logo
home ஆன்மீகம் ஜனவரி 23, 2016
சிலை இல்லாத ஐயப்பன் கோவில்
article image

நிறம்

ஐயப்பன் என்றாலே பத்மாசன நிலையில் அமர்ந்த சிலை தான் சிறப்பு. ஆ„ல், மஞ்ஜப்புரா அம்பாடத்து மாளிகா என்ற திருக்கோவிலில் சிலையே இல்லாமல் இருக்கிறது. இக்கோயில் கேரளமாநிலம் எர்‚குளம் அருகிலுள்ள காலடி என்ற ஊரில் உள்ளது. ஐயப்பனின் வளர்ப்புத்தந்தையான பந்தளராஜாவுக்கு உதயணன் என்ற திருட„ல் தொந்தரவு இருந்தது. தன் மகன் ஐயப்பனிடம், ராஜா இதுபற்றி சொன்„ர். ஐயப்பன் உதய ணனை அழிக்கச்சென்ற போது, அம்பலப்புழா மற்றும் ஆலங்காட்டு ராஜாக்கள் தங்கள் படையுடன் அவருக்கு உதவியாகச் சென்றனர். அன்றுமுதல் அவர்களது குடும்பத்தினர் ஐயப்பனின் நெருங்கிய நண்பர்களாயினர். இதன் பிறகு ஐயப்பன், சபரிமலைக்கு புறப்பட்டார். சபரிமலைக்கு செல்லும் பாதையை சீரமைக்கும்படி அம்பலப்புழா மற்றும் அம்பாடத்து மாளிகா குடும்பத்தினரிடம் விளக்கி„ர். உடனே அம்பலப்புழா குடும்பத்தினரும், ஐயப்பனின் நண்பரான வாபரும் எருமேலி வழியாக சபரிமலைக்கு செல்லும் பாதையை சீரமைத்தனர். இதுவே ‘பெரிய பாதை’ எனப்படுகிறது. இதன்பிறகு, ஐயப்பனும், அம்பாடத்து மாளிகை குடும்பத்தினரும் சபரிமலை சென்றனர். அங்கு பரசுராமர் ஸ்தாபித்த சாஸ்தா சிலையில், ஐயப்பன் ஜோதி ஸ்வரூபமாக ஐக்கியமாகி விட்டார். அன்றிலிருந்து ஆண்டுதோறும் பெரியபாதை வழியாக அம்பலப்புழா, அம்பாடத்து மாளிகை குடும்பத்தினர் முதலில் செல்வர். அத்துடன் பெரியபாதையில் திருவாபரணப்பெட்டி செல்லும் போது அம்பலப்புழா குடும்பத்தினர் வழி ஏற்படுத்தி கொடுக்க, அம்பாடத்து மாளிகை குடும்பத்தினர் திருவாபரணப்பெட்டியுடன் செல்கின்றனர். அம்பாடத்து மாளிகா குடும்பத்தை சேர்ந்த கேசவன் பிள்ளை என்பவர் ஆண்டுதோறும் சபரிமலை சென்று வந்தார். வயதான காலத்தில் இவர் சிரமப்பட்டு மலையேறும் போது, அந்தணர் ஒருவருடன் ஓரிடத்தில் தங்க நேர்ந்தது. அவர் கேசவன் பிள்ளையிடம் ஒரு வெள்ளிமுத்திரையுடன் கூடிய தடி, விபூதிப்பை மற்றும் ஒரு கல் ஆகியவற்றை கொடுத்து விட்டு, ‘இதோ வருகிறேன்’ என கூறி சென்ƒர். ஆ„ல், திரும்பி வரவில்லை. கேசவன் பிள்ளை ஐயப்பனை தரிசித்து விட்டு, மீண்டும் ஊர் திரும்பி„ர். அப்போது, அந்த அந்தணர் அவரை சந்தித்து, """"நான் கொடுத்த மூன்று பொருள்களையும் பூஜித்து வாருங்கள்,"" எனக் கூறிவிட்டு மாயமாகி விட்டார். அவ்வாறு அந்தணராக வந்தது ஐயப்பனே என இவர்கள் கருதுகின்றனர். இந்த மூன்று பொருள்களையும் வைத்து, அவற்றை ஐயப்ப„க கருதி பூஜித்து வருகின்றனர். இந்தக்கோயிலைத் தினமும் திறப்பதில்லை. சபரிமலையில் நடை திறக்கும் மாத பூஜை உள்ளிட்ட நாட்களில் மட்டும், காலை 5- 1 மணி, மாலை 5- 8 மணி வரை நடை திறந்திருக்கும். பெண்களுக்கு அனுமதி உண்டு.