
நம் நாட்டில் விநாயகரை வழிபடும் போதும். அவசியம் தோப்புக்கரணத்தை போடுவது அவசியம். தோப்புக் கரணம் என்பது ஒரு வகையில் ஒரு வகை பயிற்சிதான், இதனால் விநாயகருக்கு எந்த வகையிலும் பலன் கிடையாது, தோப்பு கரணம் போடும் நமக்குத்தான் பல வழிகளில் பலன் சேருகிறது. அவ்வாறான பலன்கள் தோப்புக்கரணத்தின் பயன்கள் மூளைசெல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. நாடிகள் சுத்தம் பெறுகின்றன. நம் உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சேருமிடம் காது மடல்கள். தோப்புக்கரணம் செய்யும் போது காது மடல்களை இழுப்பதால் அனைத்து நரம்புகளும் தூண்டப்படுகின்றன. இத்தனை பெருமை மிகுந்த தோப்புக்கரணத்தை செயல்படுத்தும் முறையை பார்ப்போம். முதலில் கால்களுக்கு இடையில் ஒரு ஜான் அளவு இடவெளி விட்டு நிற்க வேண்டும். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக்கொண்டு. மூச்சை இழுத்துக்கொண்டே அமரவும் அமர்ந்த நிலையில் ஒரு மூச்சு விட்டு. பிறகு எழ வேண்டும் இப்பொழுது நின்ற நிலையில் ஒருமூச்சு விட வேண்டும். இவ்வாறு பத்து முறை தினமும் செய்தால் மாற்றம் உங்களுக்கே தெரியும். இவ்வாறு மனித உடலுக்கு பல நன்மை அளிக்கும் இதை ஆன்மீகத்தோடு தொடர்பு படுத்தியதன் விளைவாகத்தான் இன்றைக்கும் விநாயருக்கு முன் தோப்பு கரணம் போடுவது வழக்கமாக உள்ளது. இதையே பள்ளிக்கூடங்களில் தண்டனை என்ற பெயரில் மாணவர்கள் புத்துணர்வு பெற செய்யப்படுகிறது. இதனை நம் முன்னோர்கள் பல வருடங்களுக்கு முன்னமே நமக்கு காட்டியுள்ளார்கள், தற்போது மேலை நாடுகளில் தோப்புக்கரணம் போடுவதற்கு பல்வேறு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது.