விநாயகர் 12 அவதாரங்கள் எடுத்ததாக விநாயக புராணம் என்ற நூல் கூறுகிறது. இந்தவகையில் விநாயரை வணங்கும்போது இவரின் 12 பெயர்களை கூறி வழிபட்டால் 12 அவதாரங்களின் பலன் கிடைக்கும். விநாயகரின் 12 அவதாரங்களைப்பற்றி பார்ப்போம். வக்ரதுண்ட விநாயகர்: இவர் உலகம் ஒவ்வொரு முறை அழியும் போது தோன்றி, மீண்டும் உலகத்தை படைப்பதற்கான வழிமுறைகளை பெருமாள், பிரம்மா, ருத்ரன் (சிவவடிவம்) ஆகியோருக்கு அருளுவார். கஜானனபவிநாயகர்: சிந்தூரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக அவதரித்தவர். விக்கிரனபராஜர்: காலரூபன் என்ற அரக் கனை கொல்வதற்காக பிறந்தவர். மயூரேசர்: பிரம்மாவிடம் இருந்த வேதங்களை கமலாசுரன் என்ற அசுரன் திருடிச்சென்றபோது மயில் வாகனத்தில் சென்று அவனை வென்று வேதங்களை மீட்டவர். உபமயூரேசர்: சிந்தாசுரன் என்ற அசுரன் தேவர்களை சிறை வைத்தபோது அவனை அழித்தவர். பாலச்சந்திரர்: தூமராசன் என்ற அசுரனை கொன்றவர். சிந்தாமணி:கபிலர் என்ற முனிவரிடம் இருந்த சிந்தாமணி என்ற அற்புத பொருளை கனகராஜன் என்பவன் திருடிச் சென்றான். உயிர்காக்கும் இந்த சிந்தாமணியை அவனிடமிருந்து மீட்டவர். கணேசர்: பலி என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தியபோது, 5 முகத்துடன் தோன்றி அவனை அழித்தவர். கணபதி: கஜமுகாசுரனை வென்றவர். மகோற்கடர்: காசிராஜன் என்ற புகழ்பெற்ற அரசனுக்கு நராந்தகன், தேவாந்தன் என்ற கொடியவர்கள் துன்பம் செய்து வந்தனர். இதனால் உலகத்தில் தர்மம் அழிந்தது. அவர்களை நாசம் செய்ய அவதரித்தவர். துண்டி: துராசதன் என்ற அசுரனை வென்றவர். வல்லபை விநாயகர்: மரீச முனிவரின் மகளான வல்லபையை திருமணம் செய்தவர். இதைத் தவிர்த்து விநாயகரை 32 விதமான மூர்த்தங்கள் பெற்று விளங்குகிறார். அந்த மூர்த்தங்களின் பெயர்களைப் பற்றி பார்ப்போம். 1. பால கணபதி 2. தருண கணபதி 3. பக்தி கணபதி 4. வீர கணபதி 5. சக்தி கணபதி 6. துவிஜ கணபதி 7. சித்தி கணபதி 8. உச்சிட்ட கணபதி 9. விக்ன கணபதி 10. க்ஷிப்ர கணபதி 11. ஏரம்ப கணபதி 12. லட்சுமி கணபதி 13. மஹா கணபதி 14. விஜய கணபதி 15. நிருத்த கணபதி 16. ஊர்த்துவ கணபதி 17. ஏகாட்சர கணபதி 18. வர கணபதி 19. திரயாக்ஷர கணபதி 20. க்ஷிப்ரபிரசாத கணபதி 21. ஹரித்திரா கணபதி 22. ஏகதந்த கணபதி 23. சிருஷ்டி கணபதி 24. உத்தண்ட கணபதி 25. ரணமோசன கணபதி 26. துண்டி கணபதி 27. துவிமுக கணபதி 28. மும்முக கணபதி 29. சிங்க கணபதி 30. யோக கணபதி 31. துர்க்கா கணபதி 32. சங்கடஹர கணபதி
நிறம்