logo
home ஆன்மீகம் பிப்ரவரி 03, 2016
தீராத மனக்குழப்பமா? எளிதாக தீர சந்திரன் வழிபாடு ஒன்றே அரிய மருந்து
article image

நிறம்

தட்சனின் இருபத்தி ஏழு பெண்களையும் சந்திரன் திருமணம் செய்து கொண்டான். திருமணத்தின் போது அனைத்து பெண்களிடமும் அன்புடன் இருக்க வேண்டும் என்று தட்சன் சந்திரனிடம் உறுதி வாங்கினான். ஆனால் சந்திரன் ரோகிணியிடம் மட்டும் அதிகமான அன்பு காட்டினான். அதைக்கண்ட மற்ற பெண்கள் தட்சனிடம் சென்று முறையிட்டனர். இதனால் கோபம் கொண்ட தட்சன், சந்திரனை ‘தேய்ந்து போவாய்’ என்று சாபம் கொடுத்தான். தேய்ந்து கொண்டு வந்த சந்திரன் கடைசியில் சிவபெருமானிடம் தஞ்சமடைந்தான். அவனுக்கு அடைக்கலம் கொடுத்த சிவபெருமான், சந்திரனை தலையில் எடுத்து வைத்து கொண்டார். அதனால் சாபம் பாதியாக குறைந்தது. அதாவது பாதி நாட்கள் வளர்வதும், பாதி நாட்கள் தேய்வதுமாக மாறினான் சந்திரன். இப்படி தான் வளர்பிறை, தேய்பிறை உருவானது. இவ்வாறு சந்திரனை சிவபெருமான் திருமுடியில் அமர்த்தியது சோமவாரத்தில் தான். 14 ஆண்டுகள் சோமவாரம் பூஜை செய்யும் கணவன்– மனைவிக்கு, முக்தி பேற்றினை கொடுக்க வேண்டும் என்று ஈசனிடம் வேண்டினான் சந்திரன். அவனது விருப்பத்தை சிவபெருமான் நிறைவேற்றினார். ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்து அல்லது பகை கிரஹத்துடன் இருந்தால், மனக்குழப்பம் அதிகம் இருக்கும். அவ்வாறு அமைந்தவர்கள், பௌர்ணமி அன்று சந்திரனை தரிசித்து வணங்கி, ஓம் சந்திராய நமஹ என்று ஒன்பது முறை சொல்வது நல்லது. மேலும், சந்திரனுக்குரிய பச்சரிசியில் சாதம் வடித்து, தானும் சாப்பிட்டு, தன்னைச் சார்ந்தவர்களும், தான் வளர்க்கும் விலங்குகளுக்கும் அளித்து சாப்பிடச் சொல்வது நல்லது. திங்கட்கிழமை தோறும் செய்யலாம்!. முக்கிய விரத நாட்களில் விரதம் இருந்தால் நம் மனம், ஆன்மா, உடல் ஆகியவை சுத்தம் அடைகின்றன. விரதம் இருந்தால் மன அமைதி கிடைக்கும். விரதம் இருக்க பல முறைகள் உள்ளன. ஒரு வேளை மட்டும் உணவு அருந்தி இருப்பது, நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது, நீர், பழரசங்கள், பழங்கள், மட்டும் அருந்தி விரதம் இருப்பது என பல முறைகள் கடை பிடிக்கப்படுகின்றன. இவற்றை கடைப்பிடிப்பதாலும் மன அமைதி, நிம்மதி கிடைக்கும்.