logo
home ஆன்மீகம் மே 29, 2016
ருத்ராட்சத்தை எப்படி அணிய வேண்டும்? ருத்ராட்சத்தை பயன்படுத்த வேண்டிய வழிமுறைகள்
article image

நிறம்

சிவபெருமான் கண்களில் இருந்து உருவானது, ஆதலால் இதனை அணிபவரை தன் கண் போல சிவபெருமான் காப்பார் என நம்பப்படுவது. சிவபெருமானின் அருட்கொடையான இந்த ருத்ராட்சம் பற்றி சிவபுராணத்தில் இதன் மகிமை விரிவாக விளக்கப்பட்டுள்ளது. ஒரு முகம் முதல் இருபத்தியொருமுகம் வரை கொண்டது, அனைத்து முக ருத்ராட்சங்களின் அரசனாக ஒரு முக ருத்ராட்சமே கருதப்படுகிறது. ருத்ராட்சத்தை சிகப்பு கயிற்றில் கட்டி கழுத்தில் அணியலாம். அல்லது தங்க சங்கிலியிலும் – வெள்ளி சங்கிலியிலும் கழுத்தில் அணியலாம். ஆனால் கறுப்பு கயிற்றில் கட்டக் கூடாது. ருத்ராட்சத்தின் மேல் பக்க முகம் பிரம்மா. கீழ்ப்புறம் விஷ்ணு. நடுப்பகுதி ருத்திரன் என்கிறது சாஸ்திரம். அதனால் ருத்ராட்சம் அணிந்தால் முப்பெரும் தெய்வங்களின் ஆசியும் கிடைக்கும். ருத்ராட்சத்தை நன்றாக கவனித்து தரம் உள்ளதாக பார்த்து வாங்க வேண்டும். முள் இல்லாதவையாக இருக்க வேண்டும். பூச்சி அரித்தவையாக இருக்கக் கூடாது. பிளவும் இருக்கக் கூடாது. முதன் முறையாக ருத்ராட்சம் அணிபவர்கள், சிவபெருமானின் பாதத்தில் வைத்து ஆசி பெற்று அணிந்தால் நன்மை. ருத்ராட்சம் அணிந்து பூஜை செய்தால் இன்னும் கைமேல் பலன் கிடைக்கும். நெல்லிகாய் அளவு கொண்ட ருத்ராட்சம் மிகவும் உயர்ந்த பலனை தரும். இலந்தை பழ அளவு ருத்ராட்சம் மத்திமம். கடலை அளவுள்ள ருத்ராட்சம் அதமம். ருத்ராட்சத்தால் சிவலிங்கத்தை அலங்கரித்தால், அவர்களுக்கு பல நன்மைகள் ஏற்படும். ஸ்ரீலஷ்மி கடாக்ஷம் கிட்டும். பித்ருதோஷம் நீங்கும். தலைமுறை தலைமுறைக்கு இன்னல் இல்லா வாழ்க்கை அமையும். சிவன் தந்த ருத்ராட்ச்தை அணிபவர்கள் ருத்ர சொரூபமாகவே மாறி விடுகிறார்கள். வேலனுக்கு வேலாயுதம் போல, எந்த ஆபத்தான சமயத்திலும் நம்மை காக்கும் குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www. aanmeegamalar.com எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com