logo
home ஆன்மீகம் பிப்ரவரி 21, 2016
கடுந் தவத்தால் உருவான, சிவலோகத்தை பாதுகாக்கும் நந்திபகவான்
article image

நிறம்

பலகாலமாகியும் சிலாது முனிவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை, பல வித வழிபாடு நடத்தியும் குழந்தை பாக்கியம் கிடைக்காததால், திருவையாறில் புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். அவர் யாகம் செய்துக்கொண்டிருந்த வேளையில் அசரீரி “யாகம் முடிந்தவுடன் பூமியில் கிடைக்கும் பெட்டகத்தில் ஒரு ஆண்குழந்தை இருக்கும். ஆனால் அந்த குழந்தை 16 வருடங்கள் மட்டுமே உயிர்வாழும்’’ என்று சொன்னது. அசரீர் சொன்னது போலவே யாகம் முடிந்ததும் பூமிக்கடியில் ஒரு பெட்டகம் கிடைத்தது. அதில் ஒரு ஆண் குழந்தையும் இருந்தது. அக்குழந்தைக்கு செப்பேசன் எனப் பெயரிட்டு வளர்க்கத் தொடங்கினர். குழந்தை வளர, வளர சிலாது முனிவருக்கு கவலை அதிகமானது. குழந்தைக்கு 14 வயது ஆகும் போது, சிலாது முனிவரின் கவலை மேலும் அதிகரித்து கவலையில் மூழ்கத் தொடங்கினார். தன் தந்தையின் கவலைக்கு காரணம் கேட்க, நடந்ததை சிலாது முனிவர் கூறினார். உடனே தன் தந்தைக்கு ஆறுதல் கூறினான் செப்பேசன், பின் திருவையாறில் உள்ள ஐயாறப்பர் கோவில் குளத்துக்குள் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்ய ஆரம்பித்தான், இவ்வாறு ஒற்றைக்காலி கடுமையாக தவமிருப்பதைகண்ட சிவபெருமான், சக்தியுடன் காட்சி தந்தார், மேலும் சிவலோகத்தை பாதுகாக்கும் பொறுப்பையும் தந்தார், அவருக்கு நந்திகேஸ்வரர் என்ற திருநாமத்தையும் சூட்டினார்.