், அதே சமயம் சற்று அழகானவராக ஒரு சிலர் இருப்பார்கள் ஆனால் அவர்களிடம் நெருங்க சிலர் தயக்கம் காட்டுவர். இதற்கு என்ன காரணம் என்று நாம் பலமுறை சிந்தித்திருப்போம். அழகு, கவர்ச்சி, வசீகரம் என்பது நாம் பார்க்கும் பார்வையில் அல்ல. இது முழுக்க முழுக்க பிராண சக்தியை அடிப்படையாக கொண்டது என்பது தான் உண்மை. அனைத்து ஜீவராசிகளும் பிராண சக்தியை கொண்ட ஜீவர்கள் தான். ஆனால் ஒரு சிலவற்றிற்கு பிராண சக்தி குறைவாகவும் ஒரு சிலவற்றிற்கு பிராண சக்தி அதிகமாகவும் இயற்கையிலேயே அமைந்த ஒன்று. எது எப்படி இருந்தாலும் பிராண சக்தி நிறைந்த உயிரினங்கள் அனைத்தையும் அனைத்து உயிரினங்களும் விரும்பும், அவற் றுடன் நட்பு கொள்ள ஏங்கும் இது தான் உண் மை. அது உலக அழகியானாலும் சரி உள்ளூர் கிழவி ஆனாலும் சரி பொருந்தும். மயிலாக இருந்தாலும் குயிலாக இருந்தாலும் பொருந்தும். முயல் ஆனாலும் பன்றி அனாலும் பொருந்தும். ஒருசில வளர்ந்த உயிரினங்களை அவ்வளவாக யாருக்கும் பிடிப்பது இல்லை. அவை என்னதான் நாகரீகமாக இருந்தாலும் அதை பெரும்பாலும் வெறுப்பாகவே பார்ப்பார்கள். ஆனால் அதே உயிரினம் பிறந்த சில மாதங் கள் வரை, சில வருடங்கள் வரை அநாகரீகமாக நடந்து கொள்ளும் அசிங்கமான உயிரினங்களாக இருந்தாலும் அதை ஆவலுடன், ஆசையுடன் பார்க்கவும் தோனும். இதற்கு காரணம் அந்த குட்டியின் பிராண சக்திதான். அந்தக் குட்டியின் பிராண சக்தி அனைவரையும் ஈர்க்கும். பிறந்த குட்டிக்கு பிராண சக்தி அதிகமாக இருப்பது தான். அவைகளே வளர்ந்த பின் அனைவராலும் வெறுக்க படுவதற்கு காரணம் அவைகள் வளர்ந்த உடன் அதிகமாக சிந்திக்க துவங்கி விடுவது தான். இது மனிதர்களுக்கும் பொருந்தும், பிறந்த குழந்தையாக இருக்கும்போதும், சற்று வளர் இளம் பருவம் வரை குழந்தைகள் ரசிப்பதற்கு உகந்தவர்களாக இருப்பார்கள், ஆனால் சற்று வயது முதிர்வு ஏற்பட ஏற்பட அவர்களை வெறுக்கவும் வைக்கு. அதற்கான காரணம். வளரும்போது ஆசைகள், கோபம், குரோதம், வஞ்சம், பதட்டம் போன்றவை உருவாக காரண மாகி பின் பிராண சக்தியை பாதிக்கும் மேல் குறைத்து விடுகிறது. அதனால் தான் அசிங்க மாகவும் அவலட்சணமாகவும் நோய் நொடிகள் கண்டு துன்புற வேண்டி உள்ளது. பிராண சக்தி நிறைந்தவர்கள் ஆரோக்கிய மானவர்கள், சுரு சுருப்புள்ளவர்கள், அறிவாற்றல் மிக்கவர்கள், மற்றவர் களை கவரும் தன்மையை உடையவர்கள். மற்ற வர்களால் அழகானவராக பார்க்கப்படுவார். இதையெல்லாம் புரிந்து கொள்ளாத நம் மக்கள் அழகு நிலையம், கண்ட கண்ட க்ரீம் களை தடவி முகத்தை கெடுப்பது, ஹேர் டை அடிப்பது அலங்காரம் என்ற பெயரில் தம்மை கெடுத்து கொள்கின்றனர். நீங்கள் எவ்வளவு அசிங்கமாக இருந்தாலும், கருப்பாக இருந்தாலும் மூச்சு பயிற்சி செய்யுங்கள் நீங்களும் அழகாகலாம் அனைவராலும் விரும்ப படுவீர்கள் இது நிச்சயம் அதை விடுத்து நான் கருப்பு, நான் அசிங்கமானவன், அசிங்கமானவள் என்று உங்களை நீங்களே தாழ்த்தி கொள்ள வேண்டாம். ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் அனைவரும் முடிந்தவரை பிராணாயாமம் செய்யுங்கள், இந்தப் பிராணாயமத்தின் அற்புத சக்தி உங்களை மிகுந்த அழகாக மாற்றும்.