logo
home ஆன்மீகம் ஜனவரி 05, 2019
நவீன காலத்து அரக்கர்கள், சபரிமலைக்கு போராடும் அனைவரும் தேவர்களே
article image

நிறம்

பழுத்த மரத்தில் கண்டிப்பாக கல் அடி இருக்கும். இந்த வகையில்தான் இந்து மதத்திற்கு எதிராக பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு விதமான சிறு கற்கள் என்ற எதிரிக் கூட்டம் உருவாகி, கடைசியில் உருவான இடம் தெரியாமல் அழிந்தும் போய்விடுகிறது. இச்சம்பவம் புராண காலம் தொட்டே நடைபெற்று வருகிறது. நல்ல சக்திகளை தேவர்கள் என்றும், தீய சக்திகளை அசுரர்கள் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. கிருதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் போன்ற யுகங்களில் இந்துக்களுக்கு எதிராக, “நான்தான் கடவுள்” என்ற கோட்பாட்டுடன் அரக்க சக்தி மட்டுமே உலாவி வந்தது. ஆனால் தற்போதைய யுகமான கலியுகத்தில் விஞ்ஞானம், நாகரீகம், மற்றும் இந்துமதக் கொள்கையை ஆணிவேராகக் கொண்ட பிறமதங்கள், கடவுள் மறுப்பு கொள்கைக்காரர்கள் போன்றோர். இந்த அரக்க ரூபத்தைக் கொண்டு இந்து மதத்தை எதிர்க்க விழைந்துள்ளனர். இந்த நிலை தற்போது இந்தியாவில் வேகமாக பரவுகிறது. இதில் தற்போது மிகவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் சபரிமலை பிரச்சனை... இப்பிரச்சனையை ஆராய்வதற்கு முன் ஜப்பானில் நடைபெறும் ஒரு சம்பத்தை பார்ப்போம். ஜப்பான் நாட்டில் ஒகினொஷிமா தீவு ஒன்று உள்ளது. இங்கு உள்ள கோவிலில் ஷிண்டோ பூஜாரி மட்டுமே. வருடத்தில் 2மனி நேரம், அதுவும் 200 ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.. ஓரு பெண் கூட உள்ளே செல்ல முடியாது. இதற்க்கு unesco நிறுவனம் உலக பாரம்பரிய அங்கீகாரம் கொடுத்து உள்ளது. அதுபோன்று உலகில் பல்வேறு மசூதிகளில் பெண்கள் நுழைவதை தடை செய்துள்ளனர். தற்போது விஷயத்திற்கு வருவோம். இதுபோல பெண்களை தடை செய்துள்ள கோயில்கள் பல உலகில் உள்ளது. இந்த வகையில் சபரிமலை ஐயப்பன் சன்னதி ஒருவிதசக்தி வாய்ந்த தலமாகும், இத்தலத்தில் பெண்களை முற்றிலும் தவிர்க்கவில்லை, குறிப்பிட்ட வயது பெண்களை மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்து பெண்களும் இதை ஏற்று ஐயப்பனின் பக்தர்களாகவே உள்ளனர். ஆனால் இந்து மத சம்பிரதாயத்தை சீரழிக்கவும், பாரம்பரியத்தை அழிக்க வேண்டும் என்றும் நினைக்கும் ஒரு கூட்டம் இந்து சமயத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, சபரிமலை தீர்ப்பை வழங்கிய ஐந்து நீதிபதிகளில் இருந்த ஒரே பெண் நீதிபதி கூட சபரிமலைக்கு எதிரான தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆனால் ஆண் நீதிபதிகள் ஏன் தேவையில்லாமல் மத சம்பந்தமான விஷயத்தில் முரண்பட்டனர் என்பது அந்த ஐயப்பனுக்கே வெளிச்சம். ஆனாலும் இந்த தீர்ப்பு இந்து மதத்திற்கு எதிரான தீர்ப்பு என்பதை தெரிந்தும், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த, முதல்வராக இருக்கும் பினரயி விஜயன் விடாப்பிடியாக வீம்பாக பெண்களை வலு கட்டாயமாக சபரிமலைக்கு அழைத்துச் செல்ல பாடுபடுவது வேதனைதான். ஏற்கனவே இஸ்லாமிய மதப் பெண்ணை சபரிமலைக்கு, பல ஆயிரம் காவலர்கள் துணையுடன் மலையேற்ற அனுமதி