உண்மையான நவரத்தினங்களை இனம் காண்பது எப்படி என தெரிந்துக்கொள்வேம்.... பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அகத்தியர் தனது “அகத்தியர் வாகடம்” என்ற நூலில் நவமணிகளின் தரம் அறிவது குறித்து விவரித்திருக்கிறார். நம்மில் சிலருக்கு நவரத்தின கற்கள் வாங்குவதற்கு தயக்கம் இது உண்மையாத எனக் குழப்பம்..சரி இனி கிழே உள்ள சில குறிப்புகளில் பரிசோதித்த வாங்க முயற்சி செய்யுங்கள் முத்து :- நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும். மரகதம் :- கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும். பச்சைக்கல் :- குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும். வைரம் :- சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது. பவளம் :- உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும். கோமேதகம் :- பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும். புஷ்ப ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும். வைடூரியம் :- பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும். நீலக்கல் :- பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும். அகத்தியரின் பாடல்களில் இருந்து தொகுக்கப் பட்டுள்ள இந்த விவரங்கள் மிக அரிதானவை, இனி வரும் நாட்களில் நீங்களும் இதை பயன்படுத்தி கற்களின் தரம் அறியலாம். - கோபாலன்..
நிறம்