
சோழ நாட்டின் கருவூரில் பிறந்த கருவூர்ச்சித்தர், துள்ளி விளையாடும் பருவத்திலேயே ஆர்வத்துடன் ஞான நூல்களைக் கற்றார். கருவூராரின் பெற்றோர் ஊர் ஊராகச் சென்று, ஆங்காங்குள்ள கோவில்களில் விக்ரகங்கள் செய்து கொண்டு வாழ்ந்தார்கள். ஒரு சமயம் போகர் திருவாவடுதுறைக்கு வந் தார். அதையறிந்த கருவூரார் அவரைச் சென்று வணங்கி தம்மை அவருடைய சீடராக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார். “கருவூராரே! உன் குல தெய் வம் அம்பாள், தினந் தோறும் அவளை வழிபடு, அவள் உனக்கு வழிகாட்டுவாள்” என்று கூறி வழிபாட்டு நெறிகளை கருவூராருக்கு உபதேசித்தார். போகர் உபதேசப்படி, கருவூரார், உள்ளம் உருகி அம்மனை வழிபட ஆரம்பித்தார். போகரின் வாக்கு பலித்தது. கருவூரார் சித்துக்கள் புரியும் ஞானவானாக உயர்ந் தார். கருவூரார் சித்தர் பூசை முறைகள்: தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி பக்தியுடன் கோலமிட்டு, அதன்மேல் கருவூரார் சித்தர் படத்தை வைத்து அதன் முன் மஞ்சள் குங்குமம் இட்டு அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பின்னர் துளசி, மல்லிகைப் பூ ஆகியவற்றைக் கொண்டு பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். பதினாறு போற்றிகள்: 1. சிவனே போற்றி! 2. சிவனைப் பூசிப்பவரே போற்றி! 3. நாடி யோகியே போற்றி! 4. ஒளி பொருந்தியவரே போற்றி! 5. அவதார புருசரே போற்றி! 6. இந்திராதி தேவர்களுக்கு பிரியரே போற்றி! 7. லோக சேம சித்தரே போற்றி! 8. நடராசரைப் பிரதிட்டை செய்தவரே போற்றி! 9. யோக மூர்த்தியே போற்றி! 10. ஓம் கம் நம் பீஜாட்சரத்தை உடையவரே போற்றி! 11. கற்பூரப் பிரியரே போற்றி! 12. வேண்டிய வரம் அளிப்பவரே போற்றி! 13. வெட்டை வெளியில் வசிப்பவரே போற்றி! 14. பூவுலகில் சஞ்சரிப்பவரே போற்றி! 15. கருவைக் காப்பவரே போற்றி! 16. ஞானத்தை அளிக்கும் கருவூர் சித்தர் சுவாமியே போற்றி! போற்றி! இவ்வாறு நிவேதனமாக பச்சைக் கற்பூரம் போட்ட சர்க்கரைப் பொங்கலை வைக்க வேண்டும். பின் உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூறி வேண்டவும். நிறைவாக தீபாராதனை செய்யவும். இவர் நவக்கிரகங்களில் சனீஸ்வர பகவானை பிரதிபலிப்பவர். இவரை முறைப்படி வழிபட்டால், 1. ஜாதகத்தில் உள்ள சனி தோசம் நீங்கி நன்மை கிடைக்கும். 2. ஏழரைச் சனி, அட்டமச் சனி, கண்டச் சனியால் ஏற்படும் கோளாறுகள் அகலும். 3. வாகனத்தால் ஏற்படக்கூடிய விபத்துகள் நீங்கும். 4. இரும்பு விவசாயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். 5. போக்குவரத்து துறையில் உள்ளவர்களுக்கு உண்டான பிரச்சினகள் அகலும். 6. படிப்பில் உள்ள மந்த நிலை மாறும். 7. எதிலும் வெற்றி கிடைக்காமல் தடை ஏற்படக்கூடிய நிலை மாறும். 8. எலும்பு சம்பந்தமான கோளாறுகள் அகலும். 9. பிரம்மஹத்தி தோசம் அகலும். 10. புத்திர பாக்கியம் கிடைக்கும். 11. வேலையாட்கள் முதலாளிகளுக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகள் அகலும். இவரை வழிபட சிறந்த கிழமை: சனிக்கிழமை. இவருக்கு கருநீல வஸ்திரம் அணிவித்து வழிபடுதல் விசேஷம்.