வழங்கி, ஐயப்ப பக்தர்களின் தீவிர எதிர்ப்பால் திருப்பி அனுப்பப்பட்டார். கேரளாவில் எத்தனையோ பிரச்சனைகள், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், போன்றவை நிலவி, மக்கள் அமைதி இழந்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் தலையாய பிரச்சனைகள் இருக்கும்போது. அதை சரிசெய்ய நேரம் ஒதுக்காமல், இந்து மதத்தைச் சிதைக்க ஐயப்பனிடம் பெண்ணை அனுப்பும் ஒரே தொழிலை மட்டும் செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவது ஏன் என்பது தெரியவில்லை. இதற்கு மாற்று மதத்தினர் துணை நிற்பது வேதனையிலும் வேதனை, வெள்ளைக் காரர்களை முழுமையாக நம்பிய மக்களை அந்த கொள்ளைக்கார வெள்ளைக்காரன் அடிமைப்படுத்தியதை போன்று, சகோதர பாசத்துடன் பழகிய மாற்று மதத்தினர் தற்போது வெளிப்படையாக இந்து மதத்திற்கு எதிராக களம் இறங்கியுள்ளது இந்துக்களின் முதுகில் குத்தும் செயல். ஆடையில் கூட பெண்களுக்கு விடுதலை கொடுக்காமல் இருக்கும் மதத்தைச் சேர்ந்தவர்கள், தற்போது பெண் சுதந்திரம் என்ற பெயரில் சபரிமலைக்கு எதிராக களம் இறங்குவது சகோதர எண்ணத்தைத் தவிடுபொடியாக்குகிறது. இந்தியாவில் எழுத எத்தனையோ பிரச்சனைகள் இருக்க, ஒரு சில ஊடகங்கள், இந்து மதத்திற்கும், இந்து தலைவர்களுக்கும் மட்டுமே எதிரான செய்தி வெளியிட்டுவருவது வெட்கக் கேடான செய்திகளாக உள்ளது. இதற்கெல்லாம் முட்டு கொடுப்பது போன்று வெளிநாட்டு பத்திரிக்கையான பி.பி.சி., கூட இந்து மதத்தை அழிக்கும் பணியில் தங்களை முழுவதுமாக ஈடுபட்டு இந்திய மொழிகளில் தவறான செய்தியை வெளியிட்டு வருகிறது. கேரளாவில் இந்த செய்தி சேனலைச் சேர்ந்த மதத்தவர்கள் செய்த (பல பெண்கள் கற்பை சூறையாடிய மத போதகர்களின்) அட்டுழியங்களை தோலுறித்து காட்டவில்லை, தமிழகத்தில் வயதானவர்களை கொன்று அவர்களின் உடல் எலும்பை பொடியாக்கி கடத்திய செய்தியை வெளியிடவில்லை. ஆனால் இந்து மதத்திற்கு எதிரான செய்தி என்றவுடன் அல்வாவை சாப்பிட்டதைப்போன்று விழித்துக் கொண்டு செயல்படுவது வேதனைதான். இந்து மதம் இதுவரை பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துள்ளது. அந்த வகையில் தற்போது இந்து மதக் கொள்கைகளை சீரழிக்கும் எண்ணம் கொண்ட ஒருசிலரால் அது தற்போது நடைபெற்று வருகிறது. கலியுகத்தில் இதுபோன்ற சம்பவம்நடைபெறும் என்று வேத காலத்திலேயே நமது முன்னோர் வகுத்து கூறியுள்ளனர். எக்காலத்திலும் இந்துமதக் கொள்கையையும் இந்து பாரம்பரியத்தையும் கடைப்பிடித்து வந்த தேவர்களுக்கும், இதற்கு எதிராக செயல்பட்டுவந்த அசுரர்களுக்கும் தொன்று தொட்டே நடைபெற்று வந்ததைப் போன்ற நவீன காலத்து சண்டைதான் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் இறுதியில் நன்மையின் பக்கம் இருக்கும் தேவர்களே வெல்வார்கள். தற்போது தேவர்களாக செயல்பட்டு, இந்து மதத்திற்கு ஆதரவாக போராடும் அனைத்து இந்து மதக் கொள்கை கொண்ட தேவர்களுக்கும் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். ஐயனின் பொறுமைக்கும் எல்லை உண்டு. சாதுமிரண்டால் காடு கொள்ளாது. அவசியம் நம் மதத்திற்கும் பாரிம்பரியத்திற்கும் எதிராக செயல்படும் அரக்கக் கூட்டத்தை ஐயப்பன் வேறொடு அழிப்பார்.