
				இறைவன், வேதம், வேதோத்தமமான கர்மா, வேத வித்துக்கள் இந்த நான்கும் ஒன்றே என்பர்.        ஜீவன் பூமி வந்ததும் முதலில் அவன் தேடுவது தன் தலைவனையே .ஆனால் தாய் பாலூட்டி நீ தேடியது இதைத்தான் என்று பாதை மாற்ற முற்பட்டாள். ஜன்ம வாசனையை தாயின் நெஞ்சம் மறைத்தது.     சில கால பயணம்     ஏதோ ஒன்று நம்மிடம் இல்லாதிருப்பது போன்ற ஒரு மனநிலையால் தேடத்துவங்குகிறோம்.   அதுவே பகவான் என்று கண்டறிந்து கண்ணீர் சொரிகிறோம்.             
அடையும் வழியை ஆராய முற்பட்ட போது வேதவித்துக்கள் காட்டிய வேதம் எனும் ஊரை சேர்ந்தோம்.  பகவானை அறிந்து, வேதவித்துக்களை கண்டு வேத ஊரையும் அடைந்தோம். அருகில் செல்ல முடியவில்லையே ஏன்? வேதோத்தமமான கர்மா (வேதம் சொல்லும் செயல்கள் ). மீதமுள்ளது .        
நாமே நமக்குத் தெரிந்த ஏதோ ஒரு செயலை செய்து பலனை பெறுவதற்கு ஆன்மீகம் ஒன்றும் Fast Food அல்ல. அது Taste food .    ஏற்க்கனவே ருசிப் பார்த்தவர்களின் அனுபவங்களைக் கேட்டு கொண்டு அவர்களின் பாதையில் சென்றால் மிக விரைவில் அடையலாம்.  ரிஷிகள் தன் ஞானதிருஷ்டியால் உலகெங்கும் இறைந்து கிடப்பதை,  பெற வேண்டிய வழியை .வேதோத்தமமான செயலாய் செய்யும்படி அறைகூவல் விடுத்தனர். அந்த செயல்களை வேதவித்துக்கள் மூலம் அறிவோம். நான்கும் தள்ளித் தள்ளி நிற்பது போல் இருக்கும்.    அது ஒவ்வொன்றின் தொடர்ச்சியே. அன்றி வேறில்லை.    சுருக்கமாக தர்மத்தை நோக்கிய பாதையில் , தர்மம் செய்பவரைக் கொண்டு தெளிந்து .தர்மத்தை சரண் அடைந்ததும் தர்மத்தின் காவலன்  நம் முன் வருவான்.
நன்றி: Thali + 91 96009 99279:
குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 
தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம்                            
