logo
home ஆன்மீகம் மே 27, 2016
யோகிகள், முனிவர்கள் மட்டுமல்ல, இல்லறத்தாரும் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்து வகை யாகங்கள்
article image

நிறம்

சித்தர்களும், யோகிகளும் பல்வேறு யாகங்கள் செய்து தவ வலிமைகள் பெற்றனர். முற்கால அரசர்களோ பல யாகங்கள் செய்து தங்கள் இராஜ்ஜியங்களையும், படை வலிமைகளையும் பெறுக்கிக் கொண்டனர். இன்றைய அரசியல் தலைவர்களும் பல்வேறு வித யாகங்களை செய்த வண்ணம் உள்ளனர், ஒரு சிலர் மக்களுக்கு தெரியாமல் மறைவாகவும், ஒரு சிலர் மக்களுக்கு தெரிந்தும் செய்து வருகின்றனர், மேலும் இதுபோன்று யாகங்கள் பல்வேறு வகையில் பயன்பட்டாலும் யாகத்தால் பெறுதற்கரிய பிறவிப் பேறும் பெற முடியும். வாழ்க்கையில் யோகிகள் மட்டுமல்ல, இல்லறத்தாரும் கடைப்பிடிக்க வேண்டிய சில யாகங்கள் உண்டு. இல்லறத்தில் வாழும் ஒவ்வொரு வரும் தினமும் செய்யவேண்டிய 5 வித யாகங்களை கீழ்க் கண்டவாறு பெரியோர்கள் வகுத்துள்ளனர். 1.தேவயாகம், 2.பூத யாகம், 3.மனித யாகம், 4.பிரம்ம யாகம், 5.பிதுர் யாகம். தேவ யாகம்: ஒவ்வொருவரும் தினம் ஏதாவது ஒரு தெய்வத் திருமேனியைத் தரிசித்து வணங்க வேண்டும். பூத யாகம்: ஒவ்வொருவரும் தினமும் ஒரு பிராணிக்கு (பசு, பூனை, காகம், நாய், எறும்பு, குருவி, குரங்கு, பட்சி ஆகிய ஏதாவது ஒர் உயிரினத் துக்கு) ஒருபிடி உணவு அளிக்க வேண்டும். மனித யாகம்: தினமும் ஒரு ஏழை மனிதனுக்கு உணவளித்து வாழ்தல் மனித யாகம். பிரம்ம யாகம்: அறிவை கொடுத்த ஆசானையும் ஞானம் கொடுத்த ரிஷியையும், தெளிவை கொடுத்த பெரியவர்களையும் மதித்து நடப்பது பிரம்ம யெக்கியமாகும். பிதுர் யாகம்: நம்முடைய காலஞ்சென்ற மூதாதையர்களுக்கு அர்ப்பணம் செய்தல், தீபம் ஏற்றல் முதலியவற்றைத் தவறாமல் செய்வது பிதுர்யாகம். மேற்கண்டவை இல்லத்தார் தினமும் கடைபிடிக்க வேண்டிய 5 வித யாகங்களாகும். இந்த ஐந்து யாகத்தையும் எந்த செலவும் இல்லாதுயார்வேண்டுமானாலும் செய்யலாம். இந்த எளிய யாக முறையை நமது பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுப்பதனால் ஒழுக்கம் என்பது அவர்களுடன் கூடவே வளரும் இதனால் குடும்பத்தில் அமைதி நிலவும், அடிக்கடி சண்டை சச்சரவு போன்றவை மறைந்து போகும்